Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அவர்களின் இந்த செயல்கள்தான் காட்டிக்கொடுக்கிறதாம் தெரியுமா?
ஆண்களைப் பொறுத்தவரையில் தப்பு செய்வார்கள் ஆனால் அவர்களே தங்களை காட்டிக்கொடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக கள்ள உறவில் ஈடுபடும்போது தங்களின் குற்ற உணர்ச்சியை மறைக்க இவர்கள் பல செயல்களில் ஈடுபடுவார்கள்.
கணவன், மனைவி உறவுக்குள் பிரிவு ஏற்பட முதல் காரணமாக இருப்பது மற்றொருவருடன் ஏற்படும் தொடர்புதான். இன்று கள்ள உறவு பற்றி செய்தி இல்லாமல் ஒருநாளை கூட கடக்க முடியாது என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். கள்ள உறவை பொறுத்தவரையில் ஆண்கள், பெண்கள் என இருவருமே பரவலாக இதில் ஈடுபடுகின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரையில் தப்பு செய்வார்கள் ஆனால் அவர்களே தங்களை காட்டிக்கொடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக கள்ள உறவில் ஈடுபடும்போது தங்களின் குற்ற உணர்ச்சியை மறைக்க இவர்கள் பல செயல்களில் ஈடுபடுவார்கள். புத்திசாலி மனைவியாக இருந்தால் கணவரின் செயல்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே இதனை கண்டறிந்து விடலாம். இந்த பதிவில் ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் அவர்களின் செயல்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

வித்தியாசமாக செயல்பட தொடங்குவார்
மனைவியை ஏமாற்றும் கணவர்கள் முதலில் தங்கள் மனைவியிடம் இருந்து விலகி நடக்கத் தொடங்குவார்கள். ஏனெனில் மோசடி செய்யும் கணவர்கள் தங்களின் தவறையும், குற்ற உணர்ச்சியையும் மறைக்க மனைவியின் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பார்கள். உங்கள் கணவர் உங்களை புறக்கணிக்கத் தொடங்கினாலோ அல்லது வித்தியாசமாக நடக்கத் தொடங்கினாலோ அவரை கண்காணிக்க தொடங்குங்கள்.

திடீரென பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் கொடுப்பது
ஏமாற்றும் கணவரின் முக்கியமான அறிகுறி மனைவி மீது திடீரென அக்கறைக் காட்டுவது, பாராட்டுவது மற்றும் பரிசுகள் கொடுப்பது போன்றதாகும். கணவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் அவர்களின் குற்ற உணர்ச்சிதான். தங்களின் புது உறவை மனைவியிடம் மறைப்பதற்கு கணவர்பயன்படுத்தும் ஆயுதம்தான் இந்த பரிசுகளும், பாராட்டும். குற்றமுள்ளவர்களின் மனஅழுத்தம் அவர்கள் யாருக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு பிராய்ச்சித்தம் செய்ய அழுத்தம் கொடுக்கும்.

மாலையில் பிரெஷ்ஷாக வீட்டுக்கு வருவது
உங்கள் கணவர் மாலையில் வீட்டுக்கு வரும்போது நாள் முழுவதும் வேலை செய்து களைத்து போய் வந்தால் அவர்கள் உடல் முழுவதும் வியர்வை வாசனை இருக்கும். ஆனால் மாலை வீட்டுக்கு வரும்போது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தால் அவர் தங்களின் இரகசிய காதலியுடன் " நெருக்கமாக " இருந்து விட்டு அதனை மறைக்க புத்துணர்ச்சி வேடம் போடுகிறார் என்று அர்த்தம். மாலை நேரம் தாமதமாக வந்தால் உங்கள் கணவரை தீர விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதிக பொறாமை
ஒருவர் மனதில் குற்ற உணர்ச்சி இருக்கும்போது அவர் அதே குற்றங்களை மற்றவர் மீது சுமத்த முற்படுவார்கள். எனவே கணவர் ஏமாற்றுவதற்கான முக்கிய அறிகுறி அவர் தங்கள் மனைவியின் மீது தன்னை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டுவார்கள். தன்னைப் போலவே தன் மனைவியும் செய்தால் என்ன செய்வதென்று இவர்கள் தினமும் பயந்து கொண்டே இருப்பார்கள்.

தோற்றம் மற்றும் பழக்கம் பற்றி குறைகூறுவது
உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் தோற்றத்தைப் பற்றி தொடர்ந்து புகார் செய்வது அவர் வேறொருவரைப் பார்த்து உடல் அல்லது உணர்ச்சிரீதியான தொடர்பு வைத்துள்ளதற்கான மற்றொரு அறிகுறியாகும். இதன்மூலம் அவர் தன்னுடைய எதிர்பார்ப்புகளை மனைவியால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது என்று குற்றம் சாட்தி தங்களின் துரோகத்தை நியாயப்படுத்துவார்கள். எனவே திடீரென உங்கள் கணவர் உங்கள் செயல்களின் மீது குற்றம் சாட்டத் தொடங்கினால் அவரின் நடத்தையில் சந்தேகப்படுங்கள்.

ஜிம்மிற்கு ஆர்வமாக செல்வது
நீங்கள் எவ்வளவோ முறை சொல்லியும் ஜிம்மிற்கு செல்லாத உங்கள் கணவர் திடீரென ஜிம்மிற்கு செல்வதில் ஆர்வம் காட்டினால் அதற்கு அவர் உண்மையாக ஆரோக்கியத்தின் மீது அக்கறை வந்திருக்க வேண்டும் இல்லையெனில் தங்கள் புதிய காதலிக்கு தங்களின் சிறந்த தோற்றத்தை காண்பிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

உங்கள் சமூக வலைதளத்தில் அக்கறை காட்டுவது
திடீரென உங்கள் கணவர் நீங்கள் முகப்புத்தகத்தில் இடும் போட்டோக்களுக்கு லைக் போடுவார், கமெண்ட் செய்வார், உங்களின் அனைத்து சமூகவலைத்தள அசைவுகளை கண்காணிப்பார்கள். ஆனால் கடந்த காலங்களில் அவர் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார்கள். இது உங்களுக்கு நேர்ந்தால், உங்கள் கணவர் உங்களை ஏமாற்றியதற்காக குற்ற உணர்ச்சியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர் திடீரென்று சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான ஒரே காரணம் இதுதான்.

செல்போன் பாதுகாப்பு
உங்கள் கணவர் தங்களின் செல்போனை எப்பொழுதும் உங்களிடம் இருந்து மறைத்து வைத்திருந்தாலோ அல்லது உங்கள் முன் செல்போன் உபயோகிப்பதை தவிர்த்தாலோ, அவரின் போன் பாஸ்வேர்டை உங்களிடம் இருந்து மறைத்து வைத்திருந்தால் அவர்களுக்கு உங்களைத் தவிர வேறொரு தொடர்பு உள்ளது என்று அர்த்தம். அவர்களின் போனை நீங்கள் கேட்கும்போதெல்லாம் அவர் உங்கள் மீது கோபப்பட்டால் கண்டிப்பாக அவரிடம் தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

பாலியல் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவது
உங்கள் கணவரின் திடீர் மாற்றத்தால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் அதீத மற்றம் ஏற்படும். ஒன்று அதிகமாக உடலுறவு கொள்வார்கள் அல்லது சுத்தமாக உடலுறவை நிறுத்தி விடுவார்கள். உங்கள் கணவருக்கு உங்கள் மீது திடீர் மோகம் அதிகரித்து அதிக ஆர்வத்துடன் உடலுறவு கொண்டால் உங்கள் கணவரின் பாலியல் ஆர்வத்தை வேறொரு பெண் தூண்டியிருக்கிறார் என்று அர்த்தம் அல்லது உங்களுக்கு அவர் செய்யும் துரோகத்திற்கு உங்களுக்கு அவர்கள் செய்யும் கைமாறென நினைத்து செயல்படுவார்கள்.



Click it and Unblock the Notifications