ஆன்லைன் டேட்டிங் மூலமாக அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று பாடங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நேரடியாக இளைஞர்கள் மத்தியில் பூதாகரமாக வளர்ந்து வரும் இதே நேரத்தில் தான் மறைமுகமாக ஆன்லைன் டேட்டிங் என்பது வளர்ந்து வருகிறது. இதுவும் ஒரு மாய உலகம். இளைஞர்களை கவர்ந்திழுத்து நல்ல லாபம் பார்த்து வருகிறது நிறைய இணையங்களும், மொபைல் செயலிகளும்.

வாட்ஸ் அப் போன்ற மொபைல் செயலிகளுக்கு கூட காசு செலவு செய்ய தயங்கும் இந்திய இளசுகள், இந்த ஆன்லைன் டேட்டிங்கில் காசை தாறுமாறாக செலவு செய்கிறார்கள். இந்த ஆன்லைன் டேட்டிங்கில் முகவர் சந்தா மூலம் மட்டுமே கோடிக் கணக்கில் பணம் புரளுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்லாக்ஸ்

சில்லாக்ஸ்

இன்றைய பொழுதில் உடலுறவு, காமம், இச்சை, காதல், தீண்டல்கள், உராய்வுகள், உரசல்கள் போன்றவற்றில் தான் 75%திற்கும் அதிகமான இளைய சமூதாயம் எதிர்பார்த்து ஏங்குகிறது. அனைவருக்குமே முதல் பார்வையில் காதல் கிடைப்பது இல்லை. சிலருக்கு கடைசி வரையிலும் கிடைப்பதில்லை. இவர்கள் சில்லாக்ஸ் செய்யவே உருவாக்கப்பட்டது தான் ஆன்லைன் டேட்டிங்.

இதில் என்ன இருக்கிறது

இதில் என்ன இருக்கிறது

சில வாரங்களுக்கு முன்பு நெடிசன்களால் முடக்கப்பட்ட ஓர் ஆன்லைன் டேட்டிங் இணையத்தில் மட்டும் இந்திய இளம் தலைமுறை பல கோடிகளை வாரி இறைத்து டேட்டிங் செய்துள்ளனர் என்ற தகவல் கசிந்தது. இதன் மூலம் பலரது தகவல்கள் திருடப்பட்டது என்றும் சில கருத்துகள் பரவின.

ஆழமாக செல்ல வேண்டாம்

ஆழமாக செல்ல வேண்டாம்

பொழுதுப் போகவில்லை இதில் நேரம் செலவிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இதையே கட்டிக்கொண்டு இதற்காக பணம் செலவழித்துக் கொண்டு திரிவது எல்லாம் மிகவும் தவறு.

நேரத்தை வீணாக்க வேண்டாம்

நேரத்தை வீணாக்க வேண்டாம்

தேவையில்லாமல் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. மற்றும் உங்களோடு பழகும் அந்த நபர் உண்மையிலேயே ஆணா, பெண்ணா என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

இதற்கு சிங்கிளாகவே இருக்கலாம்

இதற்கு சிங்கிளாகவே இருக்கலாம்

ஆணா? பெண்ணா? என்று கூட தெரியாமல் நீங்கள் டேட்டிங் செய்து போலியான இன்பத்தை அடைவதற்கு மாறாக, சிங்கிளாக சிங்கம் போல இருக்கலாம். வீணாக பணத்தை விரயம் செய்யாமல், அதற்கு பதிலாக நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்துவிட்டு போகலாம். ஃபேஸ்புக்கில் நாலு லைக்காவது அதிகம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Three Lessons From Online Dating You Should Learn

Here we have discussed about the three lessons from online dating everyone should learn, in tamil. Take a look.