Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
24 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்...
4 Rare Rajyogas In January 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தனது நிலையை மாற்றி பல யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் 4 அரிய ராஜயோகங்கள் உருவாகின்றன.
இந்த ராஜயோகங்களானது கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், செல்வத்தின் காரணியான சுக்கிரன், புத்திகாரகன் புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகியவற்றால் உருவாகவுள்ளன. அதுவும் இந்த ராஜயோகங்களானது மகர ராசியில் லட்சுமி நாராயண ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம் மற்றும் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளன.

இந்த ராஜயோகங்கள் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக மகர ராசியில் உருவாகவுள்ளன. இந்த 4 அரிய ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரவுள்ளன.
இதன் விளைவாக நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது ஜனவரியின் நடுப்பகுதியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த 4 ராஜயோகங்களால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நல்ல செய்திகளை பெறலாம். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுவும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். புதிய தொடர்புகளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்களால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தனித்துவமான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications