Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
உங்க திருமண வாழ்க்கை ரொம்ப போரடிக்குதா? அப்ப இந்த விஷயங்கள பண்ணுங்க... செம்ம ஹேப்பியா ஆகிடுவீங்க!
எந்த விசேஷமான சந்தர்ப்பமும் இல்லாமல் உங்கள் துணைக்கு நீங்கள் பரிசுகள் அல்லது சின்னதான ஆச்சரியங்களை வழங்கும்போது, அவர்கள் மிகவும் சிறப்பாக உணர்கிறார்கள்.
திருமணமான அனைத்து தம்பதிகளும் உறவில் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால், திருமணமான சில காலங்களில் உறவில் இருக்கும் காதல் மற்றும் மகிழ்ச்சி எல்லாம் காணமல் போய்விடும். வெறுப்பு மற்றும் விரக்தி மட்டுமீ எஞ்சி இருக்கலாம். இது பெரும்பலான தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை. முதலில் நீங்கள் உங்கள் காதல் வலுவாகவும் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதை உணர்ந்தால், ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்பட்ட எண்ணங்களைக் கொடுங்கள், காதல் கடிதங்களை எழுதுங்கள். அடிக்கடி முத்தமிட்டுங்கள், அவர்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை ஒருவரையொருவர் நினைவூட்டினால் உங்கள் உறவில் இன்னும் அந்த தீப்பொறி இருக்கும்.

இருப்பினும், நீங்கள் ஒருவரையொருவர் தூரமாக உணர்ந்தால், உங்கள் உறவை மீண்டும் பாதையில் கொண்டு வர நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஒரு உறவில் அன்பை எவ்வாறு உயிர்ப்புடன் வைத்திருப்பது அல்லது உங்கள் உறவில் காதலை மீண்டும் எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

அதிக நெருக்கத்திற்கு யார் பங்களிக்க முடியும்?
பெரும்பாலான தம்பதிகளில், ஒரு பங்குதாரர் மற்றவரை விட காதலை அதிகமாக மதிக்கிறார். அதிக பாலியல் நெருக்கத்திற்கு பங்களிக்கும் நபர், உறவில் நெருக்கத்தை அதிகரிப்பதற்கு மாற்றங்களைச் செய்ய அதிக மெனக்கெடுகிறார். உறவில் அன்பு, நெருக்கம் மற்றும் மகிழ்ச்சி இருக்க தம்பதிகள் இருவரில் ஒருவர் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் காதல் குறையும் போது, அந்த உறவு சலிப்படைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், அவர்கள் உறவை விட்டு பிரிய நினைக்கவில்லை, உறவு எப்போதும் மகிழ்ச்சியாகவும் நெருக்கமாகவும் இருக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

கடந்த காலத்தை வெளிப்படுத்துதல்
ஒவ்வொரு கூட்டாளியும் ஒரு உறவில் அன்பை இழக்கும்போது அல்லது நம்பிக்கை உடைக்கப்படும்போது உணர்வுபூர்வமாக முன்னேற முடிவு செய்ய வேண்டும். உங்கள் துணையை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். ஏமாற்றங்கள், வெறுப்புகள் மற்றும் மனக்கசப்புகளை விட்டுவிடுங்கள். இந்த தருணம் மட்டுமே உண்மை என நினைத்துக்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் உங்களை காயப்படுத்திய விஷயங்களை பற்றி இப்போதும் நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் துணையை மன்னிப்பதே நிகழ்காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரே வழி. கடந்த காலத்தை விட்டு நீங்கள் வெளியேறும்போது, உங்கள் துணையை அவர்கள் உண்மையிலேயே யார் என்பதற்காக நீங்கள் நேசிக்க தொடங்கலாம்.

பாலியல் நெருக்கம்
உறவில் தீப்பொறியை இழப்பதற்கான பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். பாலியல் நெருக்கம் என்று வரும்போது, நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கற்பனைகள், விருப்பங்கள் மற்றும் வரம்புகள் உள்ளன. பாலியல் நிறைவை உங்கள் முதன்மையானதாக ஆக்குங்கள். மேலும் நீங்கள் இருவரும் படுக்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச கற்றுக்கொள்ளுங்கள். இது தம்பதிகளுக்கிடையேயான திருப்தியான மற்றும் மகிழ்ச்சியான பாலியல் தொடர்புக்கு வழி வகுக்கும். மேலும், இது ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க இது உதவும்.

காதல் ஆச்சரியங்களை கொடுங்கள்
எந்த விசேஷமான சந்தர்ப்பமும் இல்லாமல் உங்கள் துணைக்கு நீங்கள் பரிசுகள் அல்லது சின்னதான ஆச்சரியங்களை வழங்கும்போது, அவர்கள் மிகவும் சிறப்பாக உணர்கிறார்கள். உங்கள் துணையை ஒரு பரிசு மூலம் ஆச்சரியப்படுத்துவதன் மூலம், உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்தலாம். இது ஒரு புத்தகம், சாக்லேட் அல்லது பூக்கள் போன்ற சிறிய விஷயமாக இருக்கலாம். ஒரு ஆச்சரியமான பயணம், திரைப்படத் தேதி அல்லது இரவு உணவிற்கு வெளியே செல்லலாம் அல்லது உங்கள் இருவருக்கும் அல்லது உங்கள் காதலுக்கு அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கலாம்.

மரியாதை இருக்க வேண்டும்
உறவில் நன்றியும் மரியாதையும் மிக முக்கியம். மரியாதை இல்லாமல் எந்த உறவும் நீண்ட காலம் செல்லாது. ஒருவரின் உணர்வுகளுக்கு மற்றும் வார்த்தைகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்கள் உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் துணையின் உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் முடிவுகளை நீங்கள் மதிக்க வேண்டும். ஏனெனில், இது அவர்களின் சுயமரியாதையோடு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

இறுதிகுறிப்பு
உறவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் துணையை எப்போதும் காதலியுங்கள். தினமும் உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். சிறிது நேரம் ஒதுக்கி, உங்களுடன் இருப்பதற்காக உங்கள் துணையைப் பாராட்டி, மேலே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும் உங்கள் உறவில் தீப்பொறி மற்றும் அன்பை உயிருடன் வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications