Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
உங்க கணவன் & மனவிகிட்ட இந்த மோசமான பழக்கம் இருந்தா...நீங்க நரகத்துல மாட்டிகிட்டீங்கனு அர்த்தமாம்!
தம்பதிகளிடையே காதல் அல்லது இனிமையான ஆச்சரியம் எதுவும் இல்லாதபோது திருமணம் முற்றிலும் தோல்வியடையத் தொடங்குகிறது. உறவை உயிர்ப்போடு வைத்திருக்க நீங்க சில ஆச்சரியங்களை செய்ய வேண்டும்.
பொதுவாக திருமண உறவு பல கடமைகள், பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கிறது. ஆண், பெண் உறவு என்பதே பல சிக்கல் நிறைந்ததாக உள்ளது. உறவில் மகிழ்ச்சியாக இருக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் உறவில் கவனிக்க தவறிய சில சிறிய விஷயங்கள் கூட உங்கள் உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக உறவில் காதல், நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு இருவருக்கும் இருக்க வேண்டும். இது உறவை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக கொண்டு செல்ல உதவும். உறவில் நெருக்கம் மிக அவசியம். அவை, குறையும்போது உறவில் பல சிக்கல்கள் நிகழலாம்.

சிலர், தாங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப செயல்படலாம். இது அவர்களுடைய துணையை காயப்படுத்தலாம். உங்கள் உறவு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் சில விஷயங்களை செய்துதான் ஆக வேண்டும். சிலர், உறவில் பெரிய மேரேஜ் கில்லராக இருப்பார்கள். எதையும் பற்றியும் யோசிக்காமல் பல விஷயங்களை செய்துவிடுவார்கள். அவை, என்னென்ன? நீங்கள் எப்படி அவர்களை அடையாளம் காணலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கசப்பாக இருப்பது
திருமண உறவில் தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுவது, உறவில் விரிசலை ஏற்படுத்தும். அடக்கப்பட்ட மனக்கசப்பு ஒரு திருமண உறவில் நிறைய கசப்பைக் கொண்டுவரும். ஆதலால், மனக்கசப்பு ஏற்படுவது என்ன காரணம் என்பதை அறிந்து, தம்பதிகள் அதை சரி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உரையாடல் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும்.

அனுமானங்களை உருவாக்குதல்
உங்கள் துணையிடம் கேட்பதற்குப் பதிலாக, அவர் என்ன உணர்கிறார் என்பதைப் பற்றி நீங்களே அனுமானங்களைச் செய்வது உண்மையில் தவறானது. ஏனெனில், ஒருவரை பற்றி ஒருவர் எப்போதும் முழுவதுமாக புரிந்துகொண்ட செயல்பட முடியாது. அவர்கள் நினைப்பதற்கு நேரெதிராக நீங்கள் அனுமானங்களை உருவாக்கி வைத்திருக்கலாம். ஆதலால், எதுவாக இருந்தாலும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுங்கள்.

ஆச்சரியங்களின் பற்றாக்குறை
தம்பதிகளிடையே காதல் அல்லது இனிமையான ஆச்சரியம் எதுவும் இல்லாதபோது திருமணம் முற்றிலும் தோல்வியடையத் தொடங்குகிறது. உறவை உயிர்ப்போடு வைத்திருக்க நீங்க சில ஆச்சரியங்களை செய்ய வேண்டும். ஒருவர் மேல் உள்ள ஈர்ப்பை அல்லது காதலை நீங்கள் வெளிகாட்ட வேண்டியது அவசியம்.

விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வது
உங்கள் துணையை சாதாரணமாக எடுத்துக்கொள்வது அவர்களை மிகவும் ஏமாற்றம் மற்றும் பயனற்றதாக உணரக்கூடும். ஆமாம், அவர்களை சிறப்பானவர்களாக உணர வையுங்கள். அதற்கு அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லுங்கள் அலல்து செயல்கள் மூலம் காட்டுங்கள்.

சங்கடமான மௌனம்
உங்கள் இருவருக்கும் இடையே ஒரு சங்கடமான மௌனம் காற்றை நிரப்பும் போது, உங்கள் திருமணம் மெதுவாக சிதைகிறது. எப்போதும் எல்லாவற்றையும் மனதில் அடக்கி வைக்காதீர்கள். இது உங்களை சங்கட்டமாகவும் மன அழுத்தமாகவும் உணர வைக்கும். ஆதலால், உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுங்கள்.

சுயநலமாக இருப்பது
உங்கள் தேவைகளைப் பற்றி மட்டுமே சுயநலமாக இருப்பது, பெரிய தவறான விஷயம். உங்கள் துணையின் தேவைகளைப் பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளாமல் இருப்பது, திருமண உறவில் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். நீங்கள் உங்கள் துணையை பற்றி யோசிப்பதே இல்லை என்று அவர்களுக்கு விரக்தி ஏற்படக்கூடும்.

பாலியல் அதிருப்தி
தம்பதிகளுக்கு இடையே திருமண உறவு பிரிந்து செல்வதற்கு பாலியல் அதிருப்தி ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பெரும்பலான தம்பதிகளுக்கு பாலியல் வாழ்க்கை சரியாக அமைவதில்லை. இது அவர்களின் உறவில் நெருக்கத்தை குறைக்கிறது. மேலும், வேறொருவர் மீது ஈர்ப்பு வர காரணமாகவும் அமையலாம். தம்பதிகள் இருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதில்லை
மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் துணையைப் பாதுகாக்கவோ அல்லது அவர்களுக்காக நிற்கவோ இல்லையென்றால், உங்கள் துணை பெரிய அளவில் ஏமாற்றம் அடையலாம். ஒரு துணை உங்களிடம் எதிர்பார்ப்பது, அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை தான்.



Click it and Unblock the Notifications