Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா?
காதலுக்கும், திருமணத்திற்கும் எப்பொழுதும் கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க முடியாது. ஏனெனில் காதல் என்பது பொருள் கிடையாது ஏனெனில் அது ஒரு அழகிய உணர்வாகும்.
காதலுக்கும், திருமணத்திற்கும் எப்பொழுதும் கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க முடியாது. ஏனெனில் காதல் என்பது பொருள் கிடையாது ஏனெனில் அது ஒரு அழகிய உணர்வாகும். எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் உங்களால் காதலிக்கவும், காதலிக்கப்படவும் முடியும். ஏனெனில் உங்கள் உறவில் காதலை தக்கவைத்துக் கொள்ள சின்ன சின்ன செயல்களும், காரணங்களுமே போதுமானது.

அதேபோல உங்கள் காதலோ, திருமணமோ முறிவதற்கும், பிரிவதற்கும் சின்ன சின்ன அலட்சியங்களே காரணமாகக்கூடும். ஒரு உறவை பாதுகாப்பதில் இருவருக்குமே சமமான பங்கு உள்ளது, இருவரில் யார் அலட்சியம் செய்தாலும் நீங்கள் இழக்கப்போவது உங்களின் உறவைதான். எவ்வளவு வலிமையான உறவாக இருந்தாலும் சின்ன சின்ன அலட்சியங்கள் உங்களின் காதலை சிதைத்து விடும். இந்த பதிவில் வலிமையான காதலைக் கூட உடைக்கும் சின்ன சின்னகாரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நெருக்கத்தின் பற்றாக்குறை
உறவைப் பொறுத்த வரையில் நெருக்கம் என்பது உடலுறவை மட்டும் பொறுத்ததல்ல. உணர்ச்சிரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். விளையாடுவது, பேசுவதை கவனிப்பது, கொஞ்சுவது என அனைத்துமே உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். இது குறையும்போது உங்கள் காதலில் விரிசல் ஏற்படும்.

உணர்ச்சிகளால் உந்தப்படுவது
சிறிய குறைகளை அப்போதைக்கு மறந்து விடுவது இப்பொழுது எளிதானதாக இருக்கிறது. ஆனால் அதற்கு பின் உங்களுக்குள் எழும் மனக்கசப்பும் அதனை சுற்றி எழும் பிரச்சினைகளும் உங்களின் கடந்த காலத்தில் இருந்த உறவை மறக்கடிக்கச் செய்யும். குறைகளை மறந்து வாழ முடிந்தால் மட்டும் உங்கள் உறவை தொடருங்கள்.

அலட்சியப்படுத்துவது
நீங்கள் உங்கள் துணையை கஷ்டப்பட்டு காதலிக்க வைத்து விட்டதாலோ அல்லது உங்கள் துணையிடம் உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டாலோ அவர்களை அலட்சியப்படுத்தத் தொடங்கலாம் என்று அர்த்தமில்லை. உங்கள் உறவின் தொடக்கத்தில் அவர்களுக்கு கொடுத்த மரியாதையையும், முக்கியத்துவத்தையும் இறுதிவரை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இதுவே உங்கள் உறவு முறிவதற்கான ஆரம்பப்புள்ளியாக அமையும்.

சுயத்தை இழப்பது
மற்ற நபரின் தேவைகளை நிறைவேற்றுக் கொள்வதும், கருத்தில் கொள்வதும் முக்கியமானது மற்றும் அவசியமானது, ஆனால் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதும் முக்கியமானது. உறவில் தங்கள் அடையாளத்தை இழக்க வைக்கும் ஒரு கூட்டாளரை யாரும் விரும்புவதில்லை. எனவே உங்களின் அடையாளத்தை ஒருபித்தும் இழக்காதீர்கள்.

உறுதியற்றவராக இருப்பது
உறவில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியயம், ஒருநாள் உறவில் மகிழ்ச்சியாக இருப்பது, அடுத்தநாளே துணையிடம் காரணமின்றி சண்டை போடுவது போன்று நிலையான நிலைப்பாட்டில் இல்லாமல் இருப்பது உங்கள் துணைக்கு பயத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

ஒருவர் உடலுறவை மறுப்பது
உடலுறவு என்பது ஆரோக்கியமான ஒரு காதல் உறவின் அங்கமாகும். ஆனால் இருவரில் ஒருவர் உடலுறவில் ஆர்வமோ அல்லது விருப்பமோ காட்டாதபோது அது மற்றொருவரை ஏமாற்றத்திற்கு உள்ளதாக்கும். இது உறவு பிரிவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வாய்ப்புள்ளது.

நம்பிக்கையை முறிப்பது
எந்தவொரு உறவுக்கும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானதாகும். காதலை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகும். நம்பிக்கை சிதைந்து விட்டால் சரியான உறவில் மட்டுமே மீண்டும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். நம்பிக்கையை முறிப்பது என்பது உங்கள் காதலை நீங்களே புதைப்பதற்கான ஆரம்பமாகும்.

படுக்கையில் சுயநலமாக இருப்பது
உங்களின் பாலியல் வாழ்க்கை உங்களின் திருமணத்தை பாதுகாக்கும் ஒன்றாகும். ஆனால் உங்கள் படுக்கையில் நீங்கள் உங்களின் சுயநலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் துணையின் தேவையை நிராகரித்தால் அது உங்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கும்.

பொதுவெளியில் புறக்கணிப்பது
ஆரோக்கியமான உறவைப் பேணும் தம்பதிகள் எப்பொழுதும் தங்களின் உறவை அனைவருக்கும் வெளிப்படுத்துவார்களே தவிர மறைக்க விரும்பமாட்டார்கள். தங்களின் துணையை பொதுவெளியில் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது அவர்களின் துணைக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

வஞ்சம்
தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒருவர் மன்னிப்பு கேட்க நேர்ந்தால் அதனை அப்பொழுதே மறந்து விட வேண்டும். அதற்கு பதிலாக மனதிற்குள் வஞ்சக எண்ணத்தை வளர்த்துக் கொள்வதோ அல்லது பழிவாங்க வேண்டும் என்று நினைப்பதோ உங்களின் காதலுக்கு நல்லதல்ல. பழிவாங்கும் எண்ணம் எப்படிப்பட்ட உறவையும் உருகுலைத்துவிடும்.



Click it and Unblock the Notifications