Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
கணவரின் அன்பை பெற்று ஒரு நல்ல மனைவியாக இருக்கணுமா? அப்ப முதலில் இதைச் செய்யுங்க...
Relationship Tips In Tamil: திருமண வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலுடன் செயல்பட்டால் கூட கணவரின் அன்பை பெறுவது மிகவும் கடினமான விஷயம்.
திருமண வாழ்க்கையில் ஒரு கணவனும் மனைவியும் சிறந்த நபராக செயல்பட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நிறைய நேரங்களில் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. ஆனால் உங்கள் உறவில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.

அந்த வகையில் நீங்கள் ஒரு சிறந்த மனைவியாக இருக்க ஆசைப்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களை செய்யுங்கள். இது உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர உதவியாக இருக்கும்.
உங்கள் கணவருக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்
உங்கள் கணவரும் வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது சோர்வடைந்து தான் வருகிறார். அவருடைய களைப்பை போக்க அவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அவருக்கு விருப்பமான விஷயங்களை செய்ய முதலில் இடம் கொடுங்கள். அதை விட்டுவிட்டு எப்பொழுதும் அவருடைய நேரத்தை நீங்களே பறித்துக் கொண்டு இருக்காதீர்கள். அவருக்கு தனிமை தேவைப்பட்டால் சிறிது தனிமை நேரத்தை கொடுங்கள். அவர் சிறிது நேரம் டீவி பார்க்க விருப்பப்பட்டால் அதற்கான நேரத்தை அளியுங்கள்.
அவரது காதல் மொழியை அறிந்து கொள்ளுங்கள்
அன்பின் மொழி என்பது காதலில் மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் கணவர் கூறும் காதல் மொழியை அறிய முற்படுங்கள். அது உங்கள் கணவரின் சிறு பார்வையாக இருக்கலாம், உடல் மொழியாக இருக்கலாம் அதை புரிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் இருவரின் தேவைகளையும் நிறைவேற்றி கொள்வது அவசியம்.
உங்கள் கணவரை பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் கணவர் செய்யும் நல்ல செயலுக்கு பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். அது சிறிய விஷயமாக இருந்தாலும் அதை மறக்காதீர்கள். ஏனெனில் பாராட்டுக்கள் எப்பொழுதும் ஒரு நபருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும். எனவே உங்கள் கணவரை அடிக்கடி உற்சாகப்படுத்த மறக்காதீர்கள்.
அதிகமாக விமர்சிக்காதீர்கள்
உங்கள் கணவரை எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பிரச்சினையை உண்டாக்கலாம். விமர்சனங்கள் ஒருவரை கோபமடைய செய்யும். இதனால் உங்கள் கணவரின் அன்பை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே முடிந்த வரை கணவரை விமர்சிப்பதை தவிருங்கள்.
ஒவ்வொரு நாளும் அவர் செய்யும் நல்லதைச் சுட்டிக் காட்டுங்கள்
உங்கள் கணவர் ஒவ்வொரு நாளும் செய்யும் நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டி பாராட்டுங்கள். நன்றியுடன் செயல்படுவது என்றைக்கும் அவசியம். அது பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிறிய விஷயங்களாக இருந்தால் கூட மனதார பாராட்டுங்கள். உங்களுக்கு அவர் கூட நின்று சமையல் செய்து கொடுத்து இருக்கலாம், உங்கள் வீட்டை சுத்தம் செய்திருக்கலாம் இப்படி அவர் செய்யும் செயலை மனதார பாராட்டுங்கள்.
அவர் செய்யும் நேர்மறை செயலில் கவனம் செலுத்துங்கள்
உங்கள் கணவர் செய்யும் எதிர்மறை விஷயங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தால் சீக்கிரமே எரிச்சல் அடைந்து விடுவீர்கள். எனவே அவர் செய்யும் நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நேர்மறை விஷயங்களை காணும் போது தானாகவே நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் கணவரும் மகிழ்ச்சி அடைவார்.
உங்கள் கணவருக்கு என்ன தேவை என்பதை கேட்க மறக்காதீர்கள்
சில நேரங்களில் உங்கள் கணவருக்கு ஓய்வு தேவைப்படலாம். அது தெரியாமல் நீங்கள் வெளியே செல்ல முடிவெடுக்காதீர்கள். அவருக்கு என்ன தேவை என்பதை பார்த்து அமைத்து கொடுங்கள். அவருக்கு பிடிக்காத ஒன்றை செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டாம். எனவே அவரின் தேவையை அறிந்த பிறகே எதையும் செய்ய முற்படுங்கள்.
நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதியுங்கள்
அவர் நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டால் அனுமதியுங்கள். நண்பர்களுடான உரையாடல் அவரை உற்சாகமாக வைக்கும். அவருக்கு என்று சில மணி நேரத்தை செலவிட அனுமதியுங்கள். சதா உங்களுடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
திருமணம் என்பது ஒரு நபரின் வேலை அல்ல
சில நேரங்களில் நீங்கள் தனியாக இருப்பது போன்று உணரலாம். ஆனால் உண்மையில் உங்களுக்கு துணையாக உங்கள் கணவர் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். அதே போல் அவருக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள். அவருடைய இலட்சியங்களுக்கு பக்க துணையாக இருங்கள். இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்துங்கள்.



Click it and Unblock the Notifications











