Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உங்க கணவன் மனைவி சண்டையை சரிசெஞ்சுக்கணுமா? இதோ 5 எளிய டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்கள்..!
ஒவ்வொரு வீட்டிலும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பலவிதமான சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை ரொம்ப நேரம் தொடரக்கூடாது. பொதுவான, ஒரு கருத்து உண்டு. கணவன் - மனைவிக்குள் சண்டை வந்தால் அது சில நிமிடங்களில் சரியாக வேண்டும்.. அப்படி நீடிக்கும் சண்டை சமாதானமாகி யாராவது ஒருவர் முதலில் பேச ஆரம்பித்து விட்டாலே போதும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்..
ஆனால் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில்தான் இருக்கிறது கணவன் மனைவி உறவுமுறை. கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான்.. ஆனால் சண்டை பெரிதாகி, இருவருக்குள்ளும் நிரந்தரப் பிரிவினைக்கு வழிவகுக்கக்கூடாது.. உடனுக்குடனே சமாதானம் ஆகிவிட வேண்டும்.. சண்டை வரும் போது, இருவர் அனுசரித்து போக வேண்டும். ஒருவரின் தவறுகளை அவர்கள் உணர வேண்டும். அது எப்படி சமாதனம் ஆவது எப்பது குறித்த சில எளிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. காணவனும் மனைவியும் தவறு செய்வது இயல்பு. யாரும் தவறு செய்வதிலிருந்து தப்ப முடியாது.. ஆனால், தவறு செய்துவிட்டு, தவறு செய்ததை ஒப்புக்கொள்ளாமல், சண்டையிடக்கூடாது.. உடனே தன் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்..
2. இருவரும் தப்பு செய்ததாக உணர்ந்தால் சண்டை சச்சரவுகள் வராது. ஆனால் எல்லா தவறுகளுக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சிலரைப் போலல்லாமல், மனிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்..
3. கணவன் மனைவிக்கு தனிப்பட்ட சுதந்திரம் அவசியம். யாருக்கும் தனிப்பட்ட உரிமை இல்லை. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு. தனிப்பட்ட சுதந்திரத்தை எல்லை மீறாமல் இருக்க வேண்டும். உங்கள் துணைக்கு தனிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அப்படி கொடுக்காவிட்டால் இருவருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
4. அப்போதுமே மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டாம். உங்கள் துணையைப் பற்றிய விஷயங்களை ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால், அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அப்போது இருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கு இடம் கிடைக்காது.. எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் அது பிழையாகவே பார்க்கப்படும். அதனால் ஆழமாக சிந்திக்காமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்...
5. இருவரும் சேர்ந்து வீட்டு வேலை செய்யும் போது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் வேலையை மட்டும் செய்வேன், வீட்டு வேலைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மனைவி, கணவன் கூறுவதால் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன. வீட்டு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்யும் போது நல்ல பந்தம் வலுப்பெறுகிறது.
6. கணவன் மனைவிக்கு திருமணம் ஆன பிறகு, மனைவி கணவனின் பெருமையையும், கணவன் மனைவியின் பெருமையையும் குறைக்க வேண்டும். உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட எனக்கு புத்திசாலித்தனம் அதிகம், உன் சம்பளத்தை விட என் மாத சம்பளம் அதிகம், உன் பேச்சை கேட்கவே மாட்டேன், போன்ற விஷயங்களை அறவே குறைக்க வேண்டும்.. நீங்கள் இருவரும் உங்கள் ஈகோவை குறைக்கும்போதுதான் உங்களுக்கிடையில் காதல் வளரும்.
7. 24 மணி நேர விதி என்பது ஒரு பயனுள்ள உத்தியாகும். இதில் kஅணவன் மனைவி இருவருரின் மனமும் அமைதி கொள்ளும் வரை மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை ஒத்திவைக்க வேண்டும்.. இதன் மூலம் இருவருக்கும் இடையே அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், செயலாக்கவும் போதுமான நேரம் கிடைக்கிறது. இதைப் பின்பற்றுவதன் மூலம் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கலாம். இதனால் இருவருக்கும் தெளிவான மனநிலையை ஏற்படுத்தி, பிரச்னையை புரிதலுடன் அணுக அனுமதித்து உணர்ச்சியின் தீவிரத்தை குறைக்கிறது.
8. மோதல்களின்போது உடல் ரீதியான தொடுகை, ஒரு பாதுகாப்பையும், நெருக்கத்தையும் தரும். மென்மையான தொடுதல்கள் அல்லது அணைப்புகள் உடலில் ஆக்ஸிடாஸின் வெளியீட்டை அதிகப்படுத்துகின்றன. கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியிலும் கூட, மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை அதிகரிப்பதிலும் பிரச்சனையை குறைக்கலாம்..
9. மோதல்களின்போது, 'நீ' என்ற வார்த்தைக்குப் பதிலாக, 'நான்' என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவதால், நேர்மறையான, அமைதியான உணர்வை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, 'நீ எப்போதும் என்னைக் கோபப்படுத்துகிறாய்' எனக் கூறுவதற்கு பதிலாக, 'இதெல்லாம் நடப்பதைப் பார்த்து நான் சங்கடப்படுகிறேன்' என சொல்லிப்பாருங்கள். இப்போது உங்கள் இணையை குற்றம் கூறியது போல் இருக்காது. இதுபோலவே எல்லா விஷயங்களிலும் நான் என்றே அதிமாக சொல்லுங்கள்..
10. இருவருக்கும் சண்டை வந்த பிறகு ஒரு நல்ல மெசேஜ் , அல்லது வீடியோவை அனுப்பி சமாதானம் செய்யலாம்.. இதேபோல், கடிதங்கள் எழுதுவதன் மூலம் மோதல்களின்போது தங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுக்கோப்பாக மற்றும் சிந்தனைப்பூர்வமாக வெளிப்படுத்த முடியும்.



Click it and Unblock the Notifications