Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
4 வருட காதலில், வேசி என்ற பெயர் மட்டும் தான் எனக்கு கிடைத்தது - My Story #237
4 வருட காதலில், வேசி என்ற பெயர் மட்டும் தான் எனக்கு கிடைத்தது - My Story #237
ஒரு விழாவில் எனது தோழன் ஒருவன் மூலமாக அவன் அறிமுகமானான். முதல் பார்வையிலே காதல் என்பார்களே, அப்படியான ஒரு ஈர்ப்பு அவன் மீது. அழகு என்பதை தாண்டி, அவன் பேசிய பேச்சும், அவன் பழகிய விதமும் எந்த பெண்ணாக இருந்தாலும் உடனே நட்பில் இணைய செய்துவிடும். ஆனால், நட்பு என்பதை தாண்டிய ஒரு ஈர்ப்பு எங்கள் இருவருக்குள்ளும் உண்டானது.
ஆனால், நான் வசிப்பது ஒரு ஊரில், அவன் வசிப்பது ஒரு ஊரில். விமானத்தில் பயணிப்பதை தவிர வேறு வகையில் ஒரே நாளில் எங்களால் சந்தித்துக் கொள்ள இயலாது. அவ்வளவு இடைப்பட்ட தூரம். டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் என்று ஆங்கிலத்தில் கூறும் தொலைதூர உறவாக உதயமானது எங்கள் காதல்.
ஆனால், நான்கு வருடம் சொர்க்கமாக நான் கருதிய காதல், ஒரே இரவில் என்னை வேசியாக்கி முடக்கியது...

அன்பானவன்!
அவனிடம் அனைவருக்கும் பிடித்த விஷயமே அனைத்தையும் அன்பாக காண்பது. ஒருவர் கோபம் கொண்டாலும், எரிச்சலுடன் நடந்துக் கொண்டாலும், அவர்கள் பார்வையில் இருந்து, சூழலில் இருந்து அதை கண்டு, அந்த கோபமும், எரிச்சலும் நியாயம் தான் என்று சப்போர்ட் செய்வான். அவனுக்கு கோபமே வராதா? அவன் யாரையும் புண்படுத்தவே மாட்டானா? என்ற சந்தேகம் எனக்குள் பலமுறை எழுந்துள்ளது.

வீடியோ கால்!
பெரும்பாலும் நாங்கள் பார்த்துக் கொள்வது வாட்ஸ்அப் வீடியோ காலில் தான். நிறைய குறுஞ்செய்திகளில் பேசி முடித்த பின், ஒருவரை, ஒருவர் வீடியோ காலில் பார்த்து மகிந்தோம். வீடியோ காலில் காதல் என்பது ஒரு புதிய அனுபவமாக தான் இருந்தது. அவன் கை விரல்கள், இதழ்களை விடவும், அவனது கண்கள் மிகவும் அழகாக பேசும் என்பதை நான் உணர்ந்ததும் அந்த வீடியோ கால்களில் தான்.
பலமுறை வெட்கப்பட்டு வீடியோ அழைப்பை துண்டித்துள்ளேன்.

நீண்ட நாள் கழித்து...
எங்கள் இருவரின் பொருளாதார நிலையும், மிகவும் மேலோங்கியது எல்லாம் இல்லை. ஆகவே, நாங்கள் அதிகம் நேரில் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. ஒருமுறை என்னை காண வருகிறேன் என்று கூறினான். ரயிலில் தான் வந்தான்.. என்னுடன் இரண்டு, மூன்று நாட்கள் நேரம் செலவிட நீண்ட ரயில் பயணத்தில் வந்துக் கொண்டிருந்தான். அடுத்து வரும் நாட்களை அவனுடன் எப்படி எல்லாம் கழிக்க வேண்டும் என்று பெரும் பட்டியலே போட்டு வைத்திருந்தேன்.

வேறு ஊர்...
நான் தங்கி படித்து வந்த ஊரில் இருந்து பக்கத்து ஊரில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினோம், நிறைய பேசினோம், நிறைய ஊர் சுற்றினோம், அவனது தோளில் சாய்ந்து பேசுவது எனக்கு பெயரிட முடியாத உணர்வை அளித்தது. நான் அவனுடன் இரண்டு இரவுகள் தங்கி இருந்தேன். அவன் உடலுறவு குறித்து ஒருமுறை கூட பேசவில்லை. எங்களுக்குள் அந்த எண்ணமே இல்லை. அவன் என் மனதில் இன்னும் உயரமான நிலைக்கு சென்றது அந்த இரண்டு நாட்களில் தான்.

அழுதான்...
என்னை பிரிந்து செல்லும் போது கண்ணீர் விட்டு அழுதான். என்னை இந்த அளவுக்கு அவன் விரும்புவான் என்று, மிஸ் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகையால், கூடிய விரைவில் நாம் ஒன்றிணைவோம் என்று ஆறுதல் கூறி அவனை அனுப்பிவைத்தேன்.
என் கல்லூரி நாட்கள் முடிந்தன, ஒரு பிரபல கல்லூரியில் மேலாண்மை படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வாய்ப்பை தட்டிக் கழித்து பெற்றோர் பேச்சு கேளாமல், பெங்களுரு அருகே வேலை பெற்று புதிய ஊருக்கு சென்றேன். அங்கே,, நானும் அவனும் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தனி வீடு!
அவன் வந்து செல்லும் போது தங்க வேண்டும் என்பதற்காகவே, தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கினேன். ஒருமுறை விடுமுறை நாட்களில் வந்தவன் உடலுறவில் ஈடுபட வற்புறுத்தினான். நான் வேண்டாம் என்று கூறியும், என்னை பேசி சம்மதிக்க வைக்க முயற்சித்தான்.
அவனது செயல் மிருகத்தனமாக இருந்தது, நான் மிகுந்த வலிக்கு ஆளானேன். எங்களுக்குள் சிறிய சண்டையும் வந்தது, அவன் கோபத்தில் என்னைவிட்டு விலகி சென்றான். பிறகு, ஏதோ கோபத்தில் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று கூறினான்.

மீண்டும்...
அவனது அந்த திடீர் மனமாற்றம், அவனது செயல்கள் என்னை மனதளவில் பெரிதும் காயப்படுத்தியது. ஆனாலும், ஏதோ தவறான மனநிலை கோபத்தால் அப்படி நடந்துக் கொண்டான் என்று நான் அவனை மன்னித்துவிட்டேன். ஆனால், அவனுக்குள் ஒரு மிருகம் இருந்தது. அது மறுநாளே மீண்டும் வெளிப்பட்டது. என்னை மீண்டும் உடலுறவுக்கு வற்புறுத்தினான். இம்முறையும் மறுத்தேன்.

மிருகம்!
என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொள்ள முயற்சித்தான், உண்மையில் அவன் என்னை கற்பழிக்க முயற்சித்தான். ஆனால், நான் கொஞ்சம் உடல் வலிமையாக இருந்த காரணத்தால், அவனது படியில் இருந்து தப்பிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனது மிருகத்தனத்தை கட்டுப்படுத்த முடியாமல் கிழிந்த உடையுடன் அறையை விட்டு வெளி ஓடினேன்.
மறு நாள் காலை எங்கள் இருவருக்குள் சண்டை முற்றியது...
சண்டையின் முடிவில், நான் உன்னுடன் இந்த நான்கு ஆண்டுகள் வீணடித்ததற்கு பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்திருப்பேன். நீ ஒரு வேசி. என்று தட்டி என் வீட்டை விட்டும், மனதை விட்டும் சென்றான்.

ஸ்ட்ராங்!
அவனது பிரிவு என்னை மனதளவில் பாதித்தது. அதில் இருந்து வெளிவர வேண்டும் என்ற காரணத்தால் ஜிம்மில் சேர்ந்தேன். பல மடங்கு உடலளவிலும், மனதளவிலும் வலிமையாக வளர்ந்தேன். இன்றும் அவன் ஏற்படுத்தி சென்ற காயங்களின் தடயங்கள் இருக்கின்றன தான். ஆனால், என் இதயம் இனியொரு காயம் ஏற்படாத அளவிற்கு வலிமையாக உருமாறி இருக்கிறது.



Click it and Unblock the Notifications