பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்!

Subscribe to Boldsky

காதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

காதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு?

அதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா? நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்று சினிமா இல்லையென்றால் அரசியல். சினிமா பிரபலங்களின் காதல் வாழ்க்கை குறித்து அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது நீங்கள் படிக்கப் போவது அரசியல் பிரபலங்கள் பற்றியது.

வதந்தியாய் பரவியது. செய்திகளில் இடம்பெற்றது என அரசியல் தலைவர்களின் காதல் வாழ்க்கையை இப்போது ஆரம்பிக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜவஹர்லால் நேரு :

ஜவஹர்லால் நேரு :

Image Courtesy

ஜவஹர்லால் நேருவுக்கும் எட்வீனா மவுண்ட்பேட்டனுக்கும் இருந்த உறவுமுறை குறித்து ஏராளமான புத்தகங்கள், திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட விவாதங்களையும் கிளப்பியிருந்தது.

இந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட ஆண்டு 1960. அப்போது எட்வீனா இறந்திருந்தார். இறந்த பிறகு எட்வீனாவின் இறுதிச் சடங்கினை தண்ணீரில் நடத்த இந்திய போர்க்கப்பலை நேரு அனுப்பினார்.

மகாத்மா காந்தி :

மகாத்மா காந்தி :

Image Courtesy

மகாத்மா காந்தியுடன் கிசுகிசுக்கப்பட்டவர் சரளா தேவி. சரளா தேவி ரவீந்திரநாத் தாகூரின் உறவுக்காரப் பெண். சரளாதேவியின் கணவர் சவுத்ரி ராம் புஜ் டுட் சிறை சென்றிருந்த போது அவரது வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார். இந்நிலையில் காந்தி ராம் புஜ்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சரளா தேவி என் ப்ரியத்துக்குரியவளாக இருக்கிறார். பிறகும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திரா காந்தி :

இந்திரா காந்தி :

Image Courtesy

அரசியல் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர் என்று இவரைக் குறிப்பிடலாம். ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து, முதல் மகனான ராஜீவ் காந்தி பிறந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டிருந்தனர். பிறகு எப்படி சஞ்சய் காந்தி பிறந்திருக்க முடியும்.

அதனால் சஞ்சய் முகமது யூனுஸின் மகனாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. முகமது யூனுஸ் நீண்ட காலங்களுக்கு இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்தார். இருவரும் சேர்ந்து நிறைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்கள்.

மிரட்டல் :

மிரட்டல் :

Image Courtesy

சஞ்சயின் மரணத்தின் போது முகமது யூனுஸ் வெளியிட்ட துக்க பகிர்வு இவர்களின் காதலை பகிரங்கப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதோடு சஞ்சய்க்கு இது முன்னரே தெரியும் என்றும் அதைத் தெரிந்து கொண்டு, சஞ்சய் அடிக்கடி இந்திரா காந்தியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மாயாவதி :

மாயாவதி :

Image Courtesy

மாயாவதியின் வழிகாட்டி தான் கன்ஷி ராம். சமூகத்தில் நடக்கிற பல்வேறு அவலங்களை மனதில் கொண்டு. இந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னால் இவர்களுக்கான தலைமையாக நீ உருவெடுக்க வேண்டும் என்று சொல்லி மாயாவதியின் அரசியலை துவக்கி வைத்தவர்.

ஒரு கட்டத்தில் மாயாவதியின் தந்தை மாயாவதியை வீட்டை விட்டு துறத்தி விட அவருக்கு அடைக்கலம் கொடுத்தது கன்ஷி ராம் தான். எங்களுடைய உறவு அண்ணன் தங்கை உறவைப் போன்றது என்றார்கள். ஆனால் மாயாவதி தன்னை மீறி யாரையும் கன்ஷி ராமை நெருங்கவிட்டதில்லை.

ஃபெரோஸ் காந்தி :

ஃபெரோஸ் காந்தி :

Image Courtesy

பெரோஸ் காந்திக்கும் கமலா நேருவுக்கும் காதலா? ஆம் மாமியாருக்கும் மருமகனுக்கும். இப்படி அன்றைக்கு செய்திகள் பரவியது. பல கடிதங்களில் இவர்களின் உறவு ஒர் ஆன்மிக உறவுமுறை என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை காந்தி குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்து இது வேண்டுமென்றெ கிளப்பிவிடப்பட்ட வதந்தி என்றார்கள்.

திக்விஜய் சிங் :

திக்விஜய் சிங் :

Image Courtesy

பிரபல அரசியல்வாதியான இவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தானும் பத்திரிகையாளர் அம்ரிதா ராயும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தார். அம்ரிதா ராய் ஏற்கனவே திருமணமானவர். அவர் தன் முதல் கணவரை விவாகரத்து செய்ததும் எங்களின் திருமணம் நடைபெறும் என்றார்கள். இருவரும் சேர்ந்து மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட படங்கள் வைரலாய் பரவியது.

சந்தர் :

சந்தர் :

Image Courtesy

ஹரியானாவின் முன்னால் துணை முதலமைச்சர். இவரும் ஹரியானா மாநிலத்தின் அட்வகெட் ஜெனரலாக இருந்த அனுராதாவிற்கும் காதல். இந்த விஷயம் அவர்களின் திருமணத்தின் போது தான் வெளிப்பட்டது. இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார்கள். சந்தர் தன் பெயரை சந்த் முகாது என்றும் அனுராதா ஃபைசா என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

பல போராட்டங்களை கடந்து திருமணம் செய்து கொண்டவர்களின் காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எஸ்.எம்.எஸில் தலாக் கூறி பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டேயிருந்த நிலையில் ஃபைசா மொஹாலியில் உள்ள தன் வீட்டில் இறந்து கிடந்தார்.

அமர்மணி ட்ரிபாதி :

அமர்மணி ட்ரிபாதி :

Image Courtesy

உத்திர பிரதேச மாநிலம் நவுட்ன்வா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நான்கு முறை எம்.எல்.வேவாக இருந்திருக்கிறார். அதோடு கேபினட் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

இவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கவிஞர் மதுமிதா சுக்லாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் மதுமிதா சுக்லா கர்ப்பமடைகிறார். எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிடுமோ என்று பயந்த அமர்மணி மதுமிதா சுக்லாவை கொலை செய்கிறார்.

கொலை செய்யப்படும் போது மதுமிதா சுக்லா ஏழு மாத கர்ப்பம் என்று கூறப்படுகிறது. விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்ப கருவில் இருந்த டிஎன்ஏவும் அமர்மணியின் டிஎன்ஏ வும் ஒத்துப் போனது. இதையெடுத்து இந்த கொலையில் அமர்மணியின் மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. தற்போது அமர்மணி மற்றும் அவரின் மனைவி இருவரும் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

அமர்சிங் :

அமர்சிங் :

Image Courtesy

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரான அமர்சிங் குறித்து பல்வேறு பாலியல் புகார்கள் கசிந்தது. அவற்றில் பயங்கர வைரலாய் பரவியது அவரும் பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும் பேசிய போன் உரையாடல். இருவரும் மிகவும் ஆபசமாக போனில் அடிக்கடி நீண்ட நேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோபால் கோயல் கண்டா :

கோபால் கோயல் கண்டா :

Image Courtesy

ஹரியானாவின் முன்னால் அமைச்சர் இவர். விமான பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலைக்குப் பிறகு கண்டா கைது செய்யப்பட்டார். கண்டாவின் எம் டி எல் ஆர் என்ற தனியார் விமானநிறுவனத்தில் பணியாற்றியவர் கீதிகா ஷர்மா. தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதத்தில் தான் பலமுறை கண்டாவால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவரே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Unknown Love Stories of Famous Politicians

    Unknown Love Stories of Famous Politicians
    Story first published: Tuesday, May 15, 2018, 16:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more