Latest Updates
-
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
என்னைய மன்னிப்பீங்களா?குற்றவுணர்ச்சியால் நிகழ்ந்த கொடூரம்! My story #161
தன் மனைவி மற்றும் நண்பர்களிடம் ஒருவன் மன்னிப்பு கேட்கிறான். அவன் எதற்காக இந்த மன்னிப்பு கேட்கிறான், அவனை மன்னிப்பு கேட்க தூண்டிய சம்பவம் எது என்பது குறித்த கதை.
எப்படியாவது இந்த மன்னிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த மன்னிப்பு கேட்கும் நேரம் இது தானா என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும், இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படியாவது என்னை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் இது.
நான் இப்படி இருப்பது சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, எல்லாமே ஜாலியானதாகவே எடுத்துக் கொள்ளும் ஆள் தான் நான்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு வலிகளையும் துரோகங்களையும் கொடுத்திருக்கிறேன். உண்மையில் இது இவ்வளவு வலி தரக்கூடியதாக இருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.
என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பள்ளிக்காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. எனக்கு கிடைக்காததா..... எனக்கென்ன குறை என்னைய தேடி ஆயிரம் பேர் வருவாங்க என்று சொல்லிக் கொள்வேன்.

சின்ன சின்ன காதல்கள் :
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கும் என்னுடன் படித்த வகுப்புத் தோழி ஒருத்திக்கும் காதல். இங்கே நான் இதனை காதலாக எல்லாம் பார்க்கவில்லை. எனக்கு ஒரு ஃபன் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட டைம்பாஸ் என்று கூட சொல்லலாம் அவ்வளவு தான்.
இங்கே ஃபன் எனக்கு மட்டும் தானா அல்லது இருவருக்குமா என்று நான் யோசிக்கவில்லை.

ப்ரேக் அப் :
வழக்கமான காதலர்களைப் போல நிறைய சண்டைகளும் எங்களுக்குள் எழும், அவளைத் தான் நான் காதலிக்கவில்லையே வெறும் டைம் பாஸ் தானே என்று சொல்லி அவளை என்னோடு தக்கவைத்துக் கொள்ள நான் முயற்சிக்கவில்லை.
கெஞ்சினாள். என்னோடு சண்டையிட்டு திமிருடன் போனாள் அல்லவா? நான் இல்லாததை உணரட்டும் அந்த வலியை அனுபவிக்கட்டும் என்று வீம்பாக பேசாமலேயே இருந்தேன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு நாள் திடீரென்று வந்து நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்றால் அவளது அந்த பதில் என்னை ஒன்றும் செய்யவில்லை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து விட்டேன்.

இதெல்லாம் ஒரு மேட்டரா :
அதன் பிறகு இன்னொரு ரிலேசன்ஷிப். என்னுடைய இதே மனநிலையினால் அதுவும் விலகிச் சென்றது. அட நம்ம இது டைம் பாஸுக்கு தான பண்றோம் இது போனா இன்னொன்னு.... என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
பணியிடத்திற்கு சேர்ந்தும் இதே பொழப்பு தான். நான் ஏன் காதலில் மட்டும் விளையாடினேன் என்று யோசித்தால் தனிப்பட்ட காரணமாக எதுவும் எனக்கு தெரியவில்லை, ஏன் அதனை நான் காதல் என்று கூட நினைத்திட வில்லை. இங்கே தான் ஒரு ஆண் பெண்ணும் சிரித்துக் கொண்டால் கூட காதல் என்று பட்டம் சூட்டுவார்களே.
நான் இதைக் காதலாக பார்க்கவில்லை என்று கூலாக கடந்து வந்து கொண்டிருந்தேன்.

பொண்ணுங்கனாளே கண்ணீர் :
நான் சண்டையிடும் போதும், பிரேக் அப் சொல்லும் போதும் சொல்லி வைத்தாற் போல என்னுடன் பழகியிருந்த அத்தனை பேரும் கண்ணீர் வடித்தார்கள், கெஞ்சினார்கள். நீ இல்லாம என்னால இருக்க முடியாது, என் காதல் உனக்கு புரியலையா, நான் செத்துருவேன், நம்ம கடைசி வரைக்கும் சேர்ந்து வாழலாம் என்று என்னென்னவோ பேசினார்கள்.
எரிச்சலாய் வந்தது.
எங்கயிருந்து தான் தண்ணீ கொட்டுமோ தெர்ல.... ஸ்விட்ச் போட்ட மாதிரி எப்டிடீ கண்ணுல இருந்து இப்டி கண்ணீர் வருது என்று கேட்டு கிண்டலடித்திருக்கிறேன். அப்போதும் அவர்களின் மனதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

திருமணம் :
திருமணம் நடந்தது. காதலிகள் போதாதென்று பெற்றோர் பார்த்து நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். காதலிகளிடம் சொன்னது போல பிரேக் அப் சொல்லி விட்டு பிரிந்து வர முடியாது என்பது மட்டும் உறுத்தலாக இருந்தது.
ஒரு காலத்தில் அவளுடைய கை ஓங்கிவிடக்கூடாது.எனக்கு கீழே தான் அவள் என்று ரீதியிலேயே டீல் செய்து வந்தேன்.

வாழ்க்கை :
எனக்கான வேலைகளை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில் என் வேலைகளை என் கடமைகளாக கட்டமைக்கப்பட்டிருந்தன. எங்கே கொஞ்சம் இறங்கினால் அவள் கை ஒங்கிடுமோ என்றே நினைத்து என்னுடைய முகமுடியை கலட்டாமல் ஒரு அந்நியனாகவே அந்த வீட்டில் வாழ்ந்தேன்.
சாப்டியா என்று ஒரு வார்த்தை கேட்டதில்லை, இன்னக்கி ஏன் டல்லா இருக்க என்று விசாரித்ததில்லை , உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டதில்லை. மனைவியானவள் தான் ஒரு வேலைக்காரி ஆயிற்றே.

வாழ்க்கை முழுவதும் நான் :
அவளிடம் கோபப்பட்டிருக்கிறேன், திட்டியிருக்கிறேன், கத்தியிருக்கிறேன், எரிச்சலாய் பேசியிருக்கிறேன் அதைத் தாண்டி அவளுக்கு நான் என்ன கொடுத்திருக்கிறேன் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
இப்போது என் பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்று நினைத்துப் பார்த்தால் முழுவதும் நான் மட்டுமே நிறைந்திருக்கிறேன். என்னுடைய நண்பன் இவன், என் தோழி அவனுக்கு இது பிடிக்கும், அவள் இதில் திறமையானவள் என்று எதுவுமே என் நினைவில் இல்லை.

ஐந்தாம் வருடம் :
திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தது, நான் இப்படித்தான் என்று அவளும் பழகிவிட்டபடியால் எந்த சச்சரவுகளும் இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஏனோ அன்றைக்கு திடீரென்று அலுவலகத்தில் இருக்கும் போது போன்.
அட.... பொண்டாட்டி அதிசயமா போன் பண்ணியிருக்காளே என்று தோன்றினாலும், கெத்து காட்ட வேண்டுமே என்று சொல்லி ஆபிஸ்ல இருக்கும் போது போன் பண்ணக்கூடாதுன்னு தெரியும்ல ஏன் கூப்ட?
இல்லங்க.... இன்னக்கி கொஞ்சம் சீக்கிரம் வர்ரீங்களா....
ஏன்?
ஆஸுபத்திரிக்கு போகணும் ஒரு வாரம் வவுரு வலிக்குது.
இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு போவாங்க சீரகத் தண்ணிய குடி சரியாப் போகும் என்று வைத்து விட்டேன்.

மீண்டும் போன் :
அதன் பிறகு அதனை அப்படியே மறந்து விட்டேன்.... வீட்டிற்கு போயும் வயிற்று வலியைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை, மறந்தும் கூட அவள் இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.வழக்கமாக நான் அலுவலகம் செல்ல, வீட்டிற்கு வர என நாட்கள் நகர்ந்தது. சரியாக மூன்று மாதம் கழித்து புது எண்ணிலிருந்து ஒர் அழைப்பு வந்தது.
என் பெயரைச் சொல்லி...... இருக்காங்களா? என்றது ஒரு குரல்
ம்ம்ம் நாந்தான் பேசுறேன்.

மருத்துவமனை :
உடனே மருத்துவமனைக்கு வரச்சொல்லி, முகவரியை கொடுத்தார்கள். முதன் முதலாக வாழ்க்கையில் ஒரு பதட்டம், என்ன ஆகியிருக்கும் திடீரென்று மருத்துமனையிலிருந்து மனைவி சேர்ந்திருப்பதாக அழைக்கிறார்களே என்று எண்ணிக்கொண்டு ஓடினேன்.
நல்லா படிச்சிருக்கீங்க நீங்களே இப்டி பண்ணா எப்டி சார், எவ்ளோ தான் கத்தி கூப்பாடு போட்டாலும் உங்களுக்கு எல்லாம் கேக்காது.
புரியாமல்....
கீதா உங்க வொய்ப் தான.
தலையசைத்தேன்.
ஓவரியன் கேன்சர் ஃபைனல் ஸ்டேஜ்.

நான் மாற ஆரம்பித்தேன் :
தொடர்ந்து அவள் கரைய ஆரம்பித்திருந்தால் தடாலடியாக என்னால் மாற முடியவில்லை. எனக்காக நீ சமைக்க வேணாம், வெளிய சாப்ட்டுக்கறேன், வீட்டு வேலைக்கு, சமைக்க ஆள் சொல்லியிருக்கேன் வருவாங்க நீ ரெஸ்ட் எடு என்ற சலுகை மட்டும் கொடுக்க முடிந்தது.

அவள் சென்று விட்டாள் :
அடுத்த ஆறு மாதத்தில் ஒரு வார தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இறந்து போனாள். கண்ணாடி அறைக்குள் உடலெங்கும் ட்யூப்கள் சொருகி உருக்குலைந்து மருத்துமனை மெத்தையில் கிடந்திருந்த அந்த உடல் என் மனதை ஏதோ செய்தது.
மூச்சு விட சிரமப்பட்ட போதும் வலியால் முணுகிய போதும் நான் அவளுடன் இருந்திருக்க வேண்டுமோ என்று முதன் முறையாக அப்போது எனக்கு தோன்றியது.

நானும் கரைந்து போகிறேன் :
இத்தனை நாள் இல்லாத ஒரு குற்றவுணர்ச்சி, மரணப்படுக்கையில் மனைவியைப் பார்த்ததும் எழுந்தது. வயிறு வலிக்கு சீரகத்தண்ணீரை குடித்து விட்டு படு என்று சொல்லாமல் அன்றைக்கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ என்ற கேள்வி என்ன்னுள் குடைந்து கொண்டேயிருக்கிறது.
அவ்வளவு தானா? இனி அவள் திரும்பி வர மாட்டாளா....? என்னால் தான் அவள் இறந்து விட்டாளா என்று கேள்விகள் என்னை சித்ரவதை செய்தன.

மன்னிப்பாயா? :
இப்போது என்னைச் சுற்றி யாருமே இருக்கவில்லை. எங்கும் நானே நிறைந்திருக்கும் என் பழைய நினைவுகள், மனைவியின் மரணம் குறித்த குற்றவுணர்ச்சி என்று நான் வாழ்க்கையை உணர ஆரம்பித்திருந்தேன்.
கீதா.... கீதா என்று அவள் பெயரை இப்போது உச்சரிக்கிறேன், அவள் படத்திற்கு கீழே விழுந்து விழுந்து கும்பிடுகிறேன். கண்ணீர் விட்டு கதறி அழுகிறேன். ஒரு குரலும் என்னை இப்போது தீண்டவில்லை எல்லாம் சரியாப் போகும் என்று சொல்ல யாருமில்லை, உனக்கு நாங்க இருக்கோம் என்று தோல் கொடுக்க ஒருத்தரும் இல்லை.

புதிய வாழ்க்கை :
இப்போது தனிமரமாக நின்று கொண்டிருக்கும் நான் யார் காலில் விழுந்து என்ன சொல்லி எப்படி மன்னிப்பு கேட்க..... ஆனாலும் யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என் குற்றத்தை உணர்ந்து விட்டேன் என்னோடு திரும்ப வாருங்கள் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று அழைக்கணும்.
மனைவியின் படத்திற்கு முன்னால் மண்டியிட்டு அழுது கொண்டேயிருக்கிறேன்.... இந்த கண்ணீர் வருகிற ஸ்விட்சை யார் அழுத்தினார்கள் என்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை. தெரியவும் வேண்டாம்.



Click it and Unblock the Notifications