Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
திருமண பந்தத்தின் நெளிவுசுளிவுகள் என்ற பெயரில் கூறப்படும் கட்டுக் கதைகள்!!!
இந்திய முறைகளின் படி திருமணம் என்பது ஓர் திருவிழா, ஊரையே கூட்டி சொல்லிவிட வேண்டும். திருமணம் என்பது ஒருவரது செல்வாக்கை வெளியுலகத்திற்கு காட்டும் பகட்டான செயலாக தான் பல இடங்களில் நடந்து வருகிறது. இதில் பலி ஆடாக இருப்பது மணமகனும், மணப்பெண்ணும் தான்.
பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!!
இதுவெல்லாம் கூட பரவாயில்லை, திருமண பந்தத்தில் இவர்கள் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் இருந்தே பல இடையூறுகள் வர ஆரம்பிக்கும். பெரும்பாலும் அது உறவினர் எனும் வேதாளங்கள் செய்யும் வேலைகள் தான். நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும், இவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று, என்றோ அவர்களது திருமணத்தின் போது ஓதப்பட்டவை அனைத்தையும் கூறிவிட்டு போய்விடுவார்கள்.
இல்வாழ்க்கையை இன்பமாக்கும் சில விசித்திரமான விஷயங்கள் - அறிவியல் கூற்று!!!
இதில் பலவன வெறும் கட்டுக் கதைகள் தான். கட்டுக் கதையாக இருப்பினும் கூட அது தம்பதிகளின் மனதை பாதிக்கும் அளவு இருப்பது தான் கொடுமை. இனி, அவ்வாறு கூறப்பட்டு வரும் கட்டுக்கதைகள் பற்றி காணலாம்....

இது தான் உன் குடும்பம்
திருமணமாகி புகுந்த வீடு சென்றதும், பிறந்த வீட்டை மறந்துவிட வேண்டும். இனிமேல் இது தான் உன் குடும்பம் என்று கூறுவது. பிறந்ததில் இருந்து நேற்று வரை உடன் இருந்தவர்களை விட்டு பிரிந்து வருவதே கடினமான விஷயம் தான். ஆனால், அதையும் மீறி, இனிமேல் நாங்கள் தான் உன் குடும்பம் என்று மேலும் மனதளவில் அந்த பெண்ணை நோகடிப்பது மிகப் பெரிய தவறு.

இன்பமான திருமண வாழ்க்கை இயற்கையானது
நிறைய பேரு கூறுவது உண்டு, திருமண புதிதில் கசப்பாக இருந்தாலும், போக, போக அதுவே தானாக சரியாகிவிடும் என்று. அப்படி ஏதும் கிடையாது, திருமணம் செய்துக் கொண்டவர்களுக்கே அந்த பந்தத்தில் உடன்பாடு இல்லையெனில், பிறகு எப்படி அவர்களுக்குள் உறவு சிறக்க முடியும். தம்பதி இருவரது மனம் ஒத்துப் போகவில்லை எனில், வேறு எந்த இயற்கையின் செயலாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது.

கோபமாக படுக்கையறைக்கு செல்ல கூடாது
நமது ஆட்கள் தம்பதி இவர்களுக்குள் சண்டை ஏதேனும் ஏற்பட்டால், படுக்கையறை அதை தீர்த்து வைத்துவிடும் என்று எண்ணுகிறார்கள். உடலுறவு ஒன்று மட்டும் தான் இன்பமா என்ன? ஆண், பெண் இருவரும் சம அளவு முதிர்ச்சியுடன் இருக்கும் இந்த காலத்தில் இதுவெல்லாம் எடுபடாத காரியம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் மனதால் இனைந்து சரி செய்வது தான் சரியான தீர்வாக அமையும்.

திருமணத்திற்கு பிறகு குணாதிசயங்களை மாற்றிக் கொள்வது
புகந்த வீட்டிற்கு சென்றவுடன் முன்பு போல இருக்காதே, உனது குணாதிசயங்களை மாற்றிக் கொள் என்று சொல்வதெல்லாம் மடத்தனம். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நன்கு பேசி பழகுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவற்றை கூட குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

திருமணம் என்பது கூட்டுறவு அல்ல
திருமணம் என்பது கூட்டுறவு அல்ல. அது இருவரின் தனி உலகம் மற்றும் அவர்களுக்குள் உருவாக்கப்படும் அன்பான உலகம். அதில் மற்றவர்களின் பங்கு இருக்கலாமே தவிர, தலையீடு மற்றும் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது. உறவுகள் என்பது ஓர் பாதுகாப்பு வளையமாக தான் இருக்க வேண்டுமே தவிர, வேலியாக இருக்க கூடாது.

காதல் அனைத்தையும் சரி செய்யும்
ஆம், காதல் இருந்தால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்வுக் காண முடியும். தீர்வுக் காண முடியும் என்பதற்காக நீங்களே காயம் ஏற்படுத்தக் கூடாது. காயங்களுக்கு காதல் மருந்தாக இருக்க வேண்டுமே தவிர கருவாக இருக்கக் கூடாது.

சண்டைகள் இல்லாத வாழ்க்கை தான் மகிழ்ச்சியை தரும்
சில மகிழ்ச்சியான ஜோடிகளை கண்டால், அவர்களுக்குள் சண்டையே ஏற்படாது போல அதனால் தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், சின்ன சின்ன சண்டைகள் தான் காதலில் அன்பை வளர்க்கும். சண்டையே இல்லாமல் இருவர் மத்தியில் நெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

உங்கள் துணை இல்லாமல் நீங்கள் இல்லை
உங்களில் சரி பாதியாக அவர் இருக்க வேண்டும் இல்லையேல் உங்கள் வாழ்க்கை முழுமை அடையாது என்பதுண்டு. வாழ்க்கை முழுமையடைய இருவரின் பங்கு முக்கியமே தவிர, இருவரும் பாதி, பாதி கொடுக்க வேண்டும் என்று ஒன்றுமில்லை. ஒருசில தம்பதிகளில் கணவனும், ஒருசில ஜோடிகளில் மனைவியும் அதிகம், குறைவாக இருக்கலாம். இது அறிவு, முதிர்ச்சி, பொருளாதாரம் அனைத்திலும் அடங்கும். இதை ஒப்புக்கொள்ளும் மனம் வேண்டும்.

குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும்
அன்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தைக்காக நீங்கள் அதிகம் உழைக்க அல்லது பொருளாதார அளவில் அடுத்தக் கட்டத்தை அடைய முயற்சிக்கலாம். ஆனால், இருவராக இருக்கும் போது தீர்க்க முடியாத ஒன்று மூவரான பிறகு தீர்க்க முடியும் என்பது மேஜிக்காக தான் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டது என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகலாம்.



Click it and Unblock the Notifications