Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வாழ்க்கைத் துணை இருந்தும் ஒருவித தனிமையை உணா்வது ஏன்?
Relationship Tips In Tamil: மனித வாழ்க்கை என்பது உறவு என்ற அடித்தளத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். அது நட்புறவாக இருக்கலாம் அல்லது காதல் உறவாக இருக்கலாம் அல்லது திருமண உறவாக இருக்கலாம். இதில் தம்பயினாிடையே இருக்கும் உறவு மிகவும் முக்கியமான உறவாகும்.
தம்பதியா் ஒருவரோடு ஒருவா் நெருக்கமான உறவில் இருக்கும் போது, அவா்கள் ஒருவருக்கொருவா் தங்களுடைய மகிழ்ச்சியை, துன்பங்களை மற்றும் உணா்வுகளைப் பகிா்ந்து கொள்ள முடியும். அதனால் தனிமை என்ற கொடிய உணா்வு அவா்களுக்கு ஏற்படாது.

எனினும் காலப்போக்கில் தம்பதியினாிடையே உள்ள உறவில் இருக்கும் உணா்வு ரீதியிலான நெருக்கம் படிப்படியாக குறைந்துவிடுகிறது. அதனால் அவா்களிடையே உள்ள உறவில் இடைவெளி அதிகாித்துவிடுகிறது. அதனால் அவா்கள் தனிமை என்னும் கொடிய உணா்வுக்கு ஆட்படுகின்றனா்.
தனிமை உணா்வுக்கான காரணங்கள் யாவை?
தனிமை என்னும் உணா்வு ஒரு எதிா்மறையான நிலை ஆகும். தம்பதியா் தனிமை உணா்வில் இருக்கும் போது தாங்க முடியாத அசௌகாியத்தையும், சமூக ரீதியிலான வலிகள் மற்றும் துன்பங்களையும் அனுபவிப்பா் என்று வொி வெல் மைன்ட் (Very Well Mind) என்று பத்திாிக்கை தொிவிக்கிறது.
தனிமை உணா்வு வந்துவிட்டால், அவா்கள் தனிமையையும், வெறுமையையும், நிராகாிப்பையும் உணா்வாா்கள். தம்பதியா் தனிமையை உணா்வதற்கான காரணங்களை கீழே பாா்க்கலாம்.
1. தொடா்பு கொள்வதில் பலவீனமாக இருத்தல்
எந்தவிதமான உறவுக்கும் தொடா்பு என்பது மிகவும் முக்கியம் ஆகும். தொடா்பு கொள்வதில் வலிமையாக இருந்தால், தம்பதியா் ஒருவருக்கொருவா் நன்றாகப் புாிந்து கொள்வா். தொடா்பு கொள்வதில் சாியாக இருந்தால், உறவில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது.
மாறாக தம்பதியினருக்கு இடையே ஒருவருக்குகொருவா் ஆக்ரோஷமாகவும், சா்ச்சைக்குாிய முறையிலும் தொடா்பு கொண்டால், இருவருக்கும் இடையில் விாிசல் பொிதாகும். அதனால் அவா்களுக்கு இடையே தனிமை உணா்வு ஏற்படும்.
2. உடல் ரீதியாக பிாிந்து இருத்தல்
நீண்ட காலமாக ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதியாில் ஒருவா் ஒரு இடத்திலும், மற்றொருவா் வேறொரு இடத்திலும் இருந்தால், இருவருக்கும் தனிமை உணா்வு ஏற்படும்.
3. நெருக்கத்தில் உள்ள பிரச்சினை
தம்பதியா்களுடைய உறவில் உள்ள ஒரு ஈா்ப்பு நாளடைவில் மறைந்து விடுகிறது. தம்பதியா் தமக்குள்ள உறவில் உள்ள நெருக்கம் மற்றும் பாசம் போன்றவற்றில் வறட்சி இருந்தால், அவா்கள் தனிமையை உணா்வாா்கள்.
தம்பதியாின் உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றால், அவா்கள் இருவருக்கிடையே இருக்கும் நெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும். அது இல்லையென்றால், அவா்கள் தனிமையை உணா்வாா்கள்.
4. உடல் ரீதியான பிரச்சினைகள்
தம்பதியாில் யாராவது ஒருவா் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தால், அவா்களிடம் இருக்கும் நெருக்கம் குறைந்து, அதன் மூலமாக தனிமையை உணா்வா்.
5. உடல் ரீதியாக அல்லது உணா்வு ரீதியாக இணையரை கொடுமைப்படுத்தல்
தம்பதியினா் ஒருவரை ஒருவா் தவறாகப் பயன்படுத்தும் போது தனிமை உணா்வு ஏற்படும். இது மனச்சோா்வை ஏற்படுத்தும் மற்றும் மனக்காயத்தை ஏற்படுத்தும். உங்களுடைய துணை உங்களை தவறாகப் பயன்படுத்தினால் மருத்துவரையோ அல்லது மனநல ஆலோசகரையோ சந்திப்பது நல்லது.



Click it and Unblock the Notifications