Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Onam 2025: உங்கள் மலையாள காதலி/மனைவியுடன் ஓணம் பண்டிகையை இப்படி ரொமான்டிக்கா கொண்டாடுங்க...!
Onam 2025: பண்டிகைகள் வரும் போது உறவுகளுடன் இருப்பதுதான் கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தமாகும், அதுவும் இந்த நாட்களில் நெருக்கமான உறவுகளுடன் இருந்தால் பண்டிகையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இந்தியா முழுவதும் பிரபலமான மலையாளிகளின் முக்கியப் பண்டிகையான ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மலையாளிகளுக்கு, ஓணம் என்பது வெறும் மலர் கோலங்கள், சாத்ய விருந்துகள் அல்லது படகுப் பந்தயங்கள் மட்டுமல்ல, அது ஒற்றுமையைப் பற்றியது. நீங்கள் அதை உங்கள் துணையுடன் கொண்டாடும்போது, அது வெறும் ஒரு பண்டிகையாக மட்டுமல்ல, அது காதலை கொண்டாடும் பண்டிகையாகவும் மாறும். இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5, 2025 வரை கொண்டாடப்படும். உங்கள் வாழ்க்கைத்துணை மலையாளியாக இருந்தால், உங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுங்கள். உங்களின் மலையாளி வாழ்க்கைத்துணையுடன் இந்த ஓணம் பண்டிகையை எப்படி கொண்டாடலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்றாக சேர்ந்து ஓணம் சத்யாவை சாப்பிடவும்
ஓணம் பண்டிகை ஓணம் சத்யா இல்லாமல் முழுமையடையாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாளில் மலையாளிகள் அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து ஓணம் சத்யாவை சாப்பிட்டு விடுவார்கள். இந்த தனித்துவமான விருந்தை இந்த நல்ல நாளில் தம்பதிகள் ஒன்றாகத் தயாரிப்பது அவர்கள் பிணைப்பை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். உணவுகள் சரியாக இல்லாவிட்டாலும், சிரிப்பும், ஒன்றாக சேர்ந்து சமைப்பதும் அதை சிறப்பானதாக மாற்றும். இறுதியாக பாயாசத்துடன் முடிக்கவும்.
ஒரே மாதிரியான கேரள பாரம்பரிய உடைகளை அணியவும்
புத்தாடைகள் இல்லாமல் எந்த பண்டிகையும் முழுமையடையாது. இந்த நல்ல நாளில் பாரம்பரிய கசவு புடவை மற்றும் வேஷ்டி அணிவது ஒரு பண்டிகை உணர்வைத் தருகிறது. ஒரே மாதிரியான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றாக சில ரொமான்டிக்கான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அழகான பூக்கோலத்தை உருவாக்குங்கள்
இருவரும் ஒன்றாக இணைந்து காலையில் பூக்களை சேகரித்து மலர் கம்பளத்தை வடிவமைக்கவும். பூக்கோலத்தில் ஒன்றாக வேலை செய்வது நல்லிணக்கத்தைக் குறிக்கிறது மற்றும் உங்கள் நாளுக்கு ஒரு வேடிக்கையான, ஆக்கப்பூர்வமான திருப்பத்தைக் கொடுக்கிறது.
ஓணம் போட்டோசூட்டை நடத்தவும்
பூக்கோலங்கள், பாரம்பரிய விளக்கு மற்றும் சத்யாவின் வண்ணமயமான பின்னணியில் ரொமான்டிக்கான போட்டோசூட்டை மேற்கொள்ளுங்கள். இந்த தருணங்கள் இனிய நினைவுகளாக மாறும்.
ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்
பாரம்பரிய நகைகள், புத்தகம் அல்லது உங்கள் இதயத்தில் தோன்றும் காதல் செய்திகள் மற்றும் சிறிய அர்த்தமுள்ள பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் கொடுக்கும் ஓணம் பண்டிகையை குதூகலமாக கொண்டாடலாம்.
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுங்கள்
கயிறு இழுப்பது அல்லது பல்லாங்குழி போன்ற ஓணம் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். வெளியில் செல்வது சாத்தியமில்லை என்றால், பண்டிகை உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்க வீட்டிற்குள்ளேயே இருவரும் வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடுங்கள்.
ஓணம் தொடர்பான படங்களை ஒன்றாக பாருங்கள்
மலையாளக் கிளாசிக் அல்லது உங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து வாழைப்பழ சிப்ஸ், பப்படம் மற்றும் பாயசத்துடன் திரைப்படப் போட்டியை அனுபவிக்கவும்.
சிறிய பயணத்தை மேற்கொள்ளுங்கள்
நீங்கள் இருக்கும் பகுதிகளைப் பொறுத்து ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்ளுங்கள். அது சுற்றுலாத்தலமாகவோ, ஏன் கோவிலாகவோ கூட இருக்கலாம். ஒருவேளை நீங்கள் கேரளாவில் இருந்தால் படகுப்போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய கொண்டாட்டங்கள் போன்றவற்றை பார்க்க செல்லுங்கள்.
ஓணம் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஒற்றுமையைப் பரப்புவது பற்றியது. தம்பதிகளுக்கு, கலாச்சார சடங்குகளை காதல் தருணங்களுடன் கலக்க இது சரியான நேரம். இந்த எளிமையான மற்றும் ரொமான்டிக்கான செயல்பாடுகள் உங்கள் ஓணத்தை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றும்.



Click it and Unblock the Notifications
