மருமகள்கள் தங்கள் மாமியாரிடம் சொல்ல விரும்பும் விஷயங்கள் இவைகள் தானாம்... ஷாக் ஆகாதீங்க...!

திருமண உறவில் அடியெடுத்து வைக்கும் போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கிறது. அதே சமயத்தில் புகுந்த வீட்டில் உள்ள அனைத்து உறவுகளை பற்றி புரிந்து கொள்ளவும் வேண்டும். அப்பொழுது தான் உறவுகளிடையே ஏற்படும் உறவுச் சிக்கல்களை நம்மால் தடுக்க முடியும். பொதுவாக திருமணத்திற்கு பிறகு ஒரு மாமியார் மருமகளை பற்றி புரிந்து கொள்வதும் மருமகள் மாமியாரை பற்றி புரிந்து கொள்வதும் நடப்பதேயில்லை. இதனால் தான் குடும்பத்தில் ஏகப்பட்ட இன்னல்கள் வருகின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மனசு விட்டு பேசுவதும், அதே நேரத்தில் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம் என்கிறார்கள் குடும்ப நல நிபுணர்கள். அந்த வகையில் மருமகள்கள் தங்கள் மாமியாரிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

things your daughter-in-law wants to tell you in tamil

மருமகள்கள் மாமியாரிடம் சொல்ல விரும்பும் விஷயங்கள் :

எதுவும் தெரியாதவர்கள் போல் நடத்தாதீர்கள்

பொதுவாக மாமியார்கள் வீட்டிற்கு வந்த மருமகளை எதுவும் தெரியாத சிறு பிள்ளையை போல் நடத்துவது உண்டு. ஆனால் உண்மையில் மருமகள்கள் அதை விரும்புவதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கை அனுபவங்கள், ஆசைகள், திருமண வாழ்க்கையை எப்படி பராமரிப்பது மற்றும் ஒரு குடும்பத்தை எப்படி பேணிக் காப்பது போன்ற சொந்த யோசனைகள் அவர்களுக்கும் இருக்கும். எனவே இதை புரிந்து கொண்டு மாமியார்கள் நடக்க வேண்டும் என மருமகள்கள் விரும்பப்படுகிறார்கள்.

தேவைப்படும் போது மட்டும் அறிவுரை வழங்குங்கள்

எப்பொழுது பார்த்தாலும் அறிவுரை வழங்கிக் கொண்டே இருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை. அதே மாதிரி தான் மருமகள்களும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் மாமியாரை மதிப்பதுண்டு அதே நேரத்தில் எப்பொழுது பார்த்தாலும் அறிவுரையை வழங்குவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே மாமியார்கள் மருமகள்கள் கேட்கும் போது மட்டும் அறிவுரை வழங்குவது நல்லது. அவர்களும் அதன் படி கேட்டு நடக்க முயல்கிறார்கள்.

உங்கள் பொறாமை மருமகளுக்கு பிடிப்பதில்லை

கணவன் மனைவி உறவுக்குள் நீங்கள் நுழைவதை அவர்கள் விரும்புவதில்லை. உங்கள் மகன் மற்றும் மருமகள் இருவருமே உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் வித்தியாசமானது. இருப்பினும் அவர்களுக்கிடையேயுள்ள அன்பு உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் தனியாக இருப்பதாக சில சமயங்களில் உணரலாம். இருப்பினும் நீங்கள் பொறாமையாக உணர்ந்தால் கூட அதை தவிர்ப்பது தான் நல்லது.

மருமகள் தவறை மட்டும் சுட்டிக் காட்டாதீர்கள்

இங்கு யாரும் சரியானவர்கள் கிடையாது. அப்படி இருக்கும் போது உங்கள் மருமகளை மட்டும் தவறு செய்ததாக குறை கூறுவது சரியானது கிடையாது. உங்கள் மகன் மீது இருக்கும் தவறுகளையும் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். இரண்டு பக்கமும் உள்ள நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என மருமகள்கள் விரும்பப்படுகிறார்கள்.


மருமகள் அவளுடைய இலக்குகளை அடைய உதவி செய்யுங்கள்

உங்களுக்கு திருமணமாகும் போது உங்களுக்கென்று நிறைய கனவுகள் மற்றும் லட்சியங்கள் இருந்திருக்கும். அதே மாதிரி தான் உங்கள் மருமகளுக்கும் நிறைய கனவுகள் மற்றும் இலட்சியங்கள் இருக்கின்றன. அதை அடைய அவர்கள் முயற்சி செய்யும் போது அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முயற்சி செய்யுங்கள். இதைத்தான் மருமகள்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

மரியாதையை விரும்புகிறார்கள்

மரியாதை என்பது உறவில் மிக முக்கியமான ஒன்றாகும். உங்களை அவர்கள் மதிப்பதை போன்றே மருமகளும் உங்களிடம் இருந்து அதை எதிர்பார்க்கிறார்கள். எனவே மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.

அவர்களை அடிக்கடி சோதிப்பதை நிறுத்துங்கள் :

பொதுவாக மாமியார்கள் மருமகளை அடிக்கடி சோதித்து பார்ப்பது உண்டு. இதனாலயே நிறைய உறவுகளில் சிக்கல்கள் உண்டாகின்றன. மருமகள்கள் இதனால் எரிச்சல் அடைவது உண்டு. எனவே மாமியார்கள் தங்கள் சோதனை முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மருமகள்கள் விரும்பப்படுகிறார்கள்.

அவர்கள் கூறும் ரகசியத்தை நீங்கள் காக்க வேண்டும் என விரும்புகிறார்கள்

மருமகள் உங்களிடம் கூறும் ரகசியத்தை நீங்கள் காக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் மகனிடம் அதைப் பற்றி சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கூறுவதால் அந்த ரகசியத்தை மாமியார்கள் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களது கோரிக்கைகளாக உள்ளது.

உங்கள் மரபு மற்றும் பழக்க வழக்கத்தை மருமகள் மீது புகுத்தாதீர்கள்

வீட்டிற்கு வந்த மருமகள் இப்படி தான் நடக்க வேண்டும் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் இப்படித்தான் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். முடிந்த வரை இருவருக்கும் பொதுவான மரபு மற்றும் பழக்க வழக்கங்களை ஏற்று நடக்க முற்படுங்கள். மருமகளுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

நீங்கள் பின்னால் பேசுவது மருமகளுக்கு பிடிப்பதில்லை

குடும்பத்தில் ஒரு நபரை பற்றி பின்னால் பேசுவதால் எந்த மாற்றமும் நிகழாது. அந்த நபருடன் அமர்ந்து பேசுவதே இது என்றைக்கும் தீர்வு அளிக்கும். எனவே உங்கள் மருமகளுக்கு பின்னால் பேசுவதை நீங்கள் நிறுத்துங்கள். ஏனெனில் இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, March 25, 2023, 22:00 [IST]
Desktop Bottom Promotion