Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா?
காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும்.
காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் நான்கு பெண்கள் மட்டுமே உச்சக்கட்டம் அடைவதாக கூறியுள்ளார்கள்.

காமசூத்ராவில் ஆண்களின் உச்சகட்டத்தை விட பெண்களின் உச்சக்கட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காமசூத்ராவில் உடலுறவில் பெண்கள்தான் முதலில் உச்சகட்டத்தை அடைய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமசூத்ரா என்பது உடலுறவு நிலைகளை மட்டும் கூறுவது அல்ல, காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பாடங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பாடங்கள் உங்கள் துணை மீதான உங்களின் பார்வையை மாற்றும்.

ஆண்குறியின் அளவு
உண்மைதான், உடலுறவைப் பொறுத்தவரை ஆண்குறியின் அளவு என்பது மிகவும் முக்கியமானது. காமசூத்ராவில் கூறியுள்ளபடி ஆண்குறியின் அளவைப் பொறுத்துதான் ஒருவர் படுக்கையில் காளையைப் போல இருப்பார்களா, ஆற்றல்மிக்க குதிரையைப் போல இருப்பார்களா அல்லது அமைதியான முயலாக இருப்பார்களா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வகைப்பாடு ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் பாலியல் உறுப்புகளின் அளவை அடிப்படையாகக் கொண்ட இணக்கமான கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு சிறந்த பாலியல் அனுபவத்தை அனுபவிக்க உதவும்.

முத்தங்கள்
சாதாரணாமாக முத்தமிடுவதற்கும், சரியான முத்தமிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்களை முத்தமிடுவதில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது என்று காமசூத்ரா கூறுகிறது. அவை துலக்குதல் முத்தம், துடிக்கும் முத்தம் மற்றும் அளவிடப்பட்ட முத்தம். உங்களின் முத்தம் பெண்களின் உதடுகளை மட்டும் குறிவைக்கக்கூடாது என்று காமசூத்ரா கூறுகிறது. பெண்களின் முடி, மார்பு, கண்கள், கழுத்து, நெற்றி, கிளிட்டோரிஸ் என அனைத்து இடங்களிலும் முத்தமிட வேண்டும்.

பெண்களின் உச்சக்கட்டம்
பொதுவாக பெண்கள் முதலில் உச்சக்கட்டம் அடைவதுதான் ஆரோக்கியமான உடலுறவு என்று காமசூத்ரா கூறுகிறது. உங்களின் துணைக்கு பல்வறு வழிகளில் உச்சக்கட்டத்தை அடைய வைப்பதற்கான வழிகள் இதில் கூறப்பட்டுள்ளது. உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரும் ஒரு பெண் தன் ஆணுக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்று அது மேலும் விளக்குகிறது. ஏனெனில் ஆண்களைப் போலல்லாமல் பெண்கள் உச்சக்கட்டத்திற்குப் பிறகும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

பெண்கள் கலவி பற்றி அறியட்டும்
காமசூத்ராவில் கூறியுள்ளபடி பெண்கள் திருமணத்திற்கு முன்னர் காமசூத்ரா புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கணவனுடன் தனது வாழ்க்கையை எந்த விக்கலும் இல்லாமல் நிர்வகிக்க முடியும். புத்தகத்தின் அறிவு அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும், இது அவர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.

பெண்ணை கவரும் மற்றும் அணுகும் கலை
காமசூத்ரா என்பது வெறும் பாலியல் நிலைகளைப் பற்றியது அல்ல. ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது என்பது குறித்து விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு கலையாகும், இதில் நிபுணராவது என்பது கடினமானதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் காமசூத்ராவின் உதவியுடன் பெண்களுடன் சரியான உரையாடலைத் தொடங்கலாம். உதாரணத்திற்கு தனது ஆசையை வெளிப்படுத்த ஆண் பெண்ணின் தோள்பட்டை மீது கை வைக்க வேண்டும். அதற்கு பின் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க வேண்டும்.

பெண்களின் கீறல்கள்
இது முழுக்க முழுக்க பெண்களுக்கானது. வட்டம், கோடு, புலியின் நகம், டிஸ்கஸ், அரை நிலவு, முயலின் பாய்ச்சல், தாமரை பாய்ச்சல் மற்றும் மயிலின் கால் என எட்டு வகையான கீறல்களை காமசூத்ரா பரிந்துரைக்கிறது. கலவியின் போது பெண்கள் தங்கள் துணையினை கீறுவது அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும். அதேபோல ' அந்த ' சமயத்தில் ஆண்கள் பெண்களை கடிப்பதன் மூலம் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம்.

ஆரோக்கிய வாழ்க்கை
ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதை காமசூத்ரா வலியுறுத்துகிறது, ஏனெனில் ஆரோக்கியம் இன்றி பாலியல் உறவில் திருப்தி அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க ஒரு மனிதன் தனது முகத்தை மட்டுமல்ல, உடலின் மற்ற பாகங்களையும் ஷேவ் செய்ய வேண்டும் என்றும் காமசூத்ரா அறிவுறுத்துகிறது. இது அன்றாட வாழ்க்கையிலும் சூழலிலும் சுகாதாரம் மற்றும் தூய்மையை மேலும் அறிவுறுத்துகிறது. தம்பதிகள் எவ்வாறு நன்கு காற்றோட்டமான வீட்டில் போதுமான சூரிய ஒளியைக் கொண்டு வாழ வேண்டும்.



Click it and Unblock the Notifications