நீங்க இதுக்காக மட்டும் தான் பழகுறீங்கன்னு பொண்ணுங்க எப்படி தெரிஞ்சுப்பாங்க?

Posted By:
Subscribe to Boldsky

நீங்க கெத்து என நினைத்து செய்யும் சில விஷயங்களை பெண்கள் வெத்து என்று தான் பார்க்கிறார்கள். உதாரணமாக, எனக்கு அதிகமா கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க... நான் தேவதைங்களோட வாழ்றவன் என பிக் பாஸ் சினேகன் போல உதார் விடுவதை பெண்கள் விரும்புவதில்லை.

உண்மையில், அவ்வளவு கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தா, அவங்களோடவே இருந்துக்க.. என துச்சமாக எண்ணி நகர்ந்துவிடுவார்கள். சில சமயம் பெண்களை கவர்கிறேன் என ஆண்கள் சிலவற்றை செய்வார்கள். ஆனால், அதை எல்லாம் பிளாக் லிஸ்டில் வைத்துள்ளனர் பெண்கள்.

முக்கியமாக இந்த அறிகுறிகள் எல்லாம் ஓர் ஆணிடம் தென்பட்டால் அவன் மோசமானவன், ஏமாற்றிவிடுவான் பெண்கள் கருதுகிறார்கள். எனவே, ஆண்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீராத விளையாட்டு பிள்ளை!

தீராத விளையாட்டு பிள்ளை!

# முதல் வகை

நிறைய பெண்கள் ஃபேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில் இருப்பார்கள். கேட்டால், ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவ்வளவு தான் என்பார்கள். நள்ளிரவு இரண்டு மணிக்கு ஏதோ மதிய வேளையில் சாட்டிங் செய்வது போல் சர்வ சாதாரணமாக சாட்டிங் செய்துக் கொண்டிருப்பார்கள். இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் பிகினி, ஹாட் மாடல்களை லைக் செய்து, பின்தொடர்ந்து வருவார்கள். தன் ஈர்ப்பு கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதெல்லாம் மாடர்ன் பெண்கள் ஒரு ஆணை மோசமானவன், அவனிடம் உண்மையான காதலை எதிர்பார்க்க முடியாது, ஏமாற்றி விடுவான் என கூறி பட்டியலிடும் அறிகுறிகள்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

மாடர்ன் பெண்களை சுலபமாக ப்ளர்டிங் செய்து ஈர்த்து விடலாம் என்பதெல்லாம் ஆகாத காரியம். உண்மையில் எல்லா ஈர்ப்புமே காதலாகிவிடாது. உதாரணமாக, உங்கள் புகைப்படத்திற்கு ஒரு பெண் லவ் ரியாக்ட் செய்தால், அந்த பெண்களை காதலிக்கிறார் என்று பொருளல்ல, அந்த படம் அழகாக இருக்கிறது, அந்த படத்தை விரும்புகிறார், அந்த படத்தில் இருக்கும் லுக்கை விரும்புகிறார் என்றே பொருள். சிலர் ஏதாவது பெண் ஸ்மைலி ரியாக்ட் கொடுத்துவிட்டால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்கள். எனவே, வெறும் ஈர்ப்பு ஏற்படுத்த கவர்ச்சியாக எதையாவது செய்வதை தவிர்த்திடுங்கள்.

சீரியல்!

சீரியல்!

# இரண்டாம் வகை

ஏகப்பட்ட ப்ரேக்-அப், ஒரு காதல் கூட நீடித்து நிலைக்காது. ஏனெனில், அவர்கள் ஈடுபடுவது காதலில் அல்ல. எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என பிளான் செய்வார்கள். அது முடியாது என்று அறிந்துவிட்டால் ஏதேதோ காரணம் சொல்லி ப்ரேக்-அப் செய்துவிடுவார்கள்.

இவர்களை கண்டறிவது மிகவும் எளிது, ஆரம்பத்தில் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் நினைத்தது ஈடேராது என அறிந்துவிட்டால், உப்புசப்பு இல்லாத காரணம் கூறி திடீரென சாட்டிங் செய்வதை நிறுத்திக் கொள்வார்கள்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

இருபதின் இறுதி வரை நீங்கள் இப்படி அலையாலாம். அதன் பிறகு? சிலர் திருமணம் செய்ய பெண் பார்க்கும் போதிலும் இதை செய்வது உண்டு. அழகான பெண் தான் வேண்டுமென பல ஆண்டுகள் அடம்பிடிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சரி, அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறீர்கள், அவர் யாருக்கும் மரியாதை அளிக்காமல், தலைகனத்துடன் நடந்து கொண்டால் என்ன செய்வீர்கள்.

இது அழகான பெண்களுக்கு எல்லாம் தலைகனம் இருக்குமா? என்பதை குறிப்பது அல்ல. உண்மையான அழகு முகத்தில் இல்லை அகத்தில் இருக்கிறது என்பதை குறிப்பது.

போரிங்!

போரிங்!

# மூன்றாம் வகை

எப்போது பார்த்தாலும், ஏதாவது சுவாரஸ்யமாக பேசு என கூறுவார்கள், ஒரு சமயம் அந்த பெண்ணிடம் அந்த ஆண் எதிர்பார்க்கும் சுவாரஸ்யம் கிடைக்கவில்லை எனில், உடனே உறவில் இருந்து விலகிக் கொள்வார்கள். இந்த வகை ஆண்களிடம் ஈர்ப்பு மாறிக் கொண்டே இருக்கும். பலரிடம் ஒரே நேரத்தில் பழக முனைவார்கள். இவர்களுக்கான பெண் கிடைத்துவிட்டால் அவர்களுடன் இணைந்துவிடுவார்கள்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

உங்களுக்கு பிடித்த மாதிரியான பெண்ணை எதிர்பார்க்கலாமே தவிர, நீங்கள் விரும்புவதை எல்லாம் விரும்பும் பெண்ணை எதிர்பார்ப்பது தவறு. இருவருக்கும் ஒரே மாதிரியான பிடித்தவை இருந்தால், இல்லறத்தில் பெரிதாக ஒருவருக்கு, ஒருவர் கற்றுக் கொடுத்தல், ஒருவரிடம் ஒருவர் புதிதாக அறிதல் என ஒன்றுமே இருக்காது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால், இல்வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது.

ஆளுமை!

ஆளுமை!

# நான்காம் வகை

நான் சொல்வதை கேள், நீயாக எதையும் செய்யாதே, உனக்கு எதுவும் தெரியாது என தான் ஒரு சக்தி வாய்ந்த நபர் போலவும், அந்த பெண் ஒன்றும் தெரியாதவள் போலவும் உறவில் ஆளுமை, ஆதிக்கம் செலுத்தும் நபர்களை என்றும் நம்ப முடியாது. இவர்கள் எப்போது சண்டை போடுவார்கள், எப்போது நம்மை வேதனைக்கு உட்படுத்துவார்கள் என்றே தெரியாது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

நான் தான் என்ற ஆணவம் வரும் போதே ஒருவனது அழிவு துவங்கிவிடுகிறது. இது அரசுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றில்லை. இல்லறத்திற்கும் பொருந்தும். ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக அன்பு செலுத்துங்கள். அனைவரும் அனைத்தும் அறிந்திருக்க மாட்டார்கள். அறியாததை மட்டம்தட்டி சொல்லிக் கொடுப்பதை காட்டிலும், தட்டிக் கொடுத்து கற்பிக்கலாம்.

அழகு!

அழகு!

# ஐந்தாம் வகை

அழகை மட்டுமே எதிர்காணும் ஆண்! அழகை மட்டுமே விரும்பும் ஆண். சற்று உடல் எடை கூடினாலும், நீ டயட்டில் இரு, உடற்பயிற்சி செய், நீ ஏன் இப்படி இருக்க என எதிர்மறையாக பேச துவங்குவார்கள். காதலிக்கும் போது மட்டுமல்ல, திருமணத்திற்கு பிறகும் இப்படிப்பட்ட ஆண்களை பார்க்க முடியும். ஒருவேளை மனைவியின் அழகு சீர்குலைய ஆரம்பித்தால், இவர்களது எண்ணமும், விருப்பமும் வேறு பெண் மீது திசைதிரும்ப வாய்ப்புகள் உள்ளன என திருமணமான பெண்கள் கூறுகிறார்கள்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

நீங்கள் செய்யும் இதே தவறை, உங்களுக்கு சொட்டை விழுந்த பிறகோ, தொப்பை வந்த பிறகோ உங்கள் மனைவியும் செய்தால்? என்பதை ஒருமுறை எண்ணி பாருங்கள். அழகு என்பது உடலில் இருக்கும் வளைவுகளில் இல்லை. இல்லறத்தில் என்ன நடந்தாலும் வளைந்து கொடுத்து நடந்துக் கொள்ளும் மனோபாவத்தில் இருக்கிறது என்பது புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs: The Most Likely Cheating Men!

Signs: The Most Likely Cheating Men!
Story first published: Wednesday, October 25, 2017, 14:00 [IST]