ஹர்திக் பாண்டியா - நடாஷா போல் விவாகரத்து வாங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்களின் லிஸ்ட் இதோ..!

ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் திருமண உறவில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவித்துவிட்டனர்... இதனால் தற்போது இது பெரும் பேசும் பொருளாக சமூக வலைத்தளங்களில் மாறியுள்ளது..

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை போல் இந்திய கிரிக்கெட் அணியில் திருமணமாகி விவாகரத்தான முன்னணி வீரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

here the list of top Indian cricketers who got divorced like hardic Pandya

ஹர்திக் பாண்டியா: ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் பிரிந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகவே வதந்தியாக அடிப்பட்டன. இந்நிலையில், இந்த ஜோடி தாங்கள் திருமண உறவில் இருந்து பிரிந்துவிட்டதாக நேற்று அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் அறிவித்தது. அத்னால் தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.. மகன் அகஸ்தியாவை இருவரும் தனித்தனியாக பார்த்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக்: இவர் முதலில் அவரது நீண்டகால தோழியான நிகிதா வஞ்சரா என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் நிகிதாவுக்கும், சக இந்திய வீரர் முரளி விஜய்க்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக வதந்திகள் பரவ, 2012ஆம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் - நிகிதா இடையே விவாகரத்தானது. பின்னர் 2015இல் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை தினேஷ் கார்த்திக் திருமணம் செய்துகொண்டார். 2021இல் இந்த ஜோடிக்கு கபீர் பல்லிகல் கார்த்திக், ஸியான் பல்லிகல் கார்த்திக் ஆகிய இரட்டை மகன்கள் பிறந்தனர்.

முகமது ஷமி: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆவார்.. இவர் மீது அவரின் மனைவி 2018இல் குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷமி மீது வழக்குப்பதிவான நிலையில், மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தும் வந்தார். 2018இல் இருந்து இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது..

ஷிகர் தவாண்: தவாண் தனது மனைவி ஆயீஷா முகர்ஜியை பேஸ்புக்கில் சந்தித்தார். இவருக்கும் இடையே காதல் மலர்ந்து 2012ஆம் ஆண்டில் திருமணமும் நடநந்தது. ஆயீஷாவுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது, அவருக்கு முதல் கணவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். ஷிகர் தவாண் - ஆயீஷா ஜோடிக்கு ஜோரவர் என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயீஷா ஆஸ்திரேலியாவிலேயே மகன் ஜோரவர் உடன் தங்கிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு 2023ஆம் ஆண்டில் விவாகரத்து ஆனது..

முகமது அசாருதீன்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நவ்ரீன் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஸாதுதீன் மற்றும் அயாசுதீன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த ஜோடிக்கு 1996ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. அதன் பின் பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானி என்பவருடன் திருமணமாகி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஜோடிக்கும் விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது...

வினோத் காம்ப்ளி: இந்திய அணியின் மூத்த வீரர் வினோத் காம்ப்ளி அவரது நீண்ட கால தோழி நோயெல்லா லூயிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின், மாடல் ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை திருமணம் செய்துகொண்ட காம்ப்ளி, அப்போது கிறிஸ்துவ மதம் தழுவினார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் முதலில் நம் கண்முன்னே வந்து நிற்பது சச்சினும் அவருடைய மனைவி அஞ்சலியும்தான் காராணம் அஞ்சலி தன்னைவிட 5 வயதில் மூத்தவர் என்பதையும் பொருள்படுத்திக் கொள்ளாமல் காதலித்து சச்சின் திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது வரை ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்...

இவர்களுக்கு அடுத்து தோனி மற்றும் சாக்ஷியின் ஜோடி அனைவராலும் ரசிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். பல நேரங்களில் தோனியின் முன்னேற்றத்திற்கும் சாக்ஷி உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களைப் போன்று அனைவராலும் ரசித்து பார்க்கக்கூடிய மற்றொரு ஜோடி யார் என்றால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிதான்.. ஏனென்றால் இவர்களின் காதல் கதை முழுக்க முழுக்க செய்திகளிலும் சமூக வலைதளத்திலும் பேசப்பட்டு பிறகு திருமணத்தில் முடிந்தது.. தற்போது அவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த வரிசையில் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா ஸ்டான்கோவிச் ஜோடிகள் அனைவராலும் ரசித்து பார்க்கக்கூடியவர்களாக இருந்தனர்.. ஆனால் தற்போது இருவரும் பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Story first published: Friday, July 19, 2024, 16:45 [IST]
Desktop Bottom Promotion