Latest Updates
-
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது?
Menopause And Diabetes Risk In Tamil: மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறும் முக்கியமான செயல்முறையாகும். இது இனப்பெருக்க திறனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஹார்மோன் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது. இந்த மாதவிடாய் சுழற்சியானது ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது பெண்களுக்கு நின்றுவிடும். அதையே மாதவிடாய் நிறுத்தம்/மெனோபாஸ் என்று அழைப்பர்.
மாதவிடாய் நிறுத்தத்தால் ஒரு பெண்ணின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் அளவுகள் குறையத் தொடங்குவதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாகக்கூடும். ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலக் கவலை, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயமாகும்.

'Gyaan by Ganesh - Making India Win Over Diabetes' என்பது சன் பார்மா நிறுவனம், அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாகும். இது நிபுணர்களின் ஆதரவு பெற்ற தகவல்கள் மூலம், இந்தியர்கள் நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மெனோபாஸ் என்றால் என்ன?
ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்தால் அது மெனோபாஸ் எனக் கருதப்படுகிறது. இது வயது அதிகரிப்பின் இயல்பான ஒரு பகுதியாகும். பொதுவாக இந்த மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் நடக்கும். இந்த நிலையில் கருப்பை செயல்பாடு குறைந்து, இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது.
"46 வயதிற்கு முன்பே ஏற்படும் மாதவிடாய் நிறுத்தம், எதிர்கால வளர்சிதை மாற்ற அபாயத்திற்கான ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். 46 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதோடு ஒப்பிடுகையில், முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய் உருவாகுவதற்கான வாய்ப்பை கிட்டதட்ட 25% அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் தவிர்க்க முடியாதது என்று இது அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள், வழக்கமான இரத்த சர்க்கரை பரிசோதனை, எடை மேலாண்மை, உடல் செயல்பாடு மற்றும் இரதய நோய் அபாய கண்காணிப்பு குறித்து தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்." Dr Vipin V P, Lead Consultant Endocrinology, Aster Medcity Kochi, Kerala.
மெனோபாஸ் காலத்தில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்:
* உடல் சூடு அதிகரித்தல் (Hot Flashes)
* இரவில் அதிகமாக வியர்ப்பத
* தூக்கமின்மை
* மனநிலை மாற்றங்கள்
* உடல் எடை அதிகரித்தல்
* உடல் சோர்வு
* மூட்டு வலி
மெனோபாஸ் காலத்தில் சர்க்கரை நோயின் அபாயம் ஏன் அதிகரிக்கிறது?
மருத்துவர்களின் கூற்றுப்படி பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலையே மெனோபாஸ் ஆகும். இந்த காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைவதால் பல்வேறு உடல் மற்றும் மனநல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உடலில் இன்சுலின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் குறையும் போது, உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஏற்படும் அபாயம் உயர்கிறது.
மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வயிற்றுக் கொழுப்பு இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து, நீரிழிவு அபாயத்தை மேலும் உயர்த்தக்கூடும். மேலும், தூக்கமின்மை, மனஅழுத்தம் , சோர்வு, உடற்பயிற்சி குறைவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கலாம்.
எனவே குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் மெனோபாஸ் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் குறித்த ஆய்வுகள்
டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் மெனோபாஸ் பெண்களிடையே அதிகம் இருப்பதாக பல ஆய்வுகளிலும் தெரிய வந்துள்ளன.
வட அமெரிக்க மாதவிடாய் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான 'மெனோபாஸ்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 46 முதல் 55 வயதுக்குள் இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் ஒப்பிடும் போது, 46 வயதுக்கு முன்பு இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. மேலும் 55 வயதுக்குப் பிறகு இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 12 சதவீதம் அதிகரித்துள்ளதையும் கண்டறிந்துள்ளது.
அதேப் போல், மற்றொரு ஆய்விலும், இளம் வயதில் மாதவிடாய் நிற்கும் பெண்களிடையே வகை 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் கணிசமாக அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைப்பது எப்படி?
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இயல்பான மாற்றமாக இருந்தாலும், இந்த காலம் உடல்நலத்தை கவனிக்க வேண்டிய முக்கியமான கட்டமாகும். சீரான உணவுமுறை , தினசரி உடற்பயிற்சி , போதுமான தூக்கம், மனஅழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான உடல்நல பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க முடியும். மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நீண்டகால நலனுக்கு மிகவும் அவசியமானது.
பொறுப்புத் துறப்பு: இந்தப் பொருள் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL) துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும், இது குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி, அவர்களின் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும். Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL)-க்கு தெரியப்படுத்தாமல், இதன் எந்தப் பகுதியையும் இயந்திரம் அல்லது மின்னணுவியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மறுஉருவாக்கம் செய்யவோ, பரப்பவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.
SPI-IN-CVD-ZT---07-20260103



Click it and Unblock the Notifications
