Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?
திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?
பொதுவாகவே திருமணமான பெண்கள் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்வதும், திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதும் நாம் சினிமாக்களில் மட்டுமின்றி சமூகத்தில் சராசரியாக காணும் விஷயம் தான். திருமணமான பெண்கள் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்ள வேறு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால், திருமணமான பிறகு ஆண்கள் வேறு பெண்கள் மீது காதல் கொல்வதற்கு அப்படி என்ன காரணம் இருக்க முடியும்?
ஒருவேளை தாம்பத்தியம் மட்டும் தான் தேவை என்றால்... அது திருமண வாழ்விலேயே கிடைத்துவிடும். வேறு என்ன வேண்டி? தான் நினைத்தது எது நடக்கவில்லை என்பதற்காக ஆண் திருமணமான பிறகும் வேறு பெண்கள் மீது காதல் கொள்கிறான்... இதற்கான காரணங்கள் என்று கூறப்படும் ஆறு விஷயங்கள்...

கவன ஈர்ப்பு!
எத்தனை வருட உறவாக இருந்தாலும் சரி, ஆண்கள் தங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் கவன ஈர்ப்பு. அதாவது தனது துணை தங்கள் மீது ஈர்ப்பு கொண்டிருக்க வேண்டும். தங்களை ஒரு பெரிய விஷயமாக கருத வேண்டும்.
ஒருவேளை, திருமணத்திற்கு பிறகு பெண்கள் அதான் கல்யாணம் ஆகிடுச்சே.. இனிமேல் என்னன்னு லூசுல விட்டா... ஆண்கள் திருமணத்திற்கு பிறது தங்கள் மீது வேறு யாரேனும் பெண்கள் கவன ஈர்ப்பு கொண்டிருந்தால்... நிலைமை கொஞ்சம் தடுமாற வாய்ப்புகள் உண்டு.

விளையாட்டு!
நாள் முழுக்க வேலை, வேலை என்று உழைத்து சோர்ந்து போகும் ஆண். வேலை முடித்த பிறகு கொஞ்ச நேரம் விளையாடி பொழுதை கழிக்க நினைப்பது உண்டு. இங்கே விளையாட்டு என்பது பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் பேசுதல், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என அனைத்தும் பொருந்தும். அந்த நேரத்தில், தன் துணையிடம் இருந்து கிடைக்காத ஒரு பொழுதுபோக்கு, நேரம் கடத்தும் தருணம் வேறு பெண்ணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில் ஆண்கள் ஃபீல் குட் என அந்த பெண்ணுடன் நேரம் செலவழிக்க நினைக்கலாம்.

குமுதா ஹேப்பி தான் முக்கியம்!
ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் சந்தோஷத்திற்கு தாங்கள் காரணமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எப்படியாவது தங்கள் துணையை திருப்தி படுத்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், தொடர்ந்து தன்னால் துணை சந்தோஷமாக இல்லை, அவர் தட்டிக்கழித்து கொண்டே போகிறார் எனும் பட்சத்தில்... யார் ஒருவர் தன்னுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறாரோ, யார் ஒருவர் தன்னை மகிழ்ச்சியாக உணர செய்கிறார்களோ அவர்களுடன் நெருக்கமாக பழக ஆண்கள் கருதலாம்.

உதவும் கரங்கள்!
உதவி என்றால்... கோடு போட உதவி கேட்டால் ரோடு போட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருப்பவர்கள் ஆண்கள். ஆகையால், யாராவது பெண்கள் தங்களை மதித்து உதவி என்று கேட்டால் உடனே அவர்களுடன் நெருக்கம் காமிக்க துவங்கும் வழக்கம் ஆண்கள் மத்தியில் காணப்படுகிறது. அதே சமயத்தில் எப்போது பார்த்தாலும் தங்களிடம் தொட்டதற்கு எல்லாம் உதவி கேட்டாலும் ஆண்கள் சலித்துக் கொள்வார்கள்.

ஜெயிக்கணும்!
பெரும்பாலான ஆண்கள் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காண்பிப்பதற்கு காரணம்... வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகம் இருக்கும். எதையும் ஸ்போர்டடிவாக எடுத்துக் கொள்வார்கள்.
சின்ன, சின்ன விஷயங்களில் கூட தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், விளையாட்டில் ஆர்வம் காண்பிக்கும் பெண்கள் உடன் எளிதில் நெருக்கமாக பழகும் பழக்கம் ஆண்களிடம் இருக்கிறது.

நாடகங்கள் பிடிக்காது!
ஆண்கள் ரியாலிட்டியில் வாழ்பவர்கள். பெண்கள் கொஞ்சம் நாடகத்தனமாக காதலை விரும்புபவர்கள். தனது துணை எதிர்பார்க்கும் அல்லது செய்யும் டிராமாக்கள் பிடிக்காமல் போகும் பட்சத்திலோ, தங்களை போல எளிமையாக இருக்காமல் போகும் பட்சத்திலோ ஆண்கள் வேறு பெண்கள் மீது ஆர்வம் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
ஆண்களின் ஆசை மிகவும் எளிமையானது, உழைக்க வேண்டும், விளையாட வேண்டும்.. கொஞ்சம் கேளிக்கை அதனுடன் தாம்பத்தியம். இதில் ஏதனும் சிக்கல் அல்லது தாக்கம் உண்டாகும் போது ஆண்கள் மனது தடுமாற வாய்ப்புகள் உண்டு.



Click it and Unblock the Notifications











