காதலுக்காக ஏங்கும் விவாகரத்து பெற்ற நடிகை!

Posted By:
Subscribe to Boldsky

ஏஞ்சலினா ஜூலி, உலகம் முழுக்க பெரும் இரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் லேடி சூப்பர்ஸ்டார். இவர் கணவர் பிரார் பிட்டை பிரிந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது.

First Interview of Angelina Jolie After The Seperation!

தங்கள் பிரிவிற்கு பிறகு முதன் முறையாக பேட்டி அளித்துள்ள ஏஞ்சலினா ஜூலி இல்வாழ்க்கை, தாய், குழந்தைகள், இல்லறம், என குடும்பம் மற்றும் மேலாண்மை பற்றி பல விஷயங்களை பற்றி கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மா!

அம்மா!

"நான் வளர்ந்து வந்த சூழலில். எனது அன்னையை எண்ணி நிறைய வருந்தியிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் எனது பிள்ளைகள் என்னை எண்ணி வருந்த நான் விரும்பவில்லை."

-- அம்மாவிடம் இருந்து கிடைக்கும் காதலும், அன்பும் பரிசுத்தமானது. அதை யார் தான் எதிர்பார்க்க மாட்டார். ஜூலியின் தாய், அவர் குழந்தையாக இருக்கும் போதே கணவரை பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுகை!

அழுகை!

"மற்றவர் எதிரே அழுவதை காட்டிலும், குளியலறை ஷவரில் நின்று அழுவதே சிறந்தது. அவர்கள் நடந்துக் கொண்டிருப்பது எல்லாமே நல்லதற்கு தான் என கருதுகின்றனர்.

ஆனால், எல்லா முறையும் அப்படி இருப்பது இல்லை. கடைசியில் கடின தருணங்களை நாம் கடந்து வருவது மூச்சுக்காக தான். நாம் அனைவருமே நமது குடும்பத்தின் காயங்களை, கவலைகளை தீர்க்க வேண்டும் என்று தான் முயற்சிக்கிறோம்."

-- அனைவரும் ஜூலி கணவரை பிரிந்ததற்கு காரணம் அவர்களது பிஸியான வாழ்க்கை என கூற, வாழ்க்கை பிரிவிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லை என ஜூலி பதிலளித்துள்ளார்.

வாழ்க்கை!

வாழ்க்கை!

"எங்கள் வாழ்க்கை எதிர்மறையானது அல்ல. நிறைய அற்புதமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். ஆறு பேரும் (குழந்தைகள்) மிகவும் வலிமையானவர்கள், கருத்துள்ளவர்கள். நான் அவர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்'' என ஜூலி கூறியுள்ளார்.

அக்கறை!

அக்கறை!

"நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தின் மீதும். நாங்கள் இருவரும் இந்த ஒரே இலட்சியத்தை பின்பற்றியே உழைத்துக் கொண்டிருந்தோம்."

-- கணவரை பிரிந்த பிறகு ஜூலி தனது தந்தையுடன் நெருக்கமானார். இப்போது அப்பாவும், மகளும் சமரசமாக இருக்கிறார்கள்.

தாத்தா...

தாத்தா...

"அவர் மிகவும் புரிந்து நடந்துக் கொள்பவர்கள். என் குழந்தைகளுக்கும் தாத்தாவுடனான நேரம் அவசியமாக இருக்கிறது. அவர், குழந்தைகளுக்கு கதை சொல்வது, வெளியே அழைத்து செல்வது என இருக்கிறார்."

-- ஜூலி தற்போது வேலையில் சற்று இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளார். வீட்டில் அதிக நேரம் செலவழித்து வருகிறார்.

வீட்டு பெண்!

வீட்டு பெண்!

"கடந்த சில மாதங்களாக நான் ஒரு சிறந்த இல்லத்தரசியாக இருக்க முயற்சித்திருக்கிறேன். நாய்களின் கழிவுகளை அகற்றுவது, பாத்திரங்கள் கழுவது, படுக்கையறையில் கதைகள் கூறுவது போன்ற செயல்களில் நான் கொஞ்சம் மேம்பட்டுள்ளேன். ஒரு தாய் செய்ய வேண்டிய எல்லா அன்றாட வேலைகளையும் சரியாக செய்து வருகிறேன்."

-- விவாகரத்து என்பது கடந்து செல்ல வேண்டிய தருணம் தான். ஆனால், விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கையை வாழ, வழிநடத்த பொறுமை அவசியம். நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். நிறைய முயற்சிக்க வேண்டும். ஜூலி அதை சரியாக செய்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

First Interview of Angelina Jolie After The Seperation!

First Interview of Angelina Jolie After The Seperation!
Story first published: Saturday, July 29, 2017, 10:31 [IST]