ஏன் ஆண்கள் கூலான பெண்களை காதலிக்க விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் எப்போதும் தங்களது குணத்திற்கும், பண்பிற்கும் எதிர்மறையாக இருக்கும் பெண்களை தான் விரும்புவார்கள். எப்படி நமது இந்திய திரைப்படங்களில் கரடுமுரடான வில்லன்களுக்கு, மென்மையான நாயகியை பிடிக்கிறதோ. அப்படி தான் கோவத்தின் முழு உருவாக இருக்கும் ஆண்களுக்கு கூலான பெண்களை பிடிப்பதும்.

திருமணம் செய்துக்கொள்ள போகும் காதலர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

ஒரு உரையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இருவரும் கத்தியாக இருந்தால், கடைசி வரையிலும் கத்திக் கொண்டே இருக்க வேண்டியது தான். வாழ்க்கையை வாழ முடியாது. தங்களால் கோவத்தை இழக்க முடியாது என்பதற்காக தான், ஆண்கள் அதை கட்டுப்படுத்த ஓர் கூலான பெண்ணை தங்களது துணையாக விரும்புகிறார்கள் (அ) தேடுகிறார்கள்...

"ரெட்ட ஜடை, மல்லிகப்பூ, வகிடெடுத்த நெற்றி..." - எங்கே சென்றன இவை எல்லாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதியான வாழ்வியலுக்காக

அமைதியான வாழ்வியலுக்காக

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஓர் நபர் தான் நமது காதல் துணையாக இருக்க முடியும். தோல்வியின் போது தோள் கொடுக்கவும், வெற்றியின் போது துணை நிற்கவும் நாம் எதிர்பார்க்கும் நபர்கள் தான் இவர்கள். ஆண்கள் பொதுவாகவே கோவம் அதிகம் கொள்பவர்கள். இதில், பெண்ணும் தீயாக கொந்தளிக்கும் குணம் கொண்டிருந்தால் வீடு தாங்காது.

நம்மை கட்டுபடுத்துவார்கள்

நம்மை கட்டுபடுத்துவார்கள்

ஒருநாளும் ஆண்களை ஆண்கள் முழுதாய் கட்டுப்படுத்த முடியாது. நண்பன் ஒருவன் கோவமாக வந்தால், அவனை உசுப்பேத்தும் நண்பர்கள் தான் நம்மில் அதிகம். ஆனால், ஓர் பெண்ணால் ஆணை ஓர் பார்வையில், கண் சிமிட்டலில் கட்டுப்படுத்த முடியும். அதற்கு முதலில் அந்த பெண் கூலாக இருக்க வேண்டும்.

அறிவுரை

அறிவுரை

ஆண்கள் என்னதான் அறிவுத்திறன் அதிகம் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட உடைந்து போய்விடுவார்கள். இந்த நேரத்தில் அவர்களின் துணையாய் இருக்கும் காதலி / மனைவி அருகே இருந்து அறிவுரை கூறி அவர்களை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல உதவ வேண்டும். இது எல்லா நிலையிலும் தன்னிலை இழக்காத ஓர் கூலான பெண்ணால் தான் முடியும்.

குடும்பத்தை வழிநடத்த

குடும்பத்தை வழிநடத்த

ஆண்கள் குடும்ப தலைவன் என்ற பெயரோடு இருந்தாலும், குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்த ஓர் பெண்ணால் தான் முடியும். அமைதியான சுபாவம் கொண்ட பெண்ணால் தான் குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்தி செல்ல முடியும்.

குழந்தைகளை பக்குவமாக வளர்க்க

குழந்தைகளை பக்குவமாக வளர்க்க

தவறுகள் செய்யாத குழந்தைகளே இருக்க முடியாது. அந்த நேரத்தில் அன்பாக பேசி பக்குவமாக எடுத்துக்கூறி வளர்க்க வேண்டுமே தவிர, அடித்து ஓர் வழிக்கு கொண்டுவர நினைக்க கூடாது. ஓர் கூலான பெண்ணால் தான் பக்குவமாக நடந்துக் கொள்ளவும் முடியும், மற்றவரையும் பக்குவமாக கையாள முடியும்.

அம்மா, அப்பாவாக நினைக்க வேண்டும்

அம்மா, அப்பாவாக நினைக்க வேண்டும்

மாமியார், மாமனாரையும் தனது அம்மா, அப்பாவாக நினைத்து அவர்களிடம் அன்பு செலுத்த ஓர் கூலான, அன்பான பெண்ணால் தான் முடியும். ஆண்கள், தங்களது மனைவி இவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

அன்பின் உருவாக

அன்பின் உருவாக

ஓர் நல்ல காதலியாக, மனைவியாக, தாயாக, மருமகளாக அனைத்து உறவுகளிலும் அன்பின் உருவாய் இருக்க கூலான பெண்களை வேண்டி விரும்புகிறார்கள் ஆண்கள். உண்மையில் தேடி அலைகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Men Need A Cool Girlfriend

Do you know about the reasons why men need a cool girlfriend? read here.