Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள ஆனி மாதம்: அடுத்த 1 மாதம் உங்க ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
Aani Matha Rasi Palan 2025: ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்த மிதுன ராசியில் ஜூலை 16 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த ராசியில் சூரியன் நுழைந்ததால், தமிழ் மாதமான ஆனி மாதம் பிறந்துள்ளது. மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த சூரியன் பெயர்ச்சி சற்று சிறப்பு வாய்ந்தது. இந்த பெயர்ச்சியால் சூரியன் வலுவாக இருப்பார். இதன் விளைவாக தன்னம்பிக்கை, தொடர்பு திறன் போன்றவை அதிகரிக்கும்.

மாணவர்கள், வணிகர்கள், அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள ஆனி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் தொடர்பு திறன், எழுத்து, பேச்சு, குறுகிய பயணங்கள் போன்றவற்றில் தாக்கம் காணப்படும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். கழுத்து மற்றும் தோள்பட்டையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறப்பான பலனைப் பெற பொறுமையின்மை மற்றும் எரிச்சல் படுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை பாதிக்கப்படும். வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும், வாய் மற்றும் பல் பிரச்சனைகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இருப்பினும், அதிகப்படியான ஈகோ மற்றும் சுயநல நடத்தை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். இக்காலத்தில் உங்களின் ஆளுமையும், வசீகரிக்கும் அழகும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கழுத்து, தொண்டைகளில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். முக்கியமாக பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு அல்லது பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இக்காலத்தில் பொறுமை மிகவும் அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நட்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் மற்றும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கனவுகள் நனவாகும். காதல் உறவுகள் மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் உடல் சூடு பிரச்சனையால் சற்று அவதிப்பட வாய்ப்புள்ளதால், அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிக்கான கதவுகள் திறக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் கண்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இருந்தாலும் மன அழுத்தம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஏதாவது ஒரு விஷயத்தால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் சவாலானதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். சொத்து விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் இதயம் மற்றும் அந்தரங்க பகுதி ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வணிகர்கள் ஒப்பந்தங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டு சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும், மன ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியிருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் போட்டிகளில் சிறந்து செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். வீட்டு வேலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதனால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் உறவுகள் வலுவடையும். படைப்புத் தொழிலில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள். புதிய பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க தியானம், உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் குடும்ப தகராறுகள் அதிகரிக்கும். வீட்டு வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோரின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். மனம் சற்று அமைதியிழந்து இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications