Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ஆடி மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் உச்சத்தை அடையப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Aadi Month Rasi Palan 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கப்போகிறது. இந்த ஆடி மாதமானது சூரியன் கடக ராசிக்கு செல்லும் போது பிறக்கும்.
2025 ஆம் ஆண்டின் ஆடி மாதம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த ஆடி மாதத்தில் சனி வக்ரமாக இருப்பதோடு, செவ்வாய் கேதுவை விட்டு பிரிந்து கன்னி ராசிக்கும், குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் நிகழவுள்ளது. இப்படி கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் ஆடி மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் சாதகமான மாற்றங்களை காணவுள்ளனர். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி, நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது ஆடி மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆடி மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இதுவரை பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதுவும் ஆடி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் காணக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் தொழிலில் இருந்த தடைகள் விலகும். அதுவும் செவ்வாயும், கேதுவும் பிரிந்த பின் தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணக்கூடும். இதுவரை வேலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வெற்றியும், லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இதுவரை வேலையில் மந்தத்தை சந்தித்து வந்தால், ஆடி மாதத்தில் சூழல் சிறப்பாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம், வேலையில் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து, சூழல் சாதகமாக மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைத் தரும் மாதமாக இருக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வேலையில் இருந்த சோதனைகள் விலகி, சாதனைகளைப் புரிவீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது எதிர்பார்த்த வேலை மாற்றம் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் தொழிலை பொறுத்தவரை அதிர்ஷ்டமானதாக இருக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் உள்ளிட்டவற்றில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். தொழிலில் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் அமோகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
