Latest Updates
-
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
உங்க லவ்வர் வெறும் இச்சைக்காக தான் உங்ககிட்ட பழகுறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா!!!
தற்போதைய காலக்கட்டத்தில் காதல் என்ற முலாம் பூசப்பட்ட இச்சை உறவினுள் தான் பல காதல் ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பலர் தங்களை தாங்களே அது காதல் தான் என நம்பி ஏமாற்றிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலும் ஒரு காதல் ஜோடியில் இருவருமே காமத்தை மட்டுமே எதிர்நோக்கி இருப்பவர்களாக இருக்கமாட்டார்கள். ஒருவர் உண்மையாகவும், மற்றொருவர் இச்சையின் பசிக்காகவும் பழகுபவராக இருப்பார்கள்.
காதலை உதறி செல்ல, இவர்கள் கூறும் லொட்டு லொசுக்கு காரணங்கள்!!!
எதை வைத்து உங்களது காதல் துணை உங்களிடம் வெறும் உடல் ருசியை மட்டும் எதிர்பார்க்கிறார் என நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும்? பெரும்பாலும் அவர்களது காதல் வார்த்தைகளும், உருகும் குணமும் உங்களை மெய்மறக்க செய்துவிடும். ஆனால், நீங்கள் தனிமையில் இந்த விஷயங்களை நன்றாக யோசித்து பார்த்தால், அவர்கள் உங்களிடம் இச்சையை மட்டும் தான் எதிர்பார்க்கிறார் என சுலபாமாக தெரிந்துக் கொள்ளலாம்...

வீடு
உங்களை காண பெரும்பாலும் இவர்கள் தேர்வு செய்யும் இடம் வீடு அல்லது ஒதுக்குப்புற இடங்களாக இருக்கும். கேட்டால் தனிமையில் நேரம் செலவழிக்க விரும்புவதாக கூறுவர்.

நண்பர்கள்
ஒருவேளை உங்களை நேர்மையாக காதலிப்பவராக இருந்தால், முதலில் அவர்களது நட்பு வட்டாரத்திற்கு அறிமுகம் செய்து வைப்பார்கள். உங்களை அவர்களது நண்பர்களிடம் இருந்து விலகி, மறைத்து சந்திப்பர்வராக இருந்தால், அவர் உங்களை இச்சைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என தெரிந்துக் கொள்ளுங்கள்.

சந்திப்புகள் குறையும்
உங்களை சந்திப்பதே குறைவாக இருக்கும். அந்த நேரத்திலும் மிகவும் குறைவான நேரம் மட்டுமே உங்களோடு இருப்பார்கள். பரிசுகள் தந்து கிரங்கடித்தாலும். அவர்கள் வேறு எங்கோ மற்றொருவரை சந்திக்க துரிதமாக இருக்கிறார் என்பதே மெய் பொருள்.

அனுதாபம்
உங்களின் உடல் நெருக்கத்தை வேண்டி அடிக்கடி அனுதாபமாக பேசுவார்கள். பெரும்பாலான காதலர்கள் இச்சைக்கான முதல் அடியாக எடுத்து வைப்பதே இந்த அனுதாப அலை முறைதான்.

இரவு நேர உடையாடல்கள்
மற்ற நேரங்களை விட இரவு நேரங்களில் மட்டுமே உரையாட விரும்புவார்கள். பெரும்பாலான நேரங்களில் படுக்கை விஷயங்கள், குழந்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். இவை எல்லாம் அவர்கள் உங்களிடம் இச்சையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.



Click it and Unblock the Notifications
