Latest Updates
-
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க..
கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணுங்க அதிகமா செய்யிற தவறுகள்!! - நீங்க தான் அனுசரிச்சு போகணும்!!!
திருமணம் ஆயிரம் காலத்து பயிறு என்றாலும், இன்றைய வழக்கத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால், பெண்கள் செய்யும் தவறுகளை தவிர. இது சில இடங்களில் கட்டாயம் என கற்பிக்கப்படுகிறது, பல இடங்களில் பெண்களின் இயல்பென பிரதிபலிக்கிறது.
உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!
அது என்னவாக இருந்தாலும் சரி, பின்வரும் இந்த தவறுகளை இந்த 21ஆம் நூற்றாண்டிலாவது பெண்கள் விட்டொழிக்க வேண்டியது அவசியம்...
படுக்கை உடல் மொழியை வைத்து, ஆண்களின் குணாதிசயங்களை தெரிந்துக்கொள்ளலாம்!!!

அவர்களது மதிப்பை அவர்களே அறியாமல் இருப்பது
திருமணம் மற்றும் இல்லற வாழ்க்கையில் அவர்களது மதிப்பை முழுதாய் அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். எதற்கு எடுத்தாலும் தனது கணவனை எதிர்நோக்கி இருப்பார்கள். இது தான் பெண்கள் செய்யும் முதல் தவறு. குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பும், மதிப்பும் தான் மிகவும் பெரியது என அவர்கள் அறிதல் வேண்டும்.

அதிகமாக கொடுப்பது
அன்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தங்களது பங்கெடுப்பை அதிகமாக கொடுக்கும் பெண்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என நினைக்க மாட்டார்கள், கொடுத்து, கொடுத்து பழகி என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள். காதலில் இருந்து வேலைகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும்.

தனது இன்பத்தை மறப்பது
மற்றவரது விருப்பு, வெறுப்புக்காக வாழ்ந்து தனது சொந்த விருப்பங்களை மறப்பது. இது, பெரும்பாலான பெண்கள் தங்களது திருமணத்தில் செய்யும் மிகப்பெரிய தவறு.

அதிகமாக சார்ந்திருப்பது
கணவனாக இருந்தாலும் கூட, எதற்கெடுத்தாலும் அவரையே சார்ந்திருப்பது. முக்கியமாக வேலைக்கு செல்லாமல் வீட்டுப் பெண்ணாக இருக்கும் மனைவிகள் தான் இந்த மிகப்பெரிய தவறை செய்கிறார்கள். நீங்களாக முனைந்து சில காரியங்கள் செய்ய வேண்டியது அவசியம். இது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்த உதவும்.

அதிகமாக யோசிப்பது
சிறுசிறு விஷயங்களுக்கு கூட நீண்ட நேரம் யோசித்து மனதை குழப்பிக் கொள்வதில் பெண்கள் மிகவும் திறமைசாலிகள். இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

குற்றவுணர்வு
சிறுசிறு தவறுகள் நடந்தாலும் கூட அதை பெரிய குற்றம் போல அனுமானித்துக் கொண்டு, தங்களை குற்றவாளிகள் போல பாவித்துக் கொள்வது.

போதுமான சுதந்திரம்
இல்லற வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் தான். ஆனால், அதற்கென உங்களது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தங்களது வாழ்க்கையை வாழ மறப்பது
கணவன், பிள்ளை, உறவினர் என அனைவரின் வாழ்க்கையிலும் பங்கெடுத்து கடைசியில் தங்களது வாழ்க்கையை மறந்துவிடுவார்கள் பெண்கள். உங்கள் வாழ்விலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

நம்பிக்கை குறைவு
இதை சந்தேகம் என்றும் கூறலாம் அல்லது கணவன் மீது இருக்கும் அளவுக்கு அதிகமான பிரியத்தின் பிரதிபலிப்பு என்றும் கூறலாம். நேர தாமதம், வேறு பெண்ணுடன் அலைபேசியில் பேசுதல் போன்றவற்றை கூர்ந்து கவனித்து கேள்வி மீது கேள்வி கேட்டு தொல்லை செய்வது.

தேவையில்லாத சண்டைகள்
பெண்கள் தவறை கண்டுபிடித்து கோபம் கொள்வதை விட, தேவையற்ற விஷயங்களுக்கு தான் அதிகம் கோபம் கொள்வார்கள். படத்திற்கு அழைத்துப் போகவில்லை, பூ வாங்கி தரவில்லை, நேரத்திற்கு நாம் சாப்பிடவில்லை என இந்த பட்டியல் நீள்கிறது.



Click it and Unblock the Notifications
