For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாமியார்-மருமகள் சண்டைகளை தவிர்ப்பதற்கான வழிகள்!!!

By Super
|

ஒவ்வொரு பெண்ணும் தனது திருமண வாழ்வைப் பற்றி கனவு கண்டிருப்பாள். அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவாள். இது மட்டுமல்லாது புகுந்த வீட்டில் தனது கணவரின் உறவினர்களும் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவே பெரிதும் விரும்புவாள். இதே போன்ற உணர்வை தான் கணவரது உறவினர்களும் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு வரும் மருமகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்படுத்துவாள் என்று நம்புவார்கள்.

திருமணம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கின்றது. ஆனால் இது எல்லோர் வாழ்விலும் ஒவ்வொரு நிலையிலும் பல திடீர் மாற்றங்களை சந்திக்க வேண்டிருக்கும். சில நேரங்களில் புதிய இடத்திலும் புதிய மனிதர்களிடமும் புதிய பழக்கவழக்கங்களுக்கும் நாம் பழக்கப்படுத்திக் கொள்ள நேரிடும். நீங்கள் உங்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது, உங்கள் கணவரின் தாயிடம் பழக நேரிடும். இந்த மாமியார் மருமகள் உறவில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. இது மிகவும் கடினமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ரகசியம் தான். ஒரு நல்ல மருமகள் வீட்டை சரிசமமாக கையாண்டு சிறந்த வழியில் கொண்டு செல்லலாம்.

Ways Daughter-in-law Can Avoid Tiffs

வேறொரு குடும்பத்தில் இருந்து வந்து, புதிய மனிதர்களிடமும், புதிய குடும்பத்திலும் அனுசரித்து போவதற்கு சில காலம் தேவைப்படும் என்பது முற்றிலும் உண்மையான கருத்து. அதனால் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். நமது குடும்பத்தை சரிசமமாகவும், நல்முறையில் வழிநடத்தவும், நாம் புகுந்த வீட்டில் சண்டைகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மாமியார் என்றாலே சில சொல்ல முடியாத விஷயங்கள் இருக்கத் தான் செய்யும். அதனால் அந்த சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு நடப்பதால், வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம். புகுந்த வீட்டு மனிதர்களிடம் இறுக்கமான உறவை தவிர்க்க வேண்டும். அவர்களை வேற்று மனிதர்களாக எண்ணாமல், நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது மாமியார் மருமகள் சண்டைகளை தவிர்ப்பதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

பாராட்டுதல்

பாராட்டை விரும்பாதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். அதனால் இது தான் தாரக மந்திரம். ஒரு நல்ல மருமகள் கெட்டிகாரத்தனமாக புரிந்து கொண்டு நல்ல முறையில் செயல்படுவார். உங்கள் கணவரை நல்ல ஒரு மனிதராக வளர்த்ததற்காக அவரது பெற்றோர்களை பாராட்டுங்கள். அவர்கள் உங்கள் கணவரை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஏற்றுகொள்ளுங்கள். இது அவர்களுக்கு நிச்சயமாக ஒரு இனிமையான உணர்வை கொண்டு வரலாம்.

அவர்களை ஒதுக்கக்கூடாது

முதியவர்கள் அனைவருமே நமது செயல்களில் ஊடுருவவே பெரிதும் விரும்புவார்கள் என்பது முற்றிலும் உண்மைதான். எனினும், உங்கள் கணவரது பெற்றோர்களுக்கு அவர்களை ஒதுக்கி வைத்துள்ளீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தாதீர்கள். அவர்களை ஒதுக்காமல் அவர்களது அறிவுரைகளை ஏற்றுகொள்ளவேண்டும். இது சண்டையை தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும் மேலும் அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல மருமகள் என்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

நண்பராக ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் மாமியார் உங்கள் கணவருக்கு நெருக்கமாக இருக்கலாம். அவர் உங்கள் மாமியாருக்கு விலை மதிக்கமுடியாத சொத்தாக இருக்கலாம். இது உங்களுக்கு அச்சுறுத்தல் உணர்வை கொடுக்கும். நீங்கள் ஒரு நல்ல மருமகளாக இருந்தால் இந்த உறவை புரிந்துகொள்ளுவீர்கள். அவர்களது நல்லுறவை நல்ல முறையில் வலுப்படுத்துங்கள்.இது அவர்களுடனான சண்டையை தவிர்க்க உதவும்.

பொறுமையாக காத்திருங்கள்

உங்கள் கணவரை பார்த்த சில நொடிகளிலேயே அவரை விரும்பியது போல அவரது பெற்றோரிடமும் அவ்வாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் கணவரது பெற்றோரிடம் நல்லுறவை ஏற்படுத்த சில காலம் தேவைப்படும். ஒரு நல்ல மருமகள் இதனை சரியாக புரிந்து கொண்டு சண்டைகளை தவிர்த்து நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி செல்லுவாள்.

சண்டைகளில் அவர்களை இழுப்பது

திருமண வாழ்க்கையில் சண்டைகள் வருவது ஒரு பொதுவான ஒன்றாகும். உங்கள் கணவரிடம் சண்டை ஏற்பட்டால் தேவை இல்லாமல் அவர்களை இழுக்கக்கூடாது. இதுவே அவர்களோடு சண்டை ஏற்படுவதை தவிர்க்கும். ஒரு நல்ல மருமகளாக அவர்களின் உணர்ச்சிகளையும் பாதுகாப்புஇன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும்

எப்பொழுதுமே உங்கள் மாமியார் உங்கள் கணவருக்கே சாதகமாக பேசமாட்டார்கள். உங்களிடமும் சிறிது அக்கறை இருக்கக்கூடும். உங்களை வித்தியாசமாக நடத்த விரும்பமாட்டார்கள். தேவையற்ற காரணங்களுக்காக அவர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவேண்டும். ஒரு நல்ல மருமகள் இதனை கண்டிப்பாக புரிந்து கொள்ளுவார்.

உற்ற நண்பர்கள்

ஒரு நல்ல மருமகள் தனது மாமியாருக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல தோழியாகவே இருப்பார். அவர்களை பேஸ்புக்கில் நண்பராக ஏற்று நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கீறீர்கள் என்பதை பார்க்க விடுங்கள். இதன்மூலம் அவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

English summary

Ways Daughter-in-law Can Avoid Tiffs

It is a true fact that you come from a different family and you will take time to adjust with the new members and your new family. So give it adequate time! One of the tips to a balanced and family life is to avoid fighting in laws. Here are a few ways you can avoid tiffs as a daughter-in-law.
Desktop Bottom Promotion