படுக்கையறையில் கணவனால் பெண்கள் அனுபவிக்கும் தொல்லைகள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணமாகி ஓரிரு ஆண்டுகள் ஓட்டிய மனைவிமார்களுக்கு மட்டுமே தெரியும், கணவனின் படுக்கையறை அலப்பறைகள்.

டமால், டுமீல் குஸு வண்டி, மோட்டார் மூக்க பிரச்சனைகள், தூக்கத்தில் சைக்கிள் ஓட்டுவது, காலை போட்டு இடுப்பை உடைப்பது என பல பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

While Sharing the Bed, Take Care These Things Too!

எத்தனை முறை சொன்னாலும், மொச்சக்கொட்ட குழம்ப ஊத்தி அடிச்சுட்டு, வெடிச்சு தள்ளுறான் அந்தாளு... என அழுது புலம்புவார்கள்.

படுக்கையை பகிர்ந்துக் கொண்டால் மட்டும் போதுமா? அங்கே அவர்களை நிம்மதியாகவும் உறங்க விட வேண்டும் அல்லவா... படுக்கையறையில் கணவனால் பெண்கள் அனுபவிக்கும் தொல்லைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெடி சத்தம்!

வெடி சத்தம்!

வாயித்தொல்லை இயல்பு தான். வாயு வெளியேறுவதை தடுக்கக் கூடாது. அதற்காக அணு ஆயுத போர் மூண்டது போல டமால், டுமீல் என வெடித்துக் கொண்டே இருந்தால் பாவம் அந்த ஜீவன் எப்படி நிம்மதியாக சிவாசித்து உறங்க முடியும். அதற்கென மருந்துகள் இருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இது உங்களுக்கும் நல்லது, உங்கள் உறவிற்கும் நல்லது.

லேப்டாப்!

லேப்டாப்!

மனைவியை வைத்து கொஞ்ச வேண்டிய லேப்பில், வேலையை கட்டிக் கொண்டு அழதால் அவர்கள் எரிச்சல் தான் அடைவார்கள். வீட்டில் அலுவல் வேலை பார்க்க வேண்டாம் என யாரும் கூறுவதில்லை. ஏனெனில், கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்க வர்க் ப்ரம் ஹோம் எடுக்கும் காலம் இது. ஆனால், அந்த வேலையை படுக்கை அறைக்குள் எடுத்து வர வேண்டாம் என்று தான் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ரோட் ரோலர்!

ரோட் ரோலர்!

சிலர் ரோட் ரோலர் போல உருண்டு உருண்டு படுப்பார்கள். இது அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும், ஆனால், பக்கத்தில் இருப்பவர்களுக்கு நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது சவுக்கில் அடிப்பது போல இருக்கும். மெத்தையில் இருந்து தள்ளி, போர்வையை ஒருபுறமாக இழுத்து, தலையணை பிடுங்கி இவர்கள் செய்யும் அலப்பறையில், பேசாம வீட்டு ஹால்ல போய் படுத்துக்கலாம் போல இருக்கும் என மனைவியர் சிலர் புலம்பி தள்ளுகிறார்கள்.

ஒருவேளை நீங்களும் ஒரு ரோட் ரோலராக இருந்தால், இதை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மோட்டார் மூக்கு!

மோட்டார் மூக்கு!

குறட்டை என்பது ஒரு பெரிய சாபம். நைட்டு முழுவதும் மோட்டார் ஓட்டி விட்டு, "நானா? குறைட்டைய? போடி இவளே... அதெல்லாம் ஒன்னும் இல்ல..." என்ன கற்பூரம் அடிக்கா குறையாக சத்தியம் செய்வார்கள். வீடியோ எடுத்து ஆதாரம் காண்பித்தால்... "இதெல்லாம் இயற்கை இத எப்படி தடுக்கிறது..." என கூறுவர். இதை தடுக்கவும், குறைத்துக் கொள்ளவும் சில வழிகள் இருக்கின்றன. அதை பயன்படுத்தி, அவர்களை நிம்மதியாக உறங்கவிடலாம்.

அலும்புகள்!

அலும்புகள்!

நாற்றம் பிடித்த ஒரே இரவு உடைகளை வாரக்கணக்கில் உடுத்துவது, சுய சுகாதாரம் இல்லாமல், அங்க, இங்க அரித்துக் கொண்டே இருப்பது போன்றவையும் முகம் சுளிக்க வைக்கும்.

எனவே, இவற்றில் எல்லாம் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு இது ஆரம்பத்தில் கூச்சமாக இருக்கும்...நாட்கள் போக, போக... "அட இவ தான... என்ன நினைக்க போறா..." என அசால்ட்டாக விட்டுவிடுவர்.

மனைவியாகவே இருந்தாலும், அவளும் பெண்தானே! அவருக்கும் அருவருப்பு, கோபம் எல்லாம் வரும். எனவே, இதில் எதுவாக இருந்தாலும், சரி செய்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

While Sharing the Bed, Take Care These Things Too!

While Sharing the Bed, Take Care These Things Too!
Story first published: Tuesday, August 29, 2017, 16:08 [IST]
Subscribe Newsletter