Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
70% பேர் திருமணம் செய்யாம லிவ்-இன் உறவில் வாழும் நாடு இதுதான்...இந்தியால எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் தெரியுமா?
ஆண்-பெண் இடையேயான உறவுகள் உலகம் தோன்றிய காலம் முதலே பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆண்-பெண் உறவை உறுதியாக வைத்திருக்க அவர்களை திருமணம் என்ற பந்தத்தில் இணைப்பது கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளது. திருமணம் பல்லாயிரம் வருடங்களாக மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
கடந்த நூற்றாண்டில் இந்த திருமணம் இல்லாத மற்றொரு ஆண்-பெண் உறவு மக்களிடையே வேகமாக பரவத் தொடங்கியது. அதுதான் லிவ்-இன்(Live-In) உறவுமுறை. லிவ்-இன் உறவுகள் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டவையாக கருதப்பட்டன. ஆனால் மெல்ல மெல்ல இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

லிவ்-இன் உறவு என்றால் என்ன?
ஒரு ஜோடியாக வாழ்வதற்கு நவீன வழியாக, திருமணம் என்ற உறவில் தேவை இல்லாமல் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையையும், வீட்டையும் பகிர்ந்து கொள்வதுதான் லிவ்-இன் உறவுமுறை. திருமணத்தை உயர்வாகக் கருதும் உலகின் சில பகுதிகளிலும், சில கலாச்சாரங்களிலும் இன்னும் லிவ்-இன் உறவுமுறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேசமயம் லிவ்-இன் உறவுகள் அன்பு மற்றும் நம்பிக்கையின்வெளிப்பாடாக இருக்கின்றன என்று இளைஞர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த உறவுமுறை முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
எந்த நாட்டில் லிவ்-இன் தம்பதிகள் அதிகம் வாழ்கிறார்கள்?
மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் லிவ்-இன் உறவுகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது. லிவ்-இன் உறவு என்பது இரண்டு காதலர்கள் திருமணமான தம்பதிகளைப் போல ஆனால் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது. ஆனால் உலகில் எந்த நாட்டில் லிவ்-இன் உறவில் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மற்ற அனைத்து நாடுகளையும் விடவும் ஸ்வீடனில் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் தம்பதிகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஸ்வீடனில் சுமார் 70 சதவீத மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் தோராயமாக 40 சதவீத தம்பதிகள் சிறிது காலத்திற்குப் பிறகு உறவை முறித்துக் கொள்கிறார்கள், அதே நேரத்தில் 10 சதவீத தம்பதிகள் மட்டுமே தங்கள் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஜோடியாக இருக்க விரும்புகிறார்கள்.
அடுத்தடுத்த இடங்களில் உள்ள நாடுகள் எது?
ஸ்வீடனுக்கு அடுத்த இடத்தில் நார்வே உள்ளது. இந்த நாட்டிலும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் லிவ்-இன் உறவுகளில் இருக்க விரும்புகிறார்கள். நார்வேக்கு அடுத்தபடியாக டென்மார்க் உள்ளது, அங்கு கணிசமான எண்ணிக்கையிலான தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள்.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவில் லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் சரியான சதவீதத்தை தீர்மானிப்பது எளிதல்ல, ஏனெனில் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், இது மக்களால் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் லிவ்-இன் உறவுகளில் உள்ள தம்பதிகளின் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஊடக அறிக்கைகளின்படி, வளர்ந்த நகரங்களில் 10 ஜோடிகளில் 1 ஜோடி லிவ்-இன் உறவில் உள்ளார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், Uniform Civil Code(UCC) செயல்படுத்தப்பட்ட பிறகு, லிவ்-இன் உறவில் உள்ள ஒரு ஜோடி முதல் முறையாக சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
லிவ்-இன் உறவில் இருக்கும் சூழலில், வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உதவும் வகையில், இந்த உறவுகளைப் பதிவு செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பை UCC வழங்க முயல்கிறது.



Click it and Unblock the Notifications

