திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

மனம் இணைந்த பிறகு உடல் இணைவது தான் சிறந்த உறவாக இருக்க முடியும். கட்டுப்பாடுகள் இன்றி இங்கு எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தான் உறவை வலுப்படுத்த திருமணம் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.

கிறுக்குத்தனமான தோழிகள் கொண்ட ஆண்களுக்கு மட்டுமே கிட்டும் பாக்கியங்கள் - ஜமாய்!!!

ஆயினும் கூட இன்றைய தலைமுறையினர், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அனுபவத்து விட்டு, திருமணத்திற்கு பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன? காதல் முழுதாய் முளைக்கும் முன்னரே இவர்கள் உடலுறவில் திளைக்க விரும்புவது ஏன்?

கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணுங்க அதிகமா செய்யிற தவறுகள்!! - நீங்க தான் அனுசரிச்சு போகணும்!!!

வாழ்வியல் மாற்றம் என்ற ஒற்றை சொல்லில் இதை அடக்கிவிட முடியாது. இதற்கு பெற்றோர், சமூகம் என பல காரணங்கள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோரின் கவனக் குறைவு

பெற்றோரின் கவனக் குறைவு

இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில், உலகில் நடக்கும் எந்த செயலையும், நடந்த அடுத்த வினாடியில் அறிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதில் இன்றைய சந்ததியினர் பதின் வயதை எட்டும் போதே உடலுறவைப் பற்றியும் அறிந்துக் கொள்கின்றனர். நமது குழந்தை எதை தெரிந்துக் கொள்கின்றான், என்ன முயல்கிறான் என்பதையே நிறைய பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வதில்லை.

பாட்டி, தாத்தா உறவு இல்லாமை

பாட்டி, தாத்தா உறவு இல்லாமை

இன்றைய வீடுகளில் 90% பாட்டி, தாத்தா என்ற உறவு பேரன் பதின் வயதை எட்டும் போது இருப்பதில்லை. ஒன்று உயிரோடு இருப்பதில்லை. மற்றொன்று அவர்களது அரவணைப்பில் குழந்தைகள் இல்லை. பாட்டி, தாத்தாவின் அரவணைப்பு இல்லாதது கூட இவ்வாறான தவறுகளில் ஈடுபட குழந்தைகளை தூண்டுகிறது.

மேற்கத்திய சீரியல் மோகம்

மேற்கத்திய சீரியல் மோகம்

அம்மாக்கள் "வாணி ராணி" பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பிள்ளைகள் "கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ்" பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல் பார்ப்பது தவறல்ல. ஆனால், பல ஆங்கில சீரியல் மற்றும் படங்களில் அதிக அளவிலான ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இவை, இவர்களை எதிர் பாலினத்தோடு உறவுக் கொள்ள தூண்டுகிறது.

காமத்திற்காக காதலை தேடும் பிள்ளைகள்

காமத்திற்காக காதலை தேடும் பிள்ளைகள்

டிவி, இணையத்தளம் போன்றவற்றில் ஆபாசங்கள் அதிகரித்துள்ளதால் இன்றைய பதின் வயது குழந்தைகள், பிள்ளைகளுக்கு உடலுறவில் நாட்டம் அதிகரிக்கிறது. காமத்திற்காக காதலை கருவியாக பயன்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நண்பர்களின் மூலம் தூண்டிவிடப்படுதல்

நண்பர்களின் மூலம் தூண்டிவிடப்படுதல்

காதலிக்கும் போதே உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என்பது போல சில நண்பர்கள் தூண்டிவிடுவது கூட ஓர் காரணமாக அமைந்துவிடுகிறது. "இதுக்கூட பண்ணாட்டி நீயெல்லாம் என்னடா..." என்று கூறும் ஓர் வாக்கியம் தான் பலரது வாழ்க்கையில் புயல் வீச காரணமாகிவிடுகிறது.

கற்பின் மதிப்பு அறியாமை

கற்பின் மதிப்பு அறியாமை

ஒப்புக்கொள்ள கசப்பாக இருப்பினும், 100% உண்மை இதுதான். இன்றை பெண் குழந்தைகளுக்கு மத்தியில் கற்பின் மதிப்பு அறியாமை நிலவுகிறது. இதற்கு மற்றொரு காரணமாக இருப்பது கூச்சம் மறந்தது. சிறு வயதிலேயே தொப்புள் தெரிய உடை அணிவித்து பழக்கிய பெற்றோரை தான் குறை கூற வேண்டும்.

மேற்கத்தியம் வேண்டாம்

மேற்கத்தியம் வேண்டாம்

நம் முன்னோர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்தது போலவே, வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர்கள். இப்போது தான் மேற்கத்தியர்கள் அது என்ன என்று கற்றுக் கொண்டு வருகிறார்கள். எனவே, மேற்கத்தியம் பழகுகிறேன் என்று சுய மரியாதையை இழந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why People Are Much More Interested In Premarital Intercourse

Do you know about the Reasons Why People Are Much More Interested In Premarital Intercourse? read here.
Subscribe Newsletter