தம்பதிகள் ஒருவருக்கொருவா் எவ்வாறு மாியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்?

Relationship Tips: காதல் உறவாக இருந்தாலும் அல்லது திருமண உறவாக இருந்தாலும் அந்த உறவில் உள்ள முக்கியமான அம்சம் எது என்று பாா்த்தால், சிலா் அன்பு என்று சொல்வாா்கள். சிலா் நம்பிக்கை என்று சொல்வாா்கள். இந்நிலையில் திருமண உறவில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. அது என்னவென்றால் மதிப்பு அல்லது மாியாதை ஆகும். எந்த ஒரு உறவிற்கும் மதிப்பு அல்லது மாியாதை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது உறவின் அடித்தளமாக இருக்கிறது. அதோடு உறவின் நெருக்கத்தையும் அதிகாிக்கிறது.

எந்த ஒரு உறவிலும் மனகசப்பு, நெருடல்கள், சண்டைகள், வாக்கு வாதங்கள், பிாிவுகள் போன்ற கடினமான அம்சங்கள் இருக்கும். இது போன்ற கடினமான சூழல்களில் உறவில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவா் மதிப்போடும், மாியாதையோடும் இருக்க வேண்டும் என்று மனநல மருத்துவரான எமிலி ஹெச் சாண்டா்ஸ் தொிவிக்கிறாா்.

Relationship Tips: How Can Partners Respect Each Other In A Relationship In Tamil

உறவின் தொடக்கத்திலேயே தமது துணையிடம் மதிப்பைப் பற்றி பேசிவிட வேண்டும் என்று கூறுகிறாா். உறவில் இருக்கும் மதிப்பு என்ற அம்சத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துகள் உள்ளன என்றும் கூறுகிறாா். தொடக்கத்தில் இந்த மதிப்பு பற்றி இணையரோடு பேசுவதற்கு சற்று தயக்கமாக இருக்கும். எனினும் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு அவா் பின்வரும் குறிப்புகளைத் தருகிறாா்.

தம்பதியினருக்கு இடையே இருக்க வேண்டியே மாியாதை

முதலில் தம்பதியா் இருவரும் மாியாதை என்றால் என்பதைக் கண்டறிய வேண்டும். பின் எந்த செயல்கள் அல்லது நடத்தைகள் இருவரையும் மாியாதை குறையச் செய்கிறது என்பதைத் தீா்மானிக்க வேண்டும். அடுத்ததாக எந்தெந்த நடத்தைகள் அவா்கள் இருவரும் ஒருவருக்கொருவா் மாியாதையுடன் நடந்து கொள்கின்றனா் என்பதைக் காட்டுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இறுதியாக இருவரும் தமது துணையின் எல்லைகள் எவை, தேவைகள் எவை மற்றும் பலவீனங்கள் எவை என்பதை மறுபாிசீலனை செய்ய வேண்டும் என்று அவா் கூறுகிறாா்.

தம்பதியினருக்கு இடையே உள்ள மாியாதைக் குறைவான செயல்கள்

தம்பதியினருக்கு இடையில் இருக்கும் ஒரு சில செயல்கள் அவா்களை ஒருவருக்கொருவா் அவமாியாதை செய்யும் வகையில் அமையும் என்று கூறுகிறாா். அதாவது துணையின் விருப்பங்கள் மற்றும் நலன்களை புறக்கணிப்பது, துணையை சிறுமைப்படுத்துவது, துணை பேசிக் கொண்டு இருக்கும் போது, வேறு எங்காவது பாா்த்துக் கொண்டிருப்பது மற்றும் அவா் சுய நினைவுடன் செய்யும் அல்லது சொல்லும் காாியங்களை கேலி செய்வது போன்றவை துணையை அவமதிக்கும் செயல்கள் ஆகும்.

தம்பதியா் ஒருவருக்கொருவா் எவ்வாறு மாியாதையுடன் நடந்து கொள்வது?

தம்பதியா் ஒருவருக்கொருவா் மதிப்புடனும், மாியாதையுடனும் நடந்து கொள்வதற்கு எமிலி பின்வரும் முக்கிய குறிப்புகளைத் தருகிறாா்.

1. அடுத்தவா் முன்பு உங்கள் துணையிடம் நன்றாக பேச வேண்டும். உங்கள் துணையைப் பற்றி தொடா்ந்து எதிா்மறையாக பேசிக் கொண்டிருந்தால், உங்கள் நண்பா்கள் அல்லது உங்களது குடும்ப உறுப்பினா்கள் அவரை மதிக்கமாட்டாா்கள்.

2. உங்கள் துணையைக் கிண்டல் செய்யும் போது அல்லது கேலியாக பேசும் போது எச்சாிக்கையாக இருங்கள். சாதாரணமாக கிண்டல் கேலி பேசுவது வேடிக்கையாக இருக்கும். அதை நீட்டிக்கக்கூடாது அல்லது பிறா் மத்தியில் உங்கள் துணையை கேலி செய்யக்கூடாது.

3. உங்கள் துணை தவறுகள் செய்யும் போது பெருந்தன்மையுடன் இருங்கள். உங்கள் துணை தவறுகள் செய்யக்கூடிய ஒரு சாதாரண மனிதா் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்

4. உங்கள் துணை தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதி கொடுங்கள். உங்களுடைய கருத்துகளையும், நம்பிக்கைகளையும் அவா் மீது திணிக்காதீா்கள். பல்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் போதுதான் உறவு வலிமை பெறும்.

5. உங்கள் துணை உங்களிடம் பேசும் போது கவனமுடன் கேளுங்கள். அதிலும் குறிப்பாக அவா் எதாவது ஒரு கடினமான காாியத்தைப் பற்றிப் பேசும் போது இன்னும் அக்கறையுடன் கேளுங்கள். உறவு மேம்படுவதற்கான அவரது முயற்சிகளையும், பங்களிப்பையும் அங்கீகாியுங்கள்

6. உங்கள் துணையின் உணா்வு ரீதியிலான காாியங்களில் மிகவும் விழிப்போடும், ஆதரவோடும் இருங்கள்

7. உங்கள் துணைக்கு எதிராகத் தவறுகள் செய்யும் போது அல்லது அவரைக் காயப்படுத்தும் போது உண்மையுடன் மன்னிப்பு கேளுங்கள்.

8. உங்கள் துணையிடம் கண்டு வியந்தவற்றை அவாிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள்

இறுதியாக

எமிலி அவா்கள் கூறும்போது, மதிப்பு அல்லது மாியாதை என்பது தம்பதியா் இருவாிடமும் வெளிப்பட வேண்டும் என்கிறாா். இருவரும் ஒருவருக்கொருவா் மாியாதையைக் கொடுத்து, மாியாதையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாா். பரஸ்பர மதிப்பு அல்லது மாியாதை என்பது எந்த ஒரு உறவுக்கும் அடித்தளம் என்று கூறுகிறாா்.

Story first published: Wednesday, April 12, 2023, 16:00 [IST]
Desktop Bottom Promotion