Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
காதலில் மகிழ்ச்சியாக இருக்க இதையெல்லாம் அனுசரித்து தான் போக வேண்டும்!!
உங்கள் காதல் வாழ்க்கை திருமணத்திற்கு முன்பும் சரி, பிறகும் சரி இன்பமாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் சில விஷயங்களை எப்படி இருக்கிறதோ, அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல், உங்கள் மகிழ்ச்சியில் விரிசல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
காதல் வாழ்க்கை என்பது மனம் சார்ந்தது என்றாலும், உடல் சார்ந்த விஷயங்களினால் ஏற்படும் விளைவுகளை ஏற்று நடக்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் சண்டைகள் வந்தாலும் அதன் பிறகு புரிதல் ஏற்பட வேண்டும், உங்கள் காதல் துணை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் சேர்த்து நீங்கள் விரும்ப வேண்டும். இவை எல்லாம் தான் ஒருவரது காதல் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகிறது...

தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்
தவறுகள் செய்யாத மனிதர்கள் இவ்வுலகிலேயே இல்லை. நீங்கள் காதலிக்கும் நபரின் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை முழுமையாக ஏற்று காதலிக்க வேண்டும். ஓர் பக்கத்தை மட்டும் பார்த்து காதலிப்பது சரியான விளைவை தராது.

சண்டை
சண்டைகள் இல்லாத உறவுகளே இல்லை. சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் பிரிந்து செல்வதென்றால் இவ்வுலகில் திருமணமான அனைவரும் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். எனவே சண்டையிடுங்கள், சண்டையிட்ட அடுத்த சிறுது நேரத்திலேயே புரிந்துக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பங்களும் இணைகின்றன
எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் வெறும் இருவர் மட்டும் இணையப் போவதில்லை, இரு குடும்பங்கள் இணைகின்றன. எனவே, நீங்கள் காதலிக்கும் நபரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் விரும்ப நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அந்த மூன்று நாட்கள்
பெண்களின் அந்த மூன்று நாட்களை எந்த ஒரு நபர் புரிந்துக் கொள்கிறாரோ, அவரே சிறந்த துணையாக இருக்க முடியும்.

மாதவிடாய் கோளாறுகள்
மாதாவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, இரத்த போக்கே இல்லாமல் இருப்பது, நாட்கள் தள்ளி போவது என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த சமயத்தில் வலியின் காரணமாக பெண்கள் வலுவிழந்து போகலாம். சிலருக்கு அதிகமான கோவம் வரும் இவற்றை எல்லாம் ஏற்று அவரை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

சந்தோஷம்
மகிழ்ச்சி வந்து செல்வது போலவே, துன்பமும் வந்து போகும். எல்லா சூழல்களிலும் உங்கள் துணையை அரவணைத்து வாழ்க்கையை வழிநடத்தி செல்ல வேண்டும். இதுவே உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை பரிசளிக்கும்.



Click it and Unblock the Notifications
