Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மேட்ரிமோனியில் வரன் பார்ப்பவர்கள் எதை வைத்து ஆண்களை தேடுகிறார்கள்?
இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களிலேயே தாறுமாறாக "காதல்" கதைகள் நூறு நாட்களை தாண்டி ஓடுகின்றன. சொல்லப் போனால் இனிமேல் திரைப்படங்களை கூட வாட்ஸ்-அப்பில் ஓட்டினால் தான் நூறுநாள் சுவரொட்டிகள் ஒட்ட முடியும். என்ன தான் இருந்தாலும் நாம் வாழ்வது ஆன்லைன் யுகம் ஆயிற்றே அதனால் தான் நிறைய பெண் வீட்டார் மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடி அலைகிறார்கள்.
அப்படி மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் பெண்கள் மற்றும் பெண் வீட்டார் என்ன தான் எதிர்பார்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தல், கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கிறது. மணமகன் தேடும் அனைவரும் 6-லிருந்து அதற்கு மேலான லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஆண்களை தான் தேடுகிறார்கள்.
இது மட்டுமல்ல, அழகு, வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை, மணமகனின் ஹாபி முதல் வீட்டு லாபி வரை அனைத்தும் அறிந்துக் கொண்டு தான் பெண் கொடுக்கவே முயற்சி செய்கிறார்கள்.... (என்ன கொடும சார் இது!!!)

குடும்ப நபர்களின் எண்ணிக்கை
மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் பெண்கள் மற்றும் பெண் குடும்பத்தார், எண்ணிக்கை அளவில், சகோதர, சகோதரி குறைவாக இருக்கும் ஆண் வரன்களை தான் அதிகம் தேடுகிறார்கள். ஏனெனில், அப்போது தான் தன் மகள் சண்டை சச்சரவு இல்லமால் சந்தோசமாக இருப்பாள் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.

ஆண்மகனின் வருமானம்
சாதாரணமாகவே மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் பெண் வீட்டார், குறைந்தபட்சம் 6 அல்லது அதற்கு மேலான லகரங்களில் சம்பளம் வாங்கும் ஆண் வரன் மீது தான் விருப்பம் தெரிவிக்கிறார்கள். ("அப்போ நாங்க எல்லாம் எங்க போறது???" - உங்களுக்கும் இஸ்க் இஸ்க் என்று தான் கேட்கிறதா!!!)

அழகாக இருக்க வேண்டும்
இது, அவரவர் வீட்டு பெண்ணை பொறுத்தது, ஏதேனும் ஒரு லுக்கில் அம்சமாக இருக்கும் படத்தை பதிவு செய்து வைக்க ஆண்மகன் தவற வேண்டாம். இல்லையேல் மேட்ரிமோனி தளங்களில் பெண் கிடைப்பது மிகவும் கடினம். (ஏற்கனவே, நம்ம பாட்டனும், பாட்டியும், கள்ளிப்பால் கொடுத்து ஆப்பு வெச்சுட்டாங்க.. எனவே, உஷார் ப்ளீஸ்!!!)

வாழும் இடம்
நீங்கள் அதிகமாக சம்பாதித்தாலும் கூட, நீங்கள் இருக்கும் ஊர் பற்றியும் ஆராய்ந்து பார்க்கிறார்கள். பெங்களூர், மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்கள் என்றால் டபுள் ஓகே!!!

கேளிக்கையான நபர்
அதாவது நகைச்சுவையாக சிரித்து பேசும் நபராக இருக்க வேண்டும். எனவே, ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் நிரப்பும் பெட்டிகளில் நான் வேடிக்கையான சுபாவம் கொண்டவன் என்று எழுதி வையுங்கள். அப்போது தான் வேடிக்கை பார்க்கவாவது வருவார்கள் போல.

வேற என்ன தெரியும்??
வேலை, சம்பளம் போன்றவை அடுத்து, பாடல், ஆடல், எழுத்து, கவிதை, ஊர் சுற்றுதல் போன்ற ஹாபி ஏதாவது இருக்கிறதா என்றும் பெண் வீட்டார் மேட்ரிமோனி தளங்களில் நோட்டம் விடுகிறார்கள். (நமக்கு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் போலவே...!?!??)

ட்ரின்கிங், ஸ்மோகிங்
புகையும், மதுவும் சுத்தமாக ஆகாது என கூறிவிடுகிறார்கள் பெண் வீட்டார். ஆக மொத்தம் உங்களுக்கு தேவையானது வீண் வம்புக்கு போகாமால் சமத்தாக தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க வேண்டிய ஓர் அம்பி!!

தயாரிப்பு நிலை!!!
மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் அன்பார்ந்த பெண் வீட்டு மக்களே, நீங்கள் இதுப்போன்று தேடும் அந்த பொருள் இன்னும் தயாரிப்பு நிலையில் கூட இல்லை. எதிர்காலத்தில் அப்படி யாரவது தயாரிப்பு செய்தாலோ, தப்பி தவறி யாரேனும் பிறந்திருந்தாலோ... தெருக்களில் சென்று தான் தேட வேண்டும்!!!
நன்றி வணக்கம்!!!



Click it and Unblock the Notifications