Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
காதல் முறிஞ்சு போச்சா?.. வாய் விட்டு அழுங்க.. மீண்டு வரலாம்!
இந்த உலகில் காதல் செய்பவர்கள் அனைவருமே ஒன்று சேர்வதில்லை. பெரும்பாலானோர் உயிருக்கு உயிராக காதலித்த பின்னர், பிரிவையே சந்திக்கின்றனர். இப்படி உயிருக்கு உயிராக காதலித்தவரை மறப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நிறைய மக்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால், தன்னம்பிக்கையை இழந்து வாழ்க்கையே முடிந்துவிட்டது போல், சரியாக சாப்பிடாமல், எதையோ யோசித்துக் கொண்டே வானத்தைப் பார்த்தவாறு இருப்பார்கள். இப்படியெல்லாம் இருப்பதால் மட்டும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
எனவே காதல் தோல்வி அடைந்தால், தன்னம்பிக்கையை கைவிடாமல், இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் வாழும் வாழ்க்கையை சந்தோஷமான பாதையில் எடுத்துச் செல்ல முயல வேண்டும். அதற்கு தனியாகவும் முயற்சிக்கலாம் அல்லது உடன் நண்பர்களை சேர்த்துக் கொண்டு முயற்சிக்கலாம்.
இப்போது காதல் தோல்வி அல்லது முறிவு ஏற்பட்டால், அதன் தாக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான சில வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு, அதனை செய்து வாருங்கள். இதனால் காதலித்தவரை முற்றிலும் மறக்க முடியாது. இருப்பினும், அதனால் ஏற்பட்ட வலிக்கு நிவாரணம் கிடைக்கலாம்.

டயட் பின்பற்றலாம்
உடல் எடை அதிகமாக இருந்தால், அதனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு நல்ல ஆரோக்கியமான டயட் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்
எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மை விட்டு போகாதவர்கள் தான் நண்பர்கள். அத்தகைய நண்பர்களுடன் இருந்தால், சந்தோஷத்தைத் தவிர, எந்த ஒரு கஷ்டமும் நம்மை அண்டாது. ஆகவே நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.

உடற்பயிற்சி
காதல் முறிவினால் ஏற்பட்ட வலியில் இருந்து மீள்வதற்கு உடற்பயிற்சி கூட உதவியாக இருக்கும். ஆகவே தினமும் மனதை அமைதிப்படுத்தும் வகையிலும், கவனத்தை வேறு திசைக்கு திருப்பாத வகையிலும் உடற்பயிற்சியை செய்து வரலாம்.

தலையணை
நண்பர்களுக்கு அடுத்தப்படியாக ஆறுதலாக இருப்பது தலையணை தான். ஆகவே எப்போதெல்லாம் தனியாக இருப்பது போல் உணர்கிறீர்களோ, அப்போது தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினால், மனதிற்கு இதமாக இருக்கும்.

வாய் விட்டு அழலாம்
மனதில் இருக்கும் பாரத்தை இறக்க வேண்டுமானால், மனம் விட்டு அழ வேண்டும். இப்படி மனம் விட்டு சத்தமாக அழும் போது, மனதில் உள்ள கஷ்டம் நிச்சயம் போய்விடும். அதனால் தான் அனைவரும், எந்த ஒரு சோகமான செய்திக்கும் அழுகிறார்கள்.

அழகை மெருகேற்றலாம்
காதலில் விழுவதற்கு முன், மற்றவர்களை தம் அழகால் மயக்க வேண்டுமென்று எப்படியெல்லாம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம். ஆனால் அதுவே காதலி/காதலன் கிடைத்துவிட்டால், அழகைப் பராமரிப்பதை விட்டுவிடுவோம். ஆகவே காதல் முறிவு ஏற்பட்டால், சோர்ந்து இல்லாமல், மீண்டும் உங்களை அழகுப்படுத்த ஆரம்பித்து, மற்றவர்கள் முன்பு சந்தோஷமாக இருந்து காண்பியுங்கள்.

புத்தகம் படிக்கலாம்
புத்தகம் படிப்பது எப்போதும் ஒருவித ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே மன தைரியத்தை ஊக்குவிக்கும் அல்லது தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலான நாவல்களை வாங்கி படியுங்கள்.

சுற்றுலா செல்லலாம்
மனதை சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை விட சிறந்த செயல் வேறொன்றும் இருக்க முடியாது. ஆகவே நண்பர்களுடன் மனதிற்கு அமைதியைத் தரும் இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்.

குறிப்பு
எப்போதும் காதல் முறிவு ஏற்பட்டால், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், இனிமேல் தான் வாழ்க்கையே உள்ளது என்று எண்ணி தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால், காதல் முறிவின் வலியில் இருந்து எளிதில் மீள முடியும்.



Click it and Unblock the Notifications