Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
நான் இழந்தது காதல் மட்டும் தான், அவன் இழந்தது இரு உயிர்கள்... - My Story #236
எங்கள் காதலை, ஜாதியும், பணக்கார பிம்பமும் பிரித்தது. நான் இழந்தது காதல் மட்டுமே, அவனோ மனைவி மற்றும் உயிரையும் இழந்துவிட்டான். நான் அவனை இன்றும் காதலிக்கிறேன்.
யாராலுமே அவர்களது பள்ளி வாழ்க்கையை மறக்க முடியாது. என் வாழ்விலும் அப்படி தான். நான் அதிகம் நேசித்தது என்பதை காட்டிலும், என் வாழ்வில் நான் நேசிக்கும் படியான சம்பவங்கள் நடந்தது எனது பள்ளி வாழ்வில் மட்டுமே.
எனக்கு பக்தியும் கொஞ்சம் அதிகம். அம்மா - அப்பா டைலர், சொந்த வீடு இருந்தது. மாலையில் நானும் சிறுவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தேன். பெரிதாக நான் கஷ்டமும் அறியாத நாட்கள் அவை.
ஒவ்வொரு மார்கழி மாதமும் அதிகாலை எழுந்து, நானும் என் வயதொத்த பெண்களும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம். என்னையும் அழகாக உணர செய்தது அந்த மார்கழி மாதம் தான். நான் 11வது படிக்கும் வரை என்னை காதலித்ததாகவோ, என்னிடம் பிரபோஸ் செய்ததாகவே எந்தவொரு நிகழ்வும் நடந்ததில்லை.
ஆனால், அந்த வருடம் தான் மார்கழி மாதம் நான் தினமும் கோவிலுக்கு செல்லும் போது என்ன பின் தொடர்ந்து ஒரு சிறு கூட்டம் வர துவங்கியது. அதில் அவனும் ஒருவன்.

காவலன்...
நான் அழகி என்றும், என்னை யாராவது பின்தொடர்ந்து வருவார்கள் என்றும் கருதி நான் கோவிலுக்கு செல்லும் போது எனக்கு பாதுகாப்பாக விவேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவனது நண்பர்கள் கூட்டத்துடன் பின்னாடியே வருவான். அவன் என்னை காதலிக்கிறான் என்றும், அவன் என்னை தான் பின் தொடர்கிறான் என்றும் என் தோழிகள் தினமும் கூறினர். ஆனால், என்னை ஒருவன் காதலிப்பான் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு அந்த வயதில் இல்லை.

எதுவும் இல்லை...
அவன் எனக்கு காவலாக அவன்தான் அவ்வளவு தான். அவன் என்னிடம் காதலும் கூறவில்லை. எனக்கும் அவன் மீது காதல் இல்லை. ஆனால், காதல் என்ற ஒன்று எனக்கு அறிமுகம் ஆனது அவன் மூலமாக தான் அதற்கு முன்பு வரை நான் தோழிகள், பள்ளி, எங்கள் டைலர் கடை, டியூஷன் என்று நான் எனது தனி உலகில் வாழ்ந்து வந்தேன். அதில் இருந்து எனக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமானது அந்த விவேக் மூலமாக தான்.

காதல்..
எனக்குள்ளும் காதல் வந்தது, அவன் பெயர் அருள்... எங்கள் ஏரியாவில் தான் அவனும் வசித்து வந்தான். சொந்த வீடு, கடை என்று நாங்கள் வசதியாக இருந்தாலும், ஏழை, ஏற்றத்தாழ்வு எதுவும் அறியாமல் பெற்றோரால் வளர்க்கப்பட்டவள் நான்.
ஆனால், என்னையும் தாழ்வாக என்ன வைத்தனர் அருளின் குடும்பத்தார். என் முதல் காதல் கதையே கடைசியுமாக ஆனது. என் வாழ்க்கை பயணம் தடம் புரண்டு நான் செல்ல வேண்டிய இடத்தை அடையாமல் ஒரு படுகுழியில் விழுந்தது.

முதல் பார்வையில்...
அருள் எனக்கு சிறு வயது முதலே தெரியும். ஆனால், எங்களுக்குள் காதலோ, நட்போ எதுவும் இல்லை. ஒரே ஏரியா கோவில் திருவிழா போன்ற காலங்களில் அவன் தலைமை தாங்கி இளைஞர்களோடு நிறைய வேலைகள் எல்லாம் செய்வான். அப்போது ஒவ்வொரு ஆண்டும் அருளையும், அவனது குழுவையும் அழைத்து ஊர் பெரியவர்கள் பாராட்டி பேசுவார்கள். அப்படி தான் அவன் எனக்கு அறிமுகம்.

சொல்லாமலே...
அவன் என்னிடம் காதலிக்கிறேன் என்று கூறியதே இல்லை நானும் அவன் காதலை ஏற்றுக் கொண்டதாய் பதில் பேசியதும் இல்லை. எங்களுக்குள் எப்படி காதல் எட்டிப் பார்த்தது. அவன் எப்படி என் மீது காதல் கொண்டான், நான் எப்படி அவனை ஏற்றேன் என்பது எல்லாமே ஒரு மாயை போல உணர்கிறேன், இன்றும். அதனால் தான் காதல் சொல்ல வார்த்தை தேவை இல்லை என்கிறார்களோ என்னவோ.

இரண்டு வருடம்..
நானும் அருளும் இரண்டு வருடம் தான் காதலித்தோம். அருள் என்னைவிட ஆறு ஆண்டுகள் பெரியவர். நான் பள்ளி இறுதியாண்டு பயின்று வந்தேன். வீட்டில் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக வீட்டை விற்க வேண்டிய சூழல் உண்டானது. அந்த பிரச்சனை முடிவதற்குள், எங்கள் காதல் குறித்து அருள் வீட்டில் தெரிந்து, ஜாதி, ஸ்டேடஸ் என்று கூறி அவனை அடித்து ஊருக்கு இழுத்து சென்று ஒரே வாரத்தில் அவர்கள் ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார்கள்.

ஒரு மாதம்..
அவனுக்கு திருமணமான செய்தியே எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் நாங்கள் பக்கத்து ஏரியாவில் வேறு ஒரு வாடகை வீட்டில் குடியேறி இருந்தோம். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அவன் என் வாழ்வில் எப்படி வந்தான் என்றே தெரியாத எனக்கு, அவன் எப்படி என் வாழ்வில் இருந்து மறைந்தான் என்பதும் தெரியவில்லை. அதன் பொறகு தான் நமது சமூகத்தில் ஜாதி மற்றும் ஸ்டேடஸ் எவ்வளவு பெரிய தாக்கம் கொண்டது என்பதை உணர்ந்தேன்.

மனம் ஒப்பாமல்...
அப்பா - அம்மா செய்து வந்த டைலர் வேலையும் மந்தமானது. அருளை பிரிந்த நாட்களில் நான் டியூஷனும் எடுக்கவில்லை. வீட்டில் பணத்தட்டுப்பாடு. என்னை இரண்டாம் தாரமாக வேறு ஒரு ஆணுக்கு, என்னை விட பத்து வயது மூத்த ஆணுக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த பொருளாதார நிலையில் என்னை திருமணம் செய்து கரை சேர்க்க என் பெற்றோருக்கு வேறு வழி தெரியவில்லை.

கொடுமை!
நான் இரண்டாம் தாரமாய் வாக்குப்பட்ட கணவர் செல்வந்தர் தான். பெரிய வீடு, சொந்த தொழில். நான் அவ்வளவு பெரிய வீட்டில் இருப்பதை எண்ணி என் ஊரார் மற்றும் உறவினர்கள் சிலர் மகிழ்கிறார்கள். சிலர் பொறாமை கொள்கிறார்கள்.
ஆனால், அந்த வீட்டுக்குள் நான் அனுபவிக்கும் கொடுமை எனக்கு மட்டுமே தெரியும். அவர் குடிக்காத நாளும் இல்லை, நான் அழாத நாளும் இல்லை. இதற்கு நடுவே இரண்டு குழந்தைகள் வலுக்கட்டாயமாக.

அருள் வாழ்க்கை...
என் வாழ்க்கை இப்படியாக திசை மாற... அருளை பற்றி நான் பெரியதாக கேட்டறிந்துக் கொள்ள வில்லை. ஆனால், ஒருசில வருடம் கழித்து நான் மீண்டும் எங்கள் ஊருக்கு வந்த போதுதான் நான் வாழ்க்கை மட்டும் தான் இழந்தேன், அருள் அவனையே இழந்துவிட்டான் என்ற துயர செய்தி அறிந்தேன்.
திருமணமான ஒரே வருடத்தில் அவனது மனைவி இறந்துவிட்டால் என்றும், அவன் ஏதோ நினைவாக (என் நினைவாக) பைத்தியம் போல குடிக்கு அடிமையாக சுற்றிக் கொண்டிருந்தான் என்றும் கூறினார்கள்.

தற்கொலை!
மனைவி இறந்த பிறகு ஏழெட்டு மாதங்கள் வெளியே எங்குமே தலை காட்டாத அருள், ஒரு நாள் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டான் என்று கூறினார்கள். நான் முற்றிலும் உடைந்து போனேன். அருள் நினைத்திருந்தால் அந்த திருமணத்தில் இருந்து தப்பித்து என்னை கைப்பிடித்திருக்கலாம் என்று நான் எண்ணி வருந்தியதும் உண்டு, அவன் மீது கோபித்துக் கொண்டதும் உண்டு.
ஆனால், என்னை காட்டிலும், அவன் காதல் சிறந்தது என்பதை நிரூபித்து அவன் உயரை மாய்த்துக் கொண்டான் என்பதை அறிந்த போதே நான் மனதளவில் இறந்துவிட்டேன்.



Click it and Unblock the Notifications











