Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் 6 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
6 Planets Conjunction In Pisces On March 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கின்றன. அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளன. இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகுவும், புதனும், சுக்கிரனும் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி சூரியனும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் மார்ச் 28 ஆம் தேதி சந்திரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 29 ஆம் தேதி சனி பகவானும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் மீன ராசியில் ராகு, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கையானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இந்த அரிய சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது மார்ச் இறுதியில் நிகழும் 6 கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் 6 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையால் பாராட்டுகள் குவியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடனான உறவு மேம்படும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் 6 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழில் செய்பவர்கள் இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அவர்களின் நிதி நிலைமை மேம்படும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் 6 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications