Aadi Matha Rasi Palan 2025: ஆடி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும்?

Aadi Matha Rasi Palan 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஜூலை 17 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் தமிழ் மாதங்களில் 4 ஆவது மாதமான ஆடி மாதம் பிறக்கப்போகிறது.

ஜோதிடத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் நிலைகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது 2025 ஆடி மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

Aadi Matha Rasi Palan 2025 Sun Transit In Cancer Effects On 12 Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சொத்து விஷயங்களில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் வாழ்க்கை சிறக்க பொறுமை மற்றும் நிதானத்துடன் எதையும் கையாள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சு மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் அமைதியாக இருப்பதன் மூலம் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயம் கோபம் மற்றும் ஆணவம் போன்ற உணர்வுகளும் எழக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும். இக்காலத்தில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு பணிவுடன் செயல்பட வேண்டும். ஆனால் நிதி ரீதியாக, இக்காலம் சற்று நிம்மதியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கும். முக்கியமாக கண்கள் மற்றும் கால்கள் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். எடுத்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். கௌரவமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தந்தையுடனான உறவு சுமூகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை விட செயல்களில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த ஆடி மாதம் அமைதியாக வேலை செய்தால், சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் மற்றும் ரகசியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக வாகனம் ஓட்டும்போது அல்லது முதலீடு செய்யும் போது தேவையற்ற ரிஸ்க்குகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்கள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம். கட்டுப்பாட்டுடன் இருந்தால், இம்மாதத்தில் பாதுகாப்பாக இருக்கலாம்.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். வணிகர்கள் கூட்டாளருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான புரிதல்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். புதிய தொடக்கங்கள் அல்லது பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணம் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலனும், பாராட்டும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். எச்சரிக்கையாக இருந்தால், அதைத் தவிர்க்கலாம். சட்ட விஷயங்களில் இக்காலம் சாதகமாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மனக்குழப்பத்துடன் இருக்கக்கூடும். ஆனால் நன்கு ஆழமாக யோசித்து எதையும் செய்தால், நல்ல பலனைப் பெறலாம். குழந்தைகள் தொடர்பான ஏதேனும் தகராறு இருந்தால், பொறுமையுடன் அதைத் தீர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, July 16, 2025, 21:46 [IST]
Desktop Bottom Promotion