Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
இந்தியாவில் பெண்களிடையே கள்ளக்காதல் அதிகரிக்க இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி!
திருமணம் மீறிய உறவு என்பது பல நூற்றாண்டுகளாக தடைசெய்யயபட்ட தவறான செயலாகவே கருதப்படுகிறது, இது ஒழுக்கமின்மையின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும், அதிகமான இந்தியாவில் கவலையளிக்கும் விதமாக திருமணம் மீறிய உறவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் என்று வரும்போது, திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களின் விளைவுகளைப் பார்ப்பது முக்கியம்.
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இளம் தலைமுறையினர் திருமணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. திருமணம் மீறிய உறவில் ஈடுபடும் தம்பதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கள்ள உறவில் இருபவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் ஏன் திருமணம் மீறிய உறவுக்குள் நுழைந்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் மிகவும் பொதுவான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துணையிடமிருந்து போதிய கவனம் இல்லாமை
நட்புணர்வு, உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் உடல்ரீதியான நெருக்கம் ஆகியவற்றின் தேவை ஒருவரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு அடிப்படையானது. எனவே ஒருவர் உறவில் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது தனது துணையின் கவனம் போதாகவோ உணரும்போது, அது அவர்களின் உறவுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கணக்கெடுப்பின்படி 33% நபர்கள் தங்கள் உறவில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். திருமணம் மீறிய உறவிற்கு முக்கிய காரணமாக இருப்பது இதுதான்.
பழிவாங்குதல்
தங்களின் வாழ்க்கைத்துணை தங்களுக்கு துரோகம் செய்யும்போது துரோகம் செய்யப்பட்டதாக உணரும் போது அது அவர்களுக்கு பழிவாங்குவதற்கான தூண்டுதலாக இருக்கிறது. எனவே பழிவாங்குவதற்காக அவர்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். கணக்கெடுப்பின்படி, திருமணமான தம்பதிகளில் 23% பழிவாங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர், எனவே திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள்.
பாலியல் திருப்தியின்மை
கணக்கெடுப்பின்படி, கிட்டதட்ட 32% தம்பதிகள் தங்கள் துணையிடமிருந்து பாலியல் திருப்தி இல்லாததை எதிர்கொள்கின்றனர், மேலும் இந்த சூழ்நிலை துரோகத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்பு இல்லாதது வெற்றிகரமான உறவுக்கு மிகப்பெரிய தடையாகும்.
கள்ளக்காதல் தரும் சுவாரஸ்யம்
திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் என்பது ஒரு தந்திரமான விவகாரமாக இருக்கலாம். இது பெரும்பாலும் உணர்ச்சிரீதியாகவும், நடைமுறை வாழ்க்கையிலும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் சில நேரங்களில், தங்கள் உறவிற்கு வெளியே ஒருவரைத் தேடுவதற்கான காரணம் புதிய உறவுகள் தரும் சுவாரஸ்யமாக இருக்கலாம். கணக்கெடுப்பின்படி 32% நபர்கள் புதிய ஒருவரைச் சந்திப்பதன் மூலமும், அதனால் கிடைக்கும் சுவாரஸ்யம் மூலமும் வரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உணர ஆர்வமாக உள்ளனர்.
தன்னம்ப்பிக்கையை வளர்க்க
திருமணத்திற்குப் புறம்பான உறவு என்று வரும்போது, பலர் அது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி மட்டுமே என்று கருதுகிறார்கள். இருப்பினும், ஆனால் உண்மையில் சிலர் வேறுசில காரணங்களுக்காகவும் அதில் ஈடுபடலாம். தாங்கள் இன்னும் கவர்ச்சிகரமானவராகவும், விரும்பத்தக்கவராகவும் என்பதை நிரூபிக்க மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இதில் ஈடுபடலாம்.
கணக்கெடுப்பின்படி, வயது அல்லது உறவு நிலையைப் பொருட்படுத்தாமல், 31% நபர்கள் இன்னும் கவர்ச்சிகரமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் உணர விரும்புகிறார்கள். சிலருக்கு, திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடுவது மிகவும் தேவையான சுயமரியாதையை அதிகரிக்கும், குறிப்பாக அவர்களின் துணை அவர்களுடைய கவர்ச்சியை கேள்விக்குறியாக்கும் போது கள்ள உறவில் ஈடுபடும் முடிவை அவர்கள் தீர்க்கமாக எடுக்கலாம்.



Click it and Unblock the Notifications












