Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அவள் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தரலாம் என்பதற்கான காரணங்கள்!
சின்ன சின்ன தவறுகளுக்காக உறவை முறித்துக் கொள்வது முட்டாள்தனமான செயல். தவறுகள் செய்யாத உயிரினமே இவ்வுலகில் இல்லை. எல்லை மீறாமல் இருந்தால் சரி. எதற்கும் ஒரு அளவுண்டு. அதை தாண்டுவது தான் பெரிய தவறு. நீங்கள் என்ன செய்தாலும் அவர் பொறுத்துக் கொள்கிறார் என்பதற்காக, மீண்டும் மீண்டும் தவறு செய்துக் கொண்டே இருக்க கூடாது.
வருங்கால கணவனிடம் பெண்கள் கேட்க தயங்கும் 13 கேள்விகள், இதற்கான உங்கள் பதில் என்ன?
காதலில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக கோவம் வரும். அதற்கு ஒரு வகையில் ஆண்கள் தான் காரணம். ஆயினும், சண்டை பெரிதாகி இனிமேல் முகத்திலேயே முழிக்காத என்று கூறி கோபித்தும் கொள்வார்கள். இப்படி கோபித்துக் கொண்டு போன பிறகு, மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அவர் மீண்டும் வர வாய்ப்புகள் உண்டா?
சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக விரும்பும் 6 விஷயங்கள்!
வாய்ப்புகள் மட்டுமல்ல, மீண்டும் காதலில் இணைய காரணங்களும் நிறைய இருக்கின்றன. அவை என்னென்ன என்று இனிக் காணலாம்...

கண்களை பார்த்தல்
நீங்கள் அவரிடம் பேச முயற்சிக்கும் கண்களால் ஓர் லுக் விடுவார்கள். அந்த லுக்கில் போனா போகட்டும் பொழச்சு போ என்பது போன்ற பாவனைதெறிக்கும். அப்போதே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம், உங்களை அவர் மன்னித்து விட்டார். நீங்கள் மீண்டும் காதல் உறவில் சிறகடித்து பறக்கலாம் என.

தோழிகளின் அறிவுரை
பெரும்பாலும் உங்கள் காதல் பிரிவதற்கும், இணைவதற்கும் அவரது தோழிகள் தான் காரணம். பசங்களே இப்படி தான் என குற்றம் சாட்டுவதும் அவர்கள் தான். போனா போகட்டும் டி, யாரு தான் தப்பு பண்ணல என்று கூறி இணைப்பதும் அவர்கள் தான். அவர்கள் கூட ஓர் காரணமாக இருக்கலாம்.

நம்பிக்கை
உங்கள் மீதான நம்பிக்கை வலுத்து, சரி இனிமேல் நீங்கள் தவறை செய்ய மாட்டீர்கள் என்று எண்ணி மன்னிக்கலாம்.

காரணம் ஒழிந்தது
எதற்காக உங்கள் இருவருக்குள் சண்டை வந்ததோ அந்த காரணத்தை அவர் மறந்து அல்லது அதற்கு தீர்வுக் கண்டு உங்களை மன்னித்து, மீண்டும் ஏற்றுக் கொள்ளலாம்.

தவறு அவர் புறம்
தவறு என் மீது தான் என்பதை அவர் மெதுவாக உணர்ந்து. சரி மீண்டும் உறவில் இணையலாம் என யோசித்திருக்கலாம்.

அன்பு
உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கை மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு, கோபத்தையும் தாண்டி எட்டிப்பார்க்கும் போது மன்னித்துவிடலாம் என்ற எண்ணம் பிறந்திருக்கலாம்.

சிறந்த பண்புகள்
உங்களது சிறந்த பண்புகளை ஒருமுறை எண்ணிப்பார்த்து. அடடே, இப்படி பட்ட ஆளை எப்படி மிஸ் செய்து என்று கூற காதலில் மீண்டும் திளைக்கும் வாயப்புகள் உண்டு.

அழியாத நினைவுகள்
நீங்கள் இருவரும் உறவில் இருந்த போது உண்டான அந்த மலரும் நினைவுகள் அவர் கண்முன் அடிக்கடி வந்து வந்து போய் டிஸ்டர்ப் செய்து. மீண்டும் உறவில் இணைய காரணமாக இருக்கலாம்.

மாற்றம்
மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள் ஒரு நாள் திருந்தாமலா போய்விடுவீர்கள், என்ன செய்வது காதலித்து தொலைத்துவிட்டோம் என்று சலித்துக் கொண்டு கூட மன்னித்து மீண்டும் காதல் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications