Latest Updates
-
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள்
சலிப்பாக இருக்கும் உங்க திருமண வாழ்க்கையை மீண்டும் உற்சாகமாக மாற்ற நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
ஒன்றாக வெளியே செல்லும் டேட்டிங் முறையை புதுப்பிக்கவும். நீங்கள் இதுவரை சென்ற அல்லது செல்லாத உணவகத்திற்கு இரவு நேர விருந்துக்கு செல்லுங்கள். சில சுவாரஸ்யமான விஷயங்களோடு டேட்டிங்கில் ஈடுபடுங்கள்.
திருமண உறவு என்பது பல சிக்கல்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில், பொதுவாக ஆண், பெண் உறவில் பலவிதமான பிரச்சனைகள் எழும். இதில், திருமணமான புதிதில் தம்பதிகளுக்குள் இருக்கும் சந்தோஷம் நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பிக்கும். காதலும், உறவில் ஈர்ப்பும் குறையும்போது அங்கு விரிசல் ஏற்படும். சிறிது காலத்திற்குப் பிறகு திருமணத்தில் அந்த தீப்பொறியை இழப்பது ஒரு பொதுவான அனுபவமாகும். அதனால், நீங்கள் உங்கள் திருமண உறவை உயிர்ப்போடு வைத்திருக்க தொடர்ந்து உழைக்க வேண்டும்.

மகிழ்ச்சியாகவும், ஈர்ப்புடனும் மற்றும் வேடிக்கையாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை தொடர வேண்டும். எனவே, அதற்குப் பரிகாரமாக, உங்கள் திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்த காணாமல் போன தீப்பொறி விஷயங்களை புதுப்பிக்க உதவும் சில வழிகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உடலுறவில் புதிய விஷயங்களை முயற்சிக்கவும்
சில சமயங்களில், ஒரே மாதிரியான உடலுறவு உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். பல நாட்களாக அல்லது வருடங்களாக ஒரே வழக்கத்தில் இருப்பதால், சலிப்படையத் தொடங்குவீர்கள். அதில், நீங்கள் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும். நாம் அனைவரும் காமசூத்ராவின் உலகத்திற்கு அந்தரங்கமானவர்கள். இணையத்தில் உள்ள பல தகவல்கள், செக்ஸ் பொம்மைகள் மூலம் நீங்கள் பல புதிய விஷயங்களை செய்யலாம். ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்துவிட்டு, தம்பதிகள் இருவரும் விருப்பங்களை பேசிக்கொண்டு செயலில் ஈடுபடுங்கள். புதிதாக ஏதாவது முயற்சிக்கவும்.

ஒன்றாக பயணம் செய்யுங்கள்
தம்பதிகள் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்வது ஒருபோதும் சலிக்காது. அதுவும் ஒவ்வொரு முறையும் புதிய இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்யலாம். பரந்துவிரிந்த உலகில் செல்வதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளன. எனவே, அங்கு பயணங்களைச் செய்யுங்கள். உங்கள் கேமராவை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் மகிழ்ச்சியை நினைவுகளை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு செல்லுங்கள். தம்பதிகள் ஒன்றாக பயணம் செய்வது உங்களுடைய உறவை வலுப்படுத்துகிறது.

பைத்தியக்காரத்தன செயல்கள்
ஆரம்பத்தில் நீங்கள் இருவரும் புதிதாக இருக்கும்போது பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்தீர்கள். அதை மீண்டும் செய்யுங்கள். அந்தச் செயல்பாடுகள், பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்து, நீங்கள் இருவரும் முன்பு செய்த முயற்சியை நினைவில் கொள்ளுங்கள். அது ஏன் நிறுத்தப்பட்டது என்று சிந்தியுங்கள். உங்களால் முடிந்தால் அதைச் செய்யுங்கள். இது நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்குள் மகிழ்ச்சியையும் ஒரு பைத்தியக்காரத்தன காதலும் இருக்கும்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
தொடர்ச்சியான நச்சரிப்பு மற்றும் வாக்குவாதங்கள் மகிழ்ச்சியற்ற திருமண உறவிற்கு வழிவகுக்கும். எனவே அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அந்த எதிர்மறை அனைத்தையும் கட்டுப்படுத்த பழகுங்கள். உங்கள் திருமணத்தில் நேர்மறையான விஷயங்களைப் பாருங்கள். உங்கள் பங்குதாரர் அதைக் கவனிப்பார். ஒருவேளை அவரும் அல்லது அவளும் ஒரு படி முன்னேறி, அந்த தீப்பொறியை மீட்டெடுப்பதில் உங்களை சரியான வழியில் சந்திக்கலாம்.

ஒன்றாக டேட்டிங்கிற்கு செல்லுங்கள்
ஒன்றாக வெளியே செல்லும் டேட்டிங் முறையை புதுப்பிக்கவும். நீங்கள் இதுவரை சென்ற அல்லது செல்லாத உணவகத்திற்கு இரவு நேர விருந்துக்கு செல்லுங்கள். சில சுவாரஸ்யமான விஷயங்களோடு டேட்டிங்கில் ஈடுபடுங்கள். செயல்களை ஒன்றாக திட்டமிடுங்கள். ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்து ஆச்சரியப்படுங்கள், காரணமின்றி கொண்டாடுங்கள். ஒருவருக்கொருவர் மென்மையாக இருங்கள். இந்த சிறிய விஷயங்கள் பெரும்பாலும் உடைந்த உறவுகளை சரிசெய்யும்.

தொடர்பு கொள்ளுங்கள்
தவறான தொடர்பு அல்லது எந்த தொடர்பும் எந்த உறவையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. ஒருவருக்கொருவர் விரக்தியடைந்த பிறகு தொடர்பு இல்லாததால் அந்த தீப்பொறியை நீங்கள் இழந்திருக்கலாம். அதை செய்யாதீர்கள் அதில், சில வேலைகளை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் சொல்லி ஒரு வழியைக் கண்டறியவும். ஆரோக்கிமான தொடர்பு ஒரு உறவுக்கு அவசியம்.



Click it and Unblock the Notifications