Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சினிமாக்களில் காட்டப்படும் முதல் இரவிற்கும் நிஜத்தில் நடக்கும் முதல் இரவிற்கும் உள்ள முரண்கள் என்ன தெரியுமா?
திருமண நாளன்று என்னதான் டென்ஷன் இருந்தாலும் தமபதிகள் மனதில் முதல் இரவைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் கண்டிப்பாக இருக்கும்.
திருமண நாளன்று என்னதான் டென்ஷன் இருந்தாலும் தமபதிகள் மனதில் முதல் இரவைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் கண்டிப்பாக இருக்கும். திருமண நிகழ்வின் மிக அற்புதமான பகுதிகளில் ஒன்று முதல் இரவு. அனைவருக்குமே தங்களின் முதல் இரவு எப்படி இருக்க வேண்டுமென்ற கனவு இளமைக்காலம் தொடங்கியதிலிருந்தே இருக்கும்.

அனைவருக்குமே முதல் இரவைப் பற்றிய சொந்த கற்பனைகள் இருந்தாலும் சினிமா அவர்களின் கற்பனைகளை ஏகத்திற்கும் அதிகரிக்கிறது. ஆனால் அவர்களின் கற்பனைக்கும் எதார்த்தத்தில் நடப்பதற்கும் நிறைய விதியசங்கள் இருக்கும், சிலசமயம் முற்றிலும் எதிர்மறையாகவும் இருக்கும். இந்த பதிவில் முதல் இரவு குறித்த கற்பனைகளுக்கும், நிஜத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

திரைப்பட பாணி
திரைப்படங்கள் முதல் இரவு குறித்த கற்பனைகளை மிகைப்படுத்தியுள்ளன. திரைப்படங்கள் உடலுறவில் மிகவும் உணர்ச்சிவசப்படுவதைக் காட்டுகின்றன; விரல்கள் கோர்ப்பது, தீவிரமான மற்றும் மெதுவான முத்தங்கள் போன்றவை. உண்மையில், புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமண இரவில் எந்தவொரு உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை மாறாக மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டவுடன், பொருத்தமான நேரத்திற்காக காத்திருக்கும் முடிவை கூட எடுப்பார்கள். உண்மையில் இந்தியாவில் 30 சதவீதத்தினர் மட்டுமே முதல் இரவில் உறவு கொள்கிறார்கள்.

கவர்ச்சியான அமைப்பு
திரைப்படங்களில் மணமகனும், மணமகளும் அமைதியாக அமர்ந்திருக்க அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு அவர்களை கனவு ஜோடி போல தோற்றமளிக்க வைப்பார்கள். ஆனால் இந்திய திருமணங்களில், பெரும்பாலான தம்பதிகள் அனைத்து திருமணச் சடங்குகளும் முடிந்து முழு திருமணமும் முடியும் வரை உணவு சாப்பிடவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அதற்குபின் முதல் இரவு என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். சிலசமயங்களில் சாப்பிடாமலேயே இரவு தூங்கச் செல்லும் நிலை கூட ஏற்படலாம்.

அலங்கரிக்கப்பட்ட அறை
புதுமணத் தம்பதிகள் தங்கள் முதல் இரவு அறையில் படுக்கையில் சிதறிய ரோஜா இதழ்களால் ரம்மியமாக அலங்கரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், இது காதல் அதிர்வுகளை அதிகமாக்குவதுடன் முதல் இரவிற்கான மனநிலையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில், பெரும்பாலான தம்பதிகளின் முதல் இரவு அவர்களின் சாதாரண அறையில் எந்த ஏற்பாடுகளும் இன்றியே நடக்கிறது.

ஆடையை கலைக்கும் போராட்டங்கள்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருமண ஆடைகளை ஈஸியாக அகற்றிவிட்டு, பின்னர் நேராக உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், உண்மையில் எண்ணற்ற ஊசிகளை அகற்றிய பிறகு முழு ஆற்றலையும் இழந்த பிறகே உறவில் ஈடுபட முடியும்? இந்திய திருமணங்கள் கனமான திருமண உடையை மணமகன் மற்றும் மணமகளுக்கு வழங்குகின்றன, அதனை அணிவதற்கு எவ்வளவு உதவி தேவைப்படுமோ அதே அளவிற்கு அதனை கலைப்பதற்கும் நிறைய உதவி தேவைப்படும். சில நேரங்களில், கணவர் தன் மனைவிக்கு இதில் உதவுவது கூட சாத்தியமில்லை, ஏனெனில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாது.

தர்மசங்கடமான சூழ்நிலைகள்
உறவினர்களும் நண்பர்களும் நிச்சயமாக தம்பதியினரின் அறைக்கு வெளியே இரவில் சுற்றப் போவதில்லை, இது கடந்த காலத்தில் நடந்த விஷயமாகும். அதற்கு பதிலாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு புதிதாக திருமணமான தம்பதியரைச் சுற்றி ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள், அவர்கள் பார்வையைக் கூட பரிமாறிக் கொள்ள இயலாது, மேலும் முதல் இரவு குறித்து அனைத்து வகையான கருத்துகளையும் தெரிவிப்பார்கள். அது நிச்சயம் தர்மசங்கடமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications