Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
மணமக்கள் பதில் சொல்லி சொல்லி அலுத்து போகும் கேள்விகள்!
திருமணம் எனும் பயிரை அறுவடை செய்வதற்குள் உங்களை படாதப்பாடு படுத்திவிடுவார்கள். கேள்விகள் மலை போல குவியும். உங்கள் செமஸ்டர் எக்ஸாம் அல்லது வேலையின் போது கூட ஒரே கேள்வியை இவ்வளவு முறை கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு நடக்கும். இவற்றை எல்லாம் நீங்கள் எதிர்க்கொள்ள தான் வேண்டும்.
திருமண பந்தத்தின் நெளிவுசுளிவுகள் என்ற பெயரில் கூறப்படும் கட்டுக் கதைகள்!!!
தேனிலவில் ஆரம்பித்து, மேக் - அப் செய்யப் போகும் அந்த நபர் யார்? எங்கு இருக்கிறார்? என அவரது ரேசன் கார்டு வரை விவரங்கள் கேட்டு நச்சரிக்க ஓர் பெரும் பட்டாளமே உற்றார், உறவினர்கள் என்ற பெயரில் உலாவிக் கொண்டிருக்கும். அலுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு ஏற்படலாம். (ஒன்னும் செய்ய முடியாது தாங்கி தான் ஆகணும்..)
கணவன் மனைவி மத்தியில் மறைக்க கூடாத ஏழு இரகசியங்கள்!!!

தேனிலவு எங்கே?
திருமணம் என்று கூறியவுடன் நமது உற்றார், உறவினர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, "ஹனிமூன் எங்க போலாம்ன்னு இருக்கீங்க??" ஒருவர் இருவர் அல்ல, திருமணம் தேதி நெருங்க, நெருங்க இந்த கேள்வியை கேட்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். இது சிலரை கடுப்படிக்கும், சிலரை அலுத்துப் போக வைக்கும்.

என்ன டயட்?
திருமணம் என்றால் மணமக்கள் டயட்டில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகிவிட்டது. ஏன் அதற்கு முன்போ, பிறகோ இருக்கக் கூடாதா என்ன? மணமக்கள் அவர்களது உடல் எடை பற்றி கவலைக் கொள்வதை விட மற்றவர்கள் கவலைக் கொள்வது தான் அதிகம். இந்த கேள்வியை கூட்டத்தில் கேட்பது தான் கொடுமையிலும் கொடுமை.

போட்டோ ஷூட் முடிந்ததா?
முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு மட்டும் தான் படப்பிடிப்புக்கு செல்லும் முன்னர் போட்டோ ஷூட் வைத்து போஸ்டர் ஓட்டுவார்கள். இப்போது திருமணத்திற்கு எல்லாம், முன்பே போட்டோ ஷூட் வைத்து போஸ்டர் மற்றும் ப்ளெக்ஸ் எல்லாம் வைக்கின்றனர். இதைவேறு, எங்கு எடுக்கப் போகிறீர்கள், எப்படி எடுக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு நச்சரிப்பார்கள்.

ஷாப்பிங் முடிந்ததா?
திருமணம் என்றாலே அதில் மற்ற சடங்குகளை விட ஷாப்பிங் செய்வது தான் மிகப்பெரிய வேலை. எங்கு செய்தீர்கள் என்ற கேள்வியை விட, என்ன செலவு? என்று கேட்பவர்கள் தான் அதிகம். அங்கே வாங்கியிருக்கலாம், என்கிட்டே கேட்டுருந்தா நானே நல்ல இடம் காட்டியிருப்பேன் என்று சிலர் பதிலளிக்கும் போது தான் அலுப்பு கிலோ கணக்கில் தொற்றிக் கொள்ளும்.

திருமணம் உடை எடுத்தாச்சா?
திருமணத்திற்கு எடுத்த உடையை மணமக்கள் பார்ப்பதைவிட அதிகமாக பார்ப்பவர்கள் உற்றார், உறவினர்கள் தான். அப்படி என்ன அதில் வித்தியாசம் இருக்கிறது, விசித்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. மீண்டும், மீண்டும் பார்ப்பார்கள். இந்த கேள்விக்கு மணமக்களை விட அவர்களது பெற்றவர்கள் பதில் கூறியே மாண்டுவிடுவர்கள்.

காதலா, நிச்சயமா?
இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து திருமண வைபவத்தின் போதும் கேட்கப்படும் கேள்வி இது தான். காதல் திருமணங்களை விட, நிச்சயித்த திருமணங்களை விட அதிகமாக காதலித்தவர்களை நிச்சயம் செய்து திருமணம் செய்துவைப்பது தான் இன்றைய ஃபேஷனாக இருக்கிறது.

அவங்க என்ன பண்றாங்க?
நமது பிழைப்பை பார்ப்பதை விட மற்றவர் பிழைப்பை பார்ப்பது தான் நமது பாம்பரியமாக இருந்து வருகிறது. அந்த பையன் எங்க வேலைக்கு போறான் என்று கேட்கப்படும் கேள்வியே, அடுத்த கேள்வியான "என்ன சம்பளம்?" என்று கேட்பதற்காக தான். நம்மவர்கள் இதிலிருந்து திருந்த இன்னும் பல யுகங்கள் ஆகும் போல.

ஒன்னாதான் இருக்க போறாங்களா?
அதாவது, கூட்டுக் குடும்பமாக இருக்க போகிறார்களா? அல்லது தனிக் குடித்தனமா? என்று கேட்பது. மணமக்களே ஒன்றாக இருக்க நினைத்தாலும் கூட, சுற்றி இருப்பவர்கள் பயமுறுத்தி அவர்களை தனிக்குடித்தனம் போக வைத்து விடுவார்கள்.

அதாவது, கூட்டுக் குடும்பமாக இருக்க போகிறார்களா? அல்லது தனிக் குடித்தனமா? என்று கேட்பது. மணமக்களே ஒன்றாக இருக்க நினைத்தாலும் கூட, சுற்றி இருப்பவர்கள் பயமுறுத்தி அவர்களை தனிக்குடித்தனம் போக வைத்து விடுவார்கள்.
பெரும்பாலும் பெண்களிடம் கேட்கப்படும் கேள்வி தான் இது. ஏன் திருமணத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்கு போவதால் என்ன தவறு? இன்றைய வரவு, செலவுகளை கையாள இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியது கட்டாயம் ஆகிவிட்டது.

சமையல் கத்துக்கிட்டியா?
பெண்களிடம் பலமுறை கேட்கப்படும் மற்றுமொரு கேள்வி இது. பார்ப்பவர்கள் எல்லாம் இந்த கேள்வியை கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்து செல்வர்கள். அந்த மணப்பெண்ணுக்கு மட்டுமே அலுப்புடன் சேர்த்து எரிச்சலும் ஏற்படும்.

குழந்தை, குட்டின்னு செட்டிலாக போற?
"அப்பறம் என்னமா, இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை, குட்டின்னு செட்டிலாக போறியா?" என்ற கேள்வியை மணப்பெண்ணிடம் கேட்க யாரும் தவறுவதில்லை. இதில் ஆண், பெண், உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற எந்த பேதமும் இன்றி அனைவரும் கேட்பார்கள். கொஞ்சம் அலுப்பாக தான் இருக்கும், ஒன்றும் செய்ய முடியாது மெல்லிய புன்னைகையோடு எஸ்கேப் ஆகிவிடுங்கள்!

மேக்-அப்க்கு ஆள் பாத்தாச்சா?
திருமணம் மற்றும் அதன் முந்தைய இரு நாட்களில் மணமக்களுக்கு நிகராக மதிக்கப்படுபவர் மேக்-அப் கலைஞர். இவருக்கான சிபாரிசுகள் தான் மழைப் போல குவியும். என்ன செய்ய திருமண ஆல்பத்தை நினைக்கும் போதெல்லாம் பார்க்க ஆவலுடன் சேர்த்து கொஞ்சம் ஆசையும் இருக்க வேண்டும் என்றல், இவரது துணையும் தேவை தான்.



Click it and Unblock the Notifications











