Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ஒன்-சைடு காதலால் கஷ்டப்படுறீங்களா? அப்ப இத பண்ணுங்க... அதிலிருந்து ஈஸியா வெளிய வந்திடலாம்!
One-Sided Relationship In Tamil: 'காதல்' அனைவரையும் ஆட்கொள்ளும் ஓர் அற்புதமான உணர்வு. எல்லாரிடத்திலும் காதல் ஆதாவது அன்பு இருக்கிறது. அந்த வகையில், காதலிக்காத நபர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். உலகில் பல ஆண்டுகளாக ஒன்-சைடு காதலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
ஒன்-சைடு காதல் உணர்வு மற்றும் வலி என்பது என்பது வேறுமாதியானது. இந்த உறவைப் பற்றி பல படங்களும், வசனங்களும் அதிகமாக வந்துள்ளது. காதலை சொல்லாமல் இருப்பது ஒரு ரகம், தன் காதலை சொல்லி ஏற்றுக்கொள்ளாத போதும் காதலிக்கும் நபர்கள் ஒரு ரகம். கொஞ்சம் வித்தியசமான உறவாக இருக்கும் ஒருதலைப்பட்ச உறவு மிகவும் சவாலானதாகவும் இருக்கலாம்.

ஒருதலைப்பட்ச உறவில் இருக்கும் உணர்வு மற்றும் வலி தங்களுக்கு பிடித்து இருப்பதாகாக் கூறிக்கொண்டு, பலர் அந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால், அந்த உணர்வு அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கலாம். உங்கள் மன ஆரோக்கியத்திற்காக அந்த உறவிலிருந்து முன்னேறுவது மிகவும் முக்கியம். அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
ஒருதலைப்பட்சமான உறவு போன்ற கோரப்படாத அன்பை பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் உங்களை இழந்துவிடுவீர்கள். அந்த உறவிலிருந்து முன்னேற வேண்டிய இடத்தில் இருந்தால், அதைச் செய்வதற்கான வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உணர்வுகளை அங்கீகரிக்கவும்
முதலில் உங்கள் உணர்வுகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். உங்கள் உணர்வுகளை அங்கீகரிப்பதும், ஒன்-சைடு உறவு உங்களுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்வதும் மிக முக்கியம். உங்கள் உணர்ச்சிகளை அடக்க முயற்சிக்காதீர்கள்.
மாறாக அவற்றை உணரவும் செயலாக்கவும் உங்களை அனுமதியுங்கள். காலம் எல்லாவற்றுக்கும் நல்ல மருந்தாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு, ஒன்-சைடு உறவை விட்டு வெளியேறுங்கள்.
தொடர்பைத் துண்டிக்கவும்
நீங்கள் அன்பாக நேசித்த ஒருவருடன் முற்றிலுமாக தொடர்பை துண்டிப்பது என்பது உங்களுக்கு மிகவும் வேதனையானது மற்றும் கடினமானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் அதை நீங்கள் செய்ய வேண்டியது மிக அவசியம்.
நீங்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தால், அந்த உறவிலிருந்து வெளியேறாமல் அதிலேயே நீண்டகாலம் நீடிப்பீர்கள். மேலும் வாழ்க்கையில் முன்னேறுவதை நீங்களே கடினமாக்குகிறீர்கள். சமூக ஊடகங்களில் அவர்களைப் பின்தொடர்வதைத் தடுக்கவும், உங்கள் தொலைபேசியிலிருந்து அவர்களின் எண்ணை நீக்குவதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
சுய கவனிப்பில் கவனம் செலுத்துங்கள்
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் சுய கவனிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்யுங்கள், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், போதுமான ஓய்வெடுங்கள்.
உங்களை நன்றாக உணரவைக்கும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். மேலும், உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.
எல்லைகளை அமைக்கவும்
நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை தொடர்புகொள்ளவில்லை என்றாலும், அவர்களே தொடர்பு கொண்டாலும் சற்று தள்ளி இருங்கள். ஆம், உங்கள் முன்னாள் காதலர் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால், உங்களுக்கு அந்த உறவிலிருந்து வெளிவர நேரம் தேவை என்பதையும், தொடர்பு கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதையும் தெளிவாக்கக் கூற வேண்டும். எல்லைகளை அமைப்பது உங்கள் உணர்ச்சி நல்வாழ்வைப் பாதுகாக்க உதவும்.
பழி கூறுவதை விடுங்கள்
உறவின் பிரிவுக்கு அல்லது தோல்விக்கு உங்களை அல்லது உங்கள் முன்னாள் துணையை குறை கூறுவது எளிது. அதற்கு பதிலாக, அந்த உறவு நீடிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பழி சொல்வதை விட்டுவிடுங்கள். ஏன் அந்த உறவு செயல்படவில்லை என்பதை யோசிக்கலாம். அந்த தவறு வரும் காலங்களில் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆதரவை பெற்றுக்கொள்ளுங்கள்
இந்த நேரங்களில் பெரும்பாலும் தனியாக இருக்கத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால், அது தவறானது. தனியாக இருக்கும்போது, அதையே நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆதலால், உங்களை நேசிக்கும் மற்றும் ஆதரிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தயங்க வேண்டாம். இல்லையென்றால், உளவியல் நிபுணருடன் ஆலோசனை பெறலாம்.



Click it and Unblock the Notifications

