For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுக்கு ஒரு பெண் உயிர் தோழியாக இருந்தால், அந்த ஆண் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

By Super
|

ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது எந்த ஒரு ஆணுக்கும் நம்ப முடியாத, அற்புதமான விஷயமாக இருக்கும். வேடிக்கையாக பேசுதல், அக்கறையுடன் கவனித்தல், உங்களை சரியாக புரிந்து கொள்ளுதல், மிகச்சிறந்த டேட்டிங் அறிவுரை போன்ற அனைத்தையும் நீங்கள் பெறலாம். ஆனால் ரோஜாப்பூ எவ்வளவு அழகாக இருந்தாலும் சரி, அதை சுற்றி முட்கள் இல்லாமல் இருக்குமா?

உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம் அந்த கேள்வியை கேட்க சரியான நேரம் எது?

அதேப்போல் தான் பெண் தோழியை வைத்துக் கொள்வது என்பது சில சமயங்களில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சில சூழல்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். பெண்களை உயிர் தோழியாய் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றினை கடந்து வந்திருப்பார்கள்.

ஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் இருவரும் ஒன்றாக உள்ளீர்கள் என அனைவரும் நினைப்பார்கள்

நீங்கள் இருவரும் ஒன்றாக உள்ளீர்கள் என அனைவரும் நினைப்பார்கள்

உயிர் தோழியாக பெண் இருப்பதால் ஏற்படும் மிகப்பெரிய நஷ்டம் என்னவென்று தெரியுமா? நீங்கள் இருவருமே ஒன்றாக உள்ளீர்கள் என ஒட்டமொத்த உலகமே நினைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் ஒன்றாக வாழ்வீர்கள் என அவர்கள் யூகிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உங்கள் உயிர் தோழியும் நீங்களும் ஜோடி என எண்ணுவது

உங்கள் உயிர் தோழியும் நீங்களும் ஜோடி என எண்ணுவது

இது ஒரு மிகப்பெரிய விபத்தாக அமையும். சில நேரங்களில் உங்கள் உயிர் தோழியை விலகி இருக்க சொல்ல வேண்டும் என உங்களுக்கு தோன்றும். சில சமயங்களில் தன் அழகிய பெண் தோழிகளுடன் உங்கள் உயிர் தோழி வரும் போது, உங்களுக்கு குதூகலமாகி விடும். ஆனால் உங்கள் தோழிக்கோ அதற்கு நேர் எதிராக இருக்கும். நீங்கள் எவ்வளவு தான் வசீகரமாக இருந்தாலும் கூட, உங்கள் உயிர் தோழியும் நீங்களும் ஜோடி என மற்ற பெண்கள் எண்ணி விடுவார்கள். 'வெறும் நண்பர்கள் மட்டுமே' என்ற அடைமொழியின் மீது தான் நண்பர்களின் நண்பர்களும் கண் இருக்கும். இவர்களை சுலபத்தில் சமாளிக்க முடியாது. முடிவற்ற காலம் வரை நீங்கள் தனியாக தான் இருப்பீர்கள் என சொல்வதே பாதுகாப்பாக இருக்கும்.

அவள் வெறும் தோழி மட்டும் தான் என நீங்கள் விளக்கும் போது தான் சிக்கலாகும்

அவள் வெறும் தோழி மட்டும் தான் என நீங்கள் விளக்கும் போது தான் சிக்கலாகும்

யாரும் அவ்வளவு சுலபத்தில் நம்ப போவதில்லை. உங்களைப் பற்றி எல்லாம் தெரிந்த விதமான ஒரு சிரிப்பை நீங்கள் அவர்களுடன் காணலாம். ஒன்று நீங்கள் பொய் சொல்கிறீர்கள் அல்லது உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்ற விதத்தில் அவர்களிடம் இருந்து வரும் இந்த சிரிப்பு. நீங்கள் எவ்வளவு தான் நம்ப வைக்க முயன்றாலும் எதுவும் நடக்காது.

உங்கள் மனம் கவர்ந்தவளை உங்கள் தோழி மதிப்பிடுவது

உங்கள் மனம் கவர்ந்தவளை உங்கள் தோழி மதிப்பிடுவது

உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை நீங்கள் கண்டுப்பிடித்து விட்டால், உங்களுடைய நெருங்கிய தோழி அவளை மிக கவனமாக மதிப்பீடு செய்ய தொடங்கி விடுவாள். அவள் உங்களுக்கு தகுந்தவளா இல்லையா என்பதை எல்லாம் கணிக்க தொடங்கி விடுவாள். உங்கள் காதலியை அக்கு வேறாக ஆணி வேறாக அலசி, மதிப்பீடு செய்கையில் கண்டிப்பாக உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அவள் ரொம்ப போலியாக இருக்கிறாள், அவள் அவ்வளவு அழகாக இல்லை, அவள் என்னிடம் மரியாதையில்லாமல் நடந்து கொண்டால், அவளுடைய நாகரீக டேஸ்ட் சகிக்கவில்லை என உங்கள் தோழி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உங்கள் பெண் தோழி அவரை வெறுக்கலாம்

உங்கள் பெண் தோழி அவரை வெறுக்கலாம்

மிக கொடூரமான பகுதி இது. அனைத்து தடைகளைத் தாண்டிய பிறகு, நீங்கள் ஜாக்பாட் அடிக்கும் நேரத்தில் உங்கள் தோழி உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். உங்கள் காதலிக்கும் உங்கள் உயிர் தோழிக்கும் கண்டிப்பாக ஒத்துப்போகாமல் போகலாம். ஒன்று உங்கள் காதலிக்கு உங்கள் உயிர் தோழியை பிடிக்காது; அதனால் உங்கள் இருவரையும் எப்போதும் சந்தேகப்படுவார், அல்லது உங்கள் உயிர் தோழி எப்போதும் உங்கள் காதலியை மதிப்பீடு செய்து அவரை குறை கூறிக் கொண்டே இருப்பார்.

சில சமயங்களில் நீங்கள் ஆண் என்பதை மறந்து நீங்கள் வெறுப்பதை செய்ய வைப்பார்

சில சமயங்களில் நீங்கள் ஆண் என்பதை மறந்து நீங்கள் வெறுப்பதை செய்ய வைப்பார்

நீங்கள் அவருக்கு உயிர் தோழன் என்பதால் அவருடன் ஷாப்பிங் சென்று, மொத்த மாலையும் விலைக்கு வாங்கி முடிக்கும் வரை நீங்கள் 2 மணிநேரம் காத்திருக்க வேண்டுமா என்ன? அதேப்போல் அவருடைய வரலாற்று கதைகளை கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் கேட்க விரும்பாத விஷயங்களைப் பற்றி சளைக்காமல் பேசுவார். நேஹா சமீராவிடம் என்ன சொன்னாள், ரோஹித்துடன் ரியா முதல் முறை டேட்டிங் சென்ற போது என்ன ஆடை அணிந்திருந்தாள் போன்ற ஊர் புரணிகளை கேட்கவும் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

உங்கள் ஆண் நண்பன் உங்கள் தோழியுடன் சேர விரும்புவது

உங்கள் ஆண் நண்பன் உங்கள் தோழியுடன் சேர விரும்புவது

நீங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்பதை ஒரு வழியாக நம்ப வைத்து விட்டீர்கள் என்றால், உங்கள் உயிர் தோழியிடம் சேர்த்து வைக்க சொல்லி உங்கள் ஆண் நண்பர்கள் நச்சரிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள் உயிர் தோழியுடன் டேட்டிங் செல்ல உங்களை பயன்படுத்த துடிப்பார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்களுக்கு உதவவில்லை என்றால், அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கி விடுவார்கள்.

தோழி அருகில் இருக்கும் போது சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமா என்ன?

தோழி அருகில் இருக்கும் போது சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமா என்ன?

கடும் குளிர் காலத்தில் குளிக்கவில்லை என்றால் தான் என்ன ஆகி விடும்? ஆனால் உங்கள் உயிர் தோழி அப்படி இல்லாமல் இருக்கலாம். உங்கள் அறைக்குள் திடீரென அவர் நுழையலாம். அது தெரியாமால் நீங்கள் பிறந்த மேனியாக படுத்திருக்கலாம் அல்லது முந்தைய நாள் உணவின் நாற்றம் வீசிக் கொண்டிருக்கலாம். உங்கள் சுதந்திரம் இனி கேள்விக் குறியே!

உங்களை சிக்கலில் மாட்டி விடுவார்

உங்களை சிக்கலில் மாட்டி விடுவார்

எங்கு எப்போது என்றெல்லாம் கவலையில்லை, நட்பில் நீங்கள் பெரியாளாக பார்க்கப்படுவீர்கள். அவள் சண்டையை ஆரம்பித்தாலும், நீங்கள் தான் அவரை சாந்தப்படுத்த வேண்டும். அவரை ரெயில் அல்லது பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வருதல், கூட்டத்தில் பாதுகாப்பு அளித்தல், பப்பில் பீர் வாங்கிக் கொடுத்தல் என ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போது நீங்கள் செய்யும் அனைத்தையும் உயிர் தோழிக்கு செய்ய வேண்டி வரும். அவர் உயிர் தோழி என்ற ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் செய்ய தயங்க மாட்டீர்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இது எரிச்சலை அளித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Problems Every Guy Faces If His Best Friend Is A Girl

Having a girl as your best friend is a fantastic thing to happen to any guy. They are super fun, they are caring, they understand you better, and you get the best dating advice ever. But even some problems every guy faces if his best friend is a girl. Take a look...
Desktop Bottom Promotion