Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
வயதாக, வயதாக ஆண்களின் பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்கள்!!!
மனித உடலானது ஓர் புரியாத புதிர் என்று தான் கூற வேண்டும். மனிதன் கண்டறியும் கருவிகள் நாளாக, நாளாக, பழுதாகி போகும். ஆனால், மனிதனின் இல்லற வாழ்க்கை நாளாக, நாளாக தான் வலுவாகுமாம். காரணம் மன நிறைவும், நிம்மதியும் என்று கூறப்படுகிறது.
பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!
ஆம், இது உண்மை தான். "பேராசை பெரு நஷ்டம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, நமது சந்தோசத்தையும், நிம்மதியையும் பூர்த்தி செய்வது நமது ஆசையின் அளவில் தான் இருக்கிறது. வயதாகும் போது இல்லறத்தில் உடலின் வேகம் குறையலாம், ஆனால் மனதின் வேகம் அப்போது தான் வேகமெடுக்க துவங்கும்.
காதலிக்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்!!!
இனி, வயதாக, வயதாக ஆண்களின் பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்....

மனநிறைவு
இல்லறத்தின் ஆரம்ப நாட்களில், எத்தனை முறை கிடைத்தாலும் மீண்டும் வேண்டும் என்ற வேட்கை மட்டுமே இருக்கும். இதுவே, நடுவயதில் உடலை தாண்டி மனதின் ஆசை சார்ந்து உடலுறவில் ஈடுபடுதல் தான் அதிக மனநிறைவை தருகிறதாம்.

உங்கள் துணைக்கும் தெரிந்திருக்கும்
ஆரம்ப காலத்தில், பெண் துணைக்கு உடலுறவு சார்ந்து பெரிதாக ஏதும் தெரிந்திருக்காது. இதனால், உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் பள்ளியறை, வகுப்பறை ஆகியிருக்கும். ஆனால், உங்கள் நடுவயதில் இந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என உங்களுக்கும் தெரியும், உங்கள் துணைக்கும் தெரியும். உண்மையில் நாற்பது வயதில் தான் ஆண், பெண் இருவரும் முழுமையான உடலுறவில் சுகம் காண்கின்றனர் என கூறப்படுகிறது.

மகிழ்ச்சியை அதிகரிக்கும்
ஓர் ஆய்வில், பல வருடங்களாக நீங்கள் உங்கள் துணையோடு (ஒரே நபருடன்) உடலுறவில் ஈடுபடுவது, மகிழ்ச்சியை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இன்னுமொரு அறிவியல் காரணமும் இருக்கிறது. அதற்கு இந்த கட்டுரையை படிக்கவும்.. விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!!!

கலவையான அனுபவம்
ஆரம்ப காலங்களில் உடல் சார்ந்த ஆசைகள் மட்டுமே நிறைந்திருக்கும். அழகின் மீது கொஞ்சம் அதிகமான ஈடுபாடுடன் உறவில் ஈடுபட்டதால் மனம் சார்ந்த விஷயங்கள் கொஞ்சம் விலகியிருந்திருக்கும். ஆனால், நடுவயதில் உடலுறவில் ஈடுபடும் போது, அழகு விலகி, மனம் நெருங்கியிருக்கும். இது, ஆண், பெண் இருவருக்கும் உடலுறவில் வேறு விதமான இன்பத்தை அளிக்கும்.

இடுப்பின் வலுக் குறைவால் இல்லறம் பாதிக்கப்படும்
வயதாக, வயதாக, நாற்பதை தாண்டும் போது, பலருக்கு இடுப்பு வலி போன்றவை ஏற்பட ஆரம்பிக்கும். இது, முழுமையான இல்லற வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என கூறப்படுகிறது. இடுப்பு பகுதியில், தசை வலுக் குறைவு, இரத்த ஓட்டம் வேகத்தில் குறைபாடு போன்றவை உணர்வு ரீதியில் குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே, முப்பது வயதில் இருந்தே, யோகா அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

தூக்கமின்மை
ஓயாத வேலை, மன அழுத்தம் போன்றவை உடல் சோர்வையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்தும். மற்றும் வயதாக, வயதாக நிம்மதியான உறக்கம் கிடைப்பது அவரவர் பெற்ற வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், தூக்கமின்மை உடலுறவு வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்தும்.

பெண்கள் உச்சம் காண நேரமாகும்
வயது அதிகரிக்கும் போது, பெண்களுக்கு உடலுறவில் உச்சம் காண நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில், சில ஆண்கள், தாங்கள் முழுமையான இன்பத்தை அனுபவிக்க இது தடையாக இருப்பதாய் நினைக்கின்றனர்.

பெண்களுக்கு வேகம்
20வது வயதில் இருந்ததை விட 30, 40-களில் தான் பெண்கள் உடலுறவில் அதிகம் நாட்டமாக இருப்பார்களாம். பெண்களுக்கு வயதாக, வயதாக தான் உடலுறவில் நாட்டம் அதிகரிக்கிறது என உலகம் முழுதிலும் நடத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரிவித்திருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications