Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
உறவினில், ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டிய ஏழு விஷயங்கள்!!!
அனைத்து விஷயங்களிலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை நாம் திருத்திக் கொள்கிறோமா? இல்லையா? என்பதில் தான் நமது நிலையின் தரம் சார்ந்திருக்கிறது. நண்பர்கள் மத்தியிலோ, நமது வீட்டினர் மத்தியிலோ நமது நிறை, குறைகள் பற்றி நாம் பெரிதாய் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டோம்.
பொண்டாட்டிய சந்தோஷமா வெச்சுக்குங்க, இல்ல உங்க கதி அம்பேல்!!!
ஆனால், புதிதான ஓர் உறவு, அதில் இனி நமக்கென வாழப்போகும் ஒருத்தி வரவிருக்கிறாள் எனும் போது, கட்டாயம் நாம் நமது நிறை, குறைகளை சரி செய்துக் கொள்ள வேண்டும். அதில், இல்லற வாழ்வில் "கட்டாயம்" எனும் வார்த்தை வரும் போது, ஏழு விஷயங்களில் ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டும் என பெண்களால் எதிர்பார்க்கப்படுகிறது....

அதிகாலை கொஞ்சுதல்
காலை எழுந்ததும், ஹஸ்கி குரலில் ஆண்கள் கொஞ்சுவது அவசியம். இது, கணவன் மனைவி உறவை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அன்றைய நாளை மகிழ்வாக நகர்த்தி செல்லவும் உதவுமாம்.

கட்டிப்பிடிப்பது
நாலு ஊருக்கு கேட்கும் படி பேசும் ஆண்களில் பெரும்பாலானோர், செயல்முறை என்று வந்துவிட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள். அப்படி அல்லாமல், கட்டிப்பிடிப்பதில் வல்லவர்களாக இருக்க வேண்டும் (வலுவாக அல்ல, வல்லவர்களாக)

மகிழ்வாக வைத்துக்கொள்ளுதல்
தான் மட்டுமின்றி தன்னையும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்ளும் தன்மை உடையவராக ஆண்கள் இருக்க வேண்டியது அவசியம். முகத்தை "உர்ர்ர்" என்று வைத்துக் கொண்டே இருந்தால், மனைவி கூட அருகே வர பயப்படுவாள்.

தவறு செய்தால் ஒப்புக்கொள்ளும் குணம்
இது மனித இனத்திற்கு அப்பாற்பட்ட குணாதிசயம். ஆனால், இதற்கு நேரெதிராக பலர் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்பவர்களும் இருக்கின்றனர். அப்படி, தாங்கள் செய்த தவறுகளை ஆண்கள் ஒப்புக்கொண்டால், இல்வாழ்க்கை, நல்வாழ்க்கையாக அமையும்.

நன்றாக சாப்பிடுதல்
ஆண்மகனின் இலட்சினையே வீரமும், தைரியமும் தான். அதற்கு உடலில் முதலில் வலு வேண்டும். அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எனவே, ஆண்கள் திருமணத்திற்கு பிறகாவது நன்கு சாப்பிட வேண்டும். (பொண்டாட்டி கிட்ட அடிவாங்கவாவது வலு வேணுமா.. இல்லையா..)

தீர்வுக் காணுதல்
எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும், அதை கண்டு பயந்து ஓடாமல், எதிர்த்து நின்று தீர்வுக் காணும் குணம் மிகவும் அவசியம்.

தீராத விளையாட்டு பிள்ளை
தீராத விளையாட்டு பிள்ளை என்று கூறிய பிறகும், என்ன, எது என்று கேள்விக் கேட்பவராக இருந்தால், சாரி உங்களுக்கு இன்னும் கல்யாண வயசு வரல... நீங்க அப்பறமா வந்து படிங்க!!!



Click it and Unblock the Notifications
