Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
பிரபலங்களுக்கு பின் இருக்கும் அந்தரங்க கருப்பு பக்கங்கள்!
ஓவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு சில கருப்பு பக்கங்கள் இருக்க தான் செய்யும். அதுவே பிரபலங்களாக இருந்துவிட்டால் அது ஒரு வரலாறாகவே மாறிவிடும்.
இந்த கருப்பு பக்கங்கள் பெரும்பாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதாக அமைவது தான் பெரும் சோதனை (அவர்களுக்கு அது சாதனை). இந்த பெண்கள் விஷயம் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடும் விஷயமாக அமைகிறது.
ஹாலிவுட், பாலிவுட் மட்டுமல்ல எல்லா "வுட்"களும் இதில் அடங்கும். ஏழடி நடிகரில் இருந்து, விரல் நடிகர் வரை இதில் அடங்குவர்.
ஒரு சிலர் இந்த கருப்பு பக்கங்களை சலவை செய்து வெளுக்கவும் செய்திருக்கின்றனர். சிலர் கார்பன் தாள் போல அசிங்கப்பட்டும் போயிருக்கின்றனர். அவர்களை பற்றிய ஒரு சிறிய சிறப்புப் பார்வை...

ரகசிய காதல்/ பிரிவுகள்
நேற்று இன்று இல்லை, காலம் காலமாக இது தொன்றுதொட்டு நடக்கும் வழக்கமாக இருந்து வருகிறது சினிமா துறையில். ஹிந்தியில் நர்கீஸ் ராஜ் கபூர், திலிப்குமார் மதுபாலா போன்றவர்கள் காதலில் திளைத்திருந்தனர். மற்றும் ஹேமா மாலினி, ஜிதேந்திரா. டிஸ்கோ நடன சூறாவளி மிதுன் சக்ரவர்த்தியும் ஸ்ரீதேவியும் என நீள்கிறது இந்த பட்டியல். இதில் சில புரளிகளாகவும் பரப்பப்பட்டிக்கின்றன.

திருமணம் ஆனவர்களை கரம்பிடித்தவர்கள்
சாயப் அலிகான் கரீனா கபூர், கரீனாவை மணக்க விவாகரத்து செய்தவர் சாயப் அலிகான். மற்றும் புகழ்பெற்ற நடிகர் ஆமிர்கான் மற்றும் கிரண் ராவ். ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா மற்றும் ராணி முகர்ஜி ஆதித்யா சோப்ரா போன்றவர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவர்களை கரம்பிடித்தவர்கள் ஆவார்கள்..

கள்ளத்தொடர்பு
மம்தா குல்காரி, மந்தாகினி போன்ற ஹிந்தி நடிகைகள் நிழல் உலக தாதாக்கள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

திருமணத்திற்கு முன்பே குழந்தைகள்
உலக நாயகன் கமல் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர். இவரது இரு குழந்தைகளும் சரிகாவுடன் தொடர்பில் இருந்த போது பிறந்தவர்கள். கமலுக்கு திருமணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பின்பு ஊர் வாயை அடைக்க தான் திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி கூட போனிகபூர் உடனான உறவின் போது கருத்தரித்த பின்பு தான் அவசரமாக திருமணம் செய்துக் கொண்டதாக புரளிகள் அப்போது வந்துருக்கின்றன.

எம்.எம். எஸ். பரபரப்புகள்
ஹிந்தி நடிகை ரியா சென் மற்றும் அஷ்மிட் படேல் ஆகியோர் எம்.எம்.எஸ் சர்ச்சையில் சிக்கியவர்கள். இது தான் மிகவும் கொடுமை. இவர்களது அந்தரங்கம் பலரது மொபைல்களில் உலா வந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் ஏதும் வரவில்லை.



Click it and Unblock the Notifications
