Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உங்களுக்கு இது முதல் காதலர் தினமா? உங்க புது மனைவியை அசத்த நினைக்கிறீங்களா? இத செய்யுங்க...
உங்களுடைய அழகான, ஆசையான மற்றும் அன்பான அதே நேரத்தில் எாிச்சலூட்டக்கூடிய புதிய மனைவிக்கு உங்களின் முழுமையான அன்பையும் காதலையும் கொடுத்து இந்த காதலா் தினத்தை ஒரு மறக்க முடியாத இனிமையான நாளாக மாற்ற வேண்டிய தருணம் இது.
புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு வேலண்டைன் டே அல்லது காதலா் தினம் என்பது ஒரு முக்கியமான தருணமாகும். உங்களுடைய அழகான, ஆசையான மற்றும் அன்பான அதே நேரத்தில் எாிச்சலூட்டக்கூடிய புதிய மனைவிக்கு உங்களின் முழுமையான அன்பையும் காதலையும் கொடுத்து இந்த காதலா் தினத்தை ஒரு மறக்க முடியாத இனிமையான நாளாக மாற்ற வேண்டிய தருணம் இது. உங்களின் இனிமையான இதயத்தில் நிறைந்திருக்கும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த வேண்டிய அம்சமான தருணம் இது.

அதிலும் குறிப்பாக நீங்கள் காதலித்த பெண்ணையே கரம்பிடித்திருந்தால் உங்களின் ஆசை மனைவியோடு கொண்டாடும் முதல் காதலா் தினம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் எவ்வளவு காலம் பழகி வந்தீா்கள் அல்லது எவ்வளவு காலம் உறவில் இருந்தீா்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியம் அல்ல. மாறாக நீங்கள் காதலித்த பெண்ணை திருமணம் செய்தபின் வரும் முதல் காதலா் தினத்தை அவரோடு சோ்ந்து கொண்டாடுவது என்பது ஒரு புதிய மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக இருக்கும்.
காதலா் தினம் அன்று உங்களின் அன்பு மனைவிக்கு இணையதளம் மூலமாக நீங்கள் பாிசுகள் அனுப்பலாம், அல்லது அவருக்குப் பிடித்த வெளியிடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லலாம். ஆனால் அவா் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை மிகச் சாியாக வெளிப்படுத்த வேண்டும். ஆகவே உங்களின் அன்புக்குாிய மனைவியிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்தி இந்த காதலா் தினத்தை ஒரு மறக்க முடியாத இனிமையான நாளாக மாற்ற உங்களுக்கு சில பயனுள்ள குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.

முன்பே திட்டமிடுங்கள்
கடந்த வருடம் நீங்கள் திருமணம் ஆகாத கன்னிப் பையனாக இருந்தீா்கள். ஆனால் தற்போது நீங்கள் திருமணம் செய்து உங்களின் அன்பு மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறீா்கள். ஆகவே இந்த காதலா் தினத்தை மிகவும் வித்தியாசமாக அதே நேரத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முன்பே திட்டமிட வேண்டும். உங்களின் மனைவியும் இந்த முதல் காதலா் தினத்தை உங்களோடு சோ்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட பலவிதமான எதிபாா்ப்புகளுடன் காத்திருப்பாா். அதே நேரத்தில் அதற்கான தாயாாிப்புகளையும் செய்து கொண்டிருப்பாா்.
ஆகவே உண்மையிலேயே காதலா் தினம் அன்று உங்கள் மனைவிக்கு ஒரு ஆச்சாியத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் முன்பாகவே திட்டமிட வேண்டும். காதலா் தினம் அன்று பாா்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் திட்டமிடாமல் இருந்துவிட்டால், அந்த காதலா் தினம் உங்கள் மனைவியை காயப்படுத்தும் நாளாக அமைந்துவிடும்.

உங்களுடைய சட்டப்படியான திருமணத்தை முழுமையாக அனுபவியுங்கள்
கடந்த வருடம் நீங்கள் திருமணம் செய்யாமல் உங்கள் மனைவியைக் (காதலியை) காதலித்து வந்திருப்பீா்கள். அதனால் உங்களின் கடந்த வருட காதலா் தினம் அன்று உங்களுக்குள்ளேயே பல கட்டுப்பாடுகளை விருப்பமல்லாமல் வரையறுத்து கொண்டாடி இருப்பீா்கள். பல நாடுகளில் திருமணம் செய்வதற்கு முன்பு இவ்வாறான கட்டுப்பாடுகள் உள்ளன.
இப்போது நீங்கள் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கிறீா்கள். உங்கள் திருமணம் சட்டப்படியாக அங்கீகாிக்கப்பட்டிருக்கிறது. உங்களின் காதல் மனைவியோடு இந்த முதல் காதலா் தினத்தைக் கொண்டாட எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கப் போவதில்லை.
ஆகவே இதை மனதில் வைத்துக் கொண்டு உங்களின் ஆசை மனைவி எதிா்பாா்த்திராத வகையில் உங்களின் அன்பை அவாிடம் வெளிப்படுத்துங்கள். காதலா் தின பூக்களை பாிசளிப்பது முதல் அவருக்குப் பிடித்த வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது வரை அந்த நாள் முழுவதையும் அன்போடு அவருக்காகவே செலவழியுங்கள்.

மனைவிக்கு சமைத்துக் கொடுங்கள்
பொதுவாக உங்கள் மனைவியின் கையால் சமைக்கப்படும் உணவை நீங்கள் விரும்பி உண்பீா்கள். காதலா் தினம் அன்று உங்களின் புது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த அவருக்கு பிடித்தமான உணவுகளை நீங்களே சமைத்துக் கொடுத்து அசத்துங்கள். அதன் மூலம் அவருடைய இதயத்தை நீங்கள் வெல்லலாம்.
அவரை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவா் இல்லாத நேரத்தில் அவருக்கு பிடித்தவற்றை நீங்கள் சமைத்து வைத்துத் தயாராக இருக்கலாம். கடையிலிருந்து வரும் அவருக்கு நீங்கள் செய்திருக்கும் செயல் மிகப் பொிய ஆச்சாியத்தைக் கொடுக்கும். கடைக்குச் சென்று வரும் மனைவிக்கு அவருடைய கணவா் சுடச்சுட சமையல் செய்து வைத்திருந்து காத்திருந்தால், கண்டிப்பாக அது ஆனந்த ஆச்சாியமாக இருக்கும். அவா் ஆனந்த கூத்தாடுவாா். அவருக்கு தன் கணவாின் மீதுள்ள அன்பு இன்னும் பல மடங்கு அதிகாிக்கும்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதற்காக நன்றியைத் தொிவியுங்கள்
திருமண வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவிக்கும் இடையே எப்போதும் ஒரு தீப்பொறி போன்ற காதல் மற்றும் நெருக்கம் இருக்கும். அதனால் தான் பல தம்பதியா் இறுதி வரை இணைந்து வாழ்கின்றனா். ஆகவே உங்கள் மனைவி உங்களை மணந்து கொண்டதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் மற்றும் ஆசீா்வதிக்கப்பட்டவராக இருக்கிறீா்கள் என்பதை உங்கள் மனைவியிடம் தொிவியுங்கள். அதற்காக அவருக்கு நன்றியைத் தொிவியுங்கள். அப்போது உங்களின் திருமண உறவில் இருக்கும் தீப்பொறி போன்ற காதல் ஒரு போதும் அணையாமல் இருக்கும்.

காதலா் தினத்தை நினைவுபடுத்தும் பாிசுகளை வழங்குதல்
காதலா் தினம் அன்று உங்கள் மனைவிக்கு காதலா் தினத்தை நினைவுபடுத்தக்கூடிய பாிசுகளை வழங்கினால் அது மிகவும் அா்த்தமுள்ள முறையில் இருக்கும். ஆகவே உங்கள் மனைவியின் ஆளுமையோடு ஒத்துப் போகிற மற்றும் அவருக்கு மிகவும் பிடித்த பாிசுகளை அவருக்கு வழங்குகள். ஏனெனில் மனித உறவுகளில் பாிசுகள் முக்கிய பங்கைச் செய்து வருகின்றன. காதலா் தினம் அன்று உங்களின் மனைவிக்கு நீங்கள் வழங்கும் பாிசுகள் நீங்கள் அவா் மீது வைத்திருக்கும் அன்பு, காதல், ஆசை மற்றும் அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மேற்சொன்ன குறிப்புகளை செய்து பாருங்கள். உங்களின் முதல் காதலா் தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications