Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க க்ரஷ் உங்ககிட்ட இப்படி நடத்துகிட்டா அவங்களுக்கும் உங்க மீது காதல் இருக்குனு அர்த்தமாம்...!
அனைவரின் வாழ்க்கையிலும் எப்படி காதல் உறவுகள் இருக்கிறதோ அதேபோல க்ரஷ்களும் இருக்கும். உங்கள் பணியிடத்திலோ, கல்லூரியிலோ க்ரஷ்கள் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்குமோ அதேயளவிற்கு பதட்டமாகவும் இருக்கும்.
உங்கள் க்ரஷ் உங்களை விரும்புகிறார்களா? என்பதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது மற்றும் தந்திரமானது. ஆனால் உண்மையில் உங்களின் க்ரஷ் செயல்படும் விதத்திலும், அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் மாற்றங்களையும் வைத்து அவர்களுக்கும் உங்கள் மீது விருப்பம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், அவர்களின் உண்மையான நோக்கங்களைப் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை நீங்கள் பெறலாம் மற்றும் இதன் அடிப்படையில் உங்களின் காதலை தொடரலாமா இல்லையா என்பதை முடிவு செய்யலாம்.
தொடர்பு மற்றும் ஆர்வம் அதிகரிக்கும்
அடிக்கடி உங்களிடம் பேசுவது உங்கள் க்ரஷ் உங்களை விரும்புகிறார்கள் என்பதற்கான வலுவான அறிகுறிகளில் ஒன்று. உங்களிடம் அடிக்கடி பேசும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டாலோ மற்றும் உங்களிடம் பேச திடீரென ஆர்வம் அதிகரிப்பது முக்கிய அறிகுறியாகும்.
அவர்களாகவே உரையாடல்களைத் தொடங்கலாம், உங்கள் மெசேஜ்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கலாம் மற்றும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் உண்மையான ஆர்வத்தைக் காட்டலாம்.
,
உடல் மொழி மற்றும் உடல் குறிப்புகள்
நீங்கள் அருகில் இருக்கும்போது உங்கள் க்ரஷின் உடல் மொழி மற்றும் உடல் குறிப்புகளில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் நெருக்கமாக அமர்ந்து, நீண்ட நேரம் உங்களுடன் கண் தொடர்பு வைத்திருக்கலாம், உங்கள் கைகளை மென்மையாக தொடலாம் அல்லது உங்களிடம் உடல்ரீதியான நெருக்கத்தை வளர்க்கலாம். இது உங்கள் மீதான அவர்களின் ஆர்வத்தைக் குறிக்கிறது.
சின்ன சின்ன விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது
உங்கள் மீதான அவர்களின் கவனம் மற்றும் அக்கறை அவர்களும் உங்கள் மீது விருப்பத்துடன் இருப்பதை வெளிப்படுத்தலாம். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்க முனைகிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த திரைப்படம், பொழுதுபோக்கு அல்லது வரவிருக்கும் நிகழ்வுகள் போன்ற உங்களைப் பற்றிய சிறிய விஷயங்களை உங்கள் க்ரஷ் நினைவில் வைத்திருந்தால், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உண்மையான ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அர்த்தம்.
உங்களுடன் நேரம் செலவிட முயற்சிப்பது
உங்கள் க்ரஷ் உங்கள் மீது ஆர்வமாக இருக்கும்போது அவர்கள் உங்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள், அதற்கான திட்டங்களையும், வாய்ப்புகளையும் அவர்களே உருவாக்கலாம்.
விளையாட்டுகள் அல்லது பயணங்களை பரிந்துரைக்கலாம் மற்றும் உங்களுடன் நேரம் செலவிட முன்னுரிமை அளிக்கலாம். இது அர்த்தமுள்ள நினைவுகளை ஒன்றாக உருவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை குறிக்கிறது.
விளையாட்டுத்தனமாக கிண்டல் செய்வது
கடலை போடுவது போல பேசுவது மற்றும் விளையாட்டுத்தனமான கிண்டல் உங்கள் க்ரஷ் உங்களை விரும்புகிறது என்பதற்கான பொதுவான அறிகுறிகளாகும். அவர்கள் இலேசான கேலியில் ஈடுபடலாம், நட்பான முறையில் உங்களை கிண்டல் செய்யலாம் அல்லது உங்களை சிரிக்க வைக்கும் வழிகளைக் காணலாம்.
ஆதரவாக இருப்பது
உங்கள் க்ரஷ் உங்கள் மீது உண்மையான ஈர்ப்புடன் இருந்தால், அவர்கள் நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவார்கள். அவர்கள் உங்கள் புலம்பல்களை கேட்கலாம், ஆறுதலான வார்த்தைகளை வழங்கலாம் அல்லது தேவைப்படும்போது உங்கள் பலத்தின் ஆதாரமாக இருக்கலாம். இது அவர்கள் உங்களுக்காக அவர்கள் இருக்க விரும்புவதைக் குறிக்கிறது.
பொறாமை குணம்
யாராவது உங்களுடன் நெருக்கமாக இருக்கும் போது அவர்கள் பொறாமைக்குரிய நடவடிக்கைகளை வெளிப்படுத்தலாம். நீங்கள் மற்றவர்களுடன் பழகுவதைப் பார்க்கும்போது அவர்கள் கொஞ்சம் பொஸசிவாக மாறலாம் அல்லது உங்கள் மீது வேறொருவரின் ஆர்வத்தை பற்றிக் கூறும் போதுஅவர்கள் கவலையை வெளிப்படுத்தலாம். இது உங்களுடனான அவர்கள் இணைப்பை உறுதிப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

