Latest Updates
-
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவை பேண விரும்புகிறீர்களா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
Relationship Tips In Tamil: நம் உறவுகளை சிறந்த வழியில் வழி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உங்கள் துணையுடன் ஒன்றாக நேரம் செலவிடுவது, பெற்றோருடன் நேரம் செலவழிப்பது இப்படி நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சில சமயங்களில் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், காதலி மற்றும் காதலன்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் வாக்கு வாதங்கள் என ஏராளமான சவால்களை நாம் சமாளிக்க வேண்டியது உள்ளது.
ப்யூ ரிசர்ச் சென்டர் ஆய்வின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று டேட்டிங் மற்றும் காதல் உறவுகள் கடினமாக இருப்பதாக அனைத்து அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் மக்கள் உறவுகளுக்கு நேரத்தை செலவழிக்காமல் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே உங்கள் ஆரோக்கியமான உறவை எந்நாளும் நீங்கள் பேண நினைத்தால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
உறவை ஆரோக்கியமான வழியில் பேண சில உதவிக் குறிப்புகள்:
1. உறவுக்கு இடையே தகவல் தொடர்பு முக்கியம்
எல்லா உறவுகளுக்கும் அடித்தளமாக இருப்பது தகவல் தொடர்பு ஆகும். கணவன் மனைவிகளுக்கிடையே சரியான தகவல் தொடர்பு இல்லாத தம்பதிகள் நிறைய பேர் விவகாரத்து வாங்குவதாக அமெரிக்கா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கணவன் மனைவிகளுக்கிடையே தகவல் தொடர்பு மிகவும் அவசியம்.
ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசுவது அவசியம். உங்கள் மனதில் உள்ள விஷயங்களை உங்கள் துணையுடன் கலந்துரையாடுவது மிகவும் நல்லது. உங்கள் துணைக்கு ஒரு அழகான குறுஞ்செய்தியை அனுப்புவது, வேடிக்கையான வீடியோ அனுப்புவது போன்ற எளிய விஷயங்களை செய்து வரலாம். இது உங்கள் உறவை மேம்படுத்த உதவுகிறது.
2. உங்கள் உரையாடல் ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருந்தால் நல்லது
தம்பதிகள் தங்களுக்கிடையே எப்படி வாதிடுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். தம்பதிகள் எப்பொழுதும் மரியாதையுடனும். அதே நேரத்தில் கண்ணியத்துடனும் உரையாட வேண்டும். அதே நேரத்தில் தங்கள் துணையின் பேச்சையும் காது கொடுத்து கேட்க வேண்டும். உங்கள் துணையின் பேச்சை நீங்கள் கவனமாக கேட்பது உங்கள் உரையாடலை ஆக்கப்பூர்வமாக மாற்றுகிறது.
அதே நேரத்தில் உரையாடலில் ஈடுபடும் போது உடலியல் தொடர்பு இருப்பது நல்லது. கைகளை பிடித்து பேசுவது, ஒன்றாக நெருங்கி அமர்ந்து பேசுவது போன்றவை உங்கள் இருவருக்கிடையேயான உறவை பலப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தம்பதிகள் இணைந்திருப்பதாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள்.
3. நெருக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது
கணவன் மனைவிகளுக்கிடையேயான உறவில் உடல் நெருக்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் இருவருக்கிடையேயுள்ள தனிப்பட்ட தேவைகளை வெளிப்படுத்துவது அவசியம். எனவே உடல் நெருக்கம் உங்கள் இருவருக்கிடையேயுள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. ஒரு வேளை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நெருக்கம் சரியாக இல்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
4. உங்கள் உறவுக்கு என்று சரியான நேரத்தை ஒதுக்குங்கள்
பள்ளி, வேலை மற்றும் குழந்தைகள் என தினசரி ஓடிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் உங்கள் உறவுக்கென்று சில நேரங்களை ஒதுக்குங்கள். நேரத்தை சமநிலையில் பராமரிப்பது மிகவும் அவசியம். உங்கள் ஆற்றலின் ஒரு பகுதியை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் செலவழிப்பது நல்லது.
உங்களுக்கு வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் அதிகமாக இருந்தால் அதற்கு பணியாட்களை நியமிப்பது நல்லது. ஏனெனில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அதை உங்கள் உறவுக்காக செயல்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம்.
5. உங்கள் தனிப்பட்ட நலன்களை பராமரித்தல் மிகவும் அவசியம்
தம்பதிகளின் வாழ்க்கை பிண்ணிப் பிணைந்த ஒன்றாக இருந்தால் கூட ஒருவருக்கொருவர் தனிப்பட்ட நலன்களை கவனித்துக் கொள்வது அவசியம். உங்கள் தனிப்பட்ட நலன்களை நீங்கள் பராமரித்தால் அது உங்கள் சுய உணர்வை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது, இசையை இசைப்பது, புத்தகம் படிப்பது, உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது போன்ற விஷயங்களை நீங்கள் செய்து வரலாம். உங்களுக்கு பிடித்த பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள். இது உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
6. சிறிய விஷயங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது
பொதுவாக உங்கள் துணையின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் காதலர் தினம் போன்றவற்றிற்கு உங்கள் துணைக்கு நிறைய சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்திருப்பீர்கள். அது ஒருபக்கம் இருந்தால் கூட உங்கள் துணைக்கு அவ்வப்போது பரிசளிப்பதும் அவசியம். பரிசு என்றால் அவை பரிசுப் பொருட்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
அன்றாட விஷயங்களில் உங்கள் துணையை பாராட்டலாம், உங்கள் துணையின் சமையலை பாராட்டலாம், வீட்டிற்கு போகும் வழியில் பூக்கள் வாங்கிக் கொண்டு செல்வது, உங்கள் மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்து வரலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் அவர் மேல் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவருக்கு காட்டுங்கள். இது உங்கள் துணையுடன் வலுவான தொடர்பை நீண்ட காலம் நீட்டிக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான உறவை உங்களால் பேண முடியும்.



Click it and Unblock the Notifications
